search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயிர்ந்துள்ளது. #Indonesia #earthquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5-ந்தேதி 6.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணி இன்னும் முடியவில்லை. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆயிரம் பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். #Indonesia #earthquake
    இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. #Earthquake
    ஜகார்த்தா:

    17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

    இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது. 

    கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.

    கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #Earthquake
    இந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று 7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Earthquake
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. #Earthquake
    இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. #LombokEarthQuake
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, நேற்று அதிகாலை அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150க்கு மேற்பட்டோர் 
    படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  #LombokEarthQuake
    இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே இன்று அதிகாலையில் ரிக்டர் 6.4 அளவில் ஏற்பட்ட திடீரென நிலநடுக்கத்தால் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #LombokEarthQuake
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.



    இந்த நிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னரே பலி எண்ணிக்கை குறித்து துல்லியமாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 
    இந்தோனேசியாவில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை இழுத்து சென்றுவிட்டது. அவரை தேடும் பணி நடந்தது. பல நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. கடைசி வரை உடலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு தான் இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

    இதை அவரது தந்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து அவருக்கு இவ்வாறு கனவு வந்தது. இதனால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர்.

    நீண்ட நேரம் தேடிய நிலையில் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால், பேசும் நிலையில் இல்லை. சில நாட்களில் பேச்சு வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

    18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாக இருக்கிறது. அவரிடம் ஏதோ விசித்திர சக்தி இருக்கிறது. அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    ஆனால், சிலர் சுனாரிசின் குடும்பத்தினர் நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தோனேசியாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை காணிக்கை செலுத்தும் விநோத விழாவை இந்தோனேசியாவின் பழங்குடி மக்கள் கொண்டாடுகின்றனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம். அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர். ஒரு வருடத்தில் சராசரியாக 3 கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று தீவுகளை சுற்றி பார்க்கிறார்கள்.

    அவற்றில் மவுண்ட் பரோமா என்ற எரிமலையில் ஜூலை மாதம் வினோதமான திருவிழா நடக்கிறது. அப்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி நின்று வழிபாடு நடத்துகிறார்கள்.

    இந்தோனேசியாவின் ரோரோ ஆண்டங் என்ற மன்னன் வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்டான். கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்ற அவன் இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்தான்.


    அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் இன பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    பயிர்கள், பழங்கள், காசு என வித்தியாசமான காணிக்கைகள் வழங்கப்படுகிறது. அதே போன்று ஆடு, மாடு, கோழி போன்ற உயிருள்ள பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மத குருவுக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் தீர்ப்பு அளித்தது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா. அங்கு 2016-ம் ஆண்டு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டில் முதன்முதலாக நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் இதுதான்.

    தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அந்த தாக்குதலில் 4 அப்பாவி மக்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்படுத்தியதாக அமன் அபுர்ரகுமான் (வயது 46) என்ற மத குரு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 2010-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்தாலும், சிறைக்குள் இருந்துகொண்டு இந்த தாக்குதலுக்கு சதி செய்தார் என்று கூறப்பட்டது.

    இது தொடர்பான வழக்கை ஜகார்த்தாவில் உள்ள கோர்ட்டு விசாரித்தது. விசாரணையின்போது, அமன் அபுர்ரகுமான், தன்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதி குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய நீதிபதி அகமது ஜைனி அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 
    இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை 180 என அந்நாட்டின் மீட்பு குழு தெரிவித்துள்ளது. #boataccident #Indonesia
    ஜகர்டா:

    இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் 3 நாட்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீட்பு படையினர் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் படகில் 180 மாயமானதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாயமானோர் 180 பேர் என நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து 3 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    படகில் 60 நபர்களை ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுமத்ரா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அளவிலான ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில், நீர் மூழ்கி கப்பல்களும், நீர் மூழ்கி வீரர்களும், நீருக்கு அடியில் இயங்க கூடிய ட்ரோன்களும் ஈடுபட்டிருப்பதாக தேசிய மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்தோனேசியாவின் மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான தோபா ஏரியில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர் கதையாகி வருகின்றன. #boataccident #indonesia
    இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #modimeetsMahathir
    கோலாலம்பூர்:

    இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். #modimeetsMahathir
    இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. #PMModi #ModiinIndonesia #kiteexhibition #Modiplayingkite

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார். 

    பின்னர், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.



    இந்நிலையில், ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபருடன் பட்டம் விட்டு விளையாடி உள்ளார். அந்த படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #PMModi #ModiinIndonesia #kiteexhibition #Modiplayingkite
    5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தார். #PMModithreenationtour #ModiinIndonesia #PMModi

    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார். 

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    நாளை இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.

    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #ModiinIndonesia #PMModi
    ×