என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேவேகவுடா"
ஹாசன் டவுன் சென்னப்பட்டணா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நானும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ விடமாட்டோம். எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. விவசாயிகளின் கடன், கூடிய விரைவில் படிபடியாக தள்ளுபடி செய்யப்படும்.
பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறார். அவைதான் முக்கியம் என்று கூறுகிறார். அவர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் 56 வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்து விட்டது ஹாசன் மக்கள் தான்.
ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். இந்த கட்சி ஒன்றும் எனது சொத்து இல்லை, இது அனைவருக்கும் பொதுவான கட்சி. குமாரசாமி முதல்-மந்திரி ஆன பின்பு தான் கர்நாடகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் சிறிய, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தான் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும். அதிகமாக அரசு பள்ளிகள் திறக்கப்படும். ஹாசனில் இருந்து பேலூருக்கு விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட உள்ளது. அதை மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் என பங்கிட்டுக் கொள்ளும்’’ என்று கூறினார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் ரபேல் விமான விவாதத்தில் சிறப்பாக தனது கருத்துக்களை எடுத்துரைத்து வாதிட்டார். ஆனால் இது பிரதமர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு.
இந்த விஷயத்தில் எனது கருத்து என்னவென்றால் பிரதமரோ அல்லது வேறு தலைவர்களோ யார் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதோ? அவர் தான் பதில் அளித்து இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் பாராளுமன்றத்தில் பங்கேற்று பதில் அளித்து இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க மறுப்பது ஏன்? அதிலிருந்து தப்பிக்க ஏன் முயற்சிக்கிறார். அவர் நேரடியாக பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் இருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தனது விளக்கத்தை சொல்வதற்கு மோடி டி.வி. பேட்டியை பயன்படுத்தி இருக்கிறார். இது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தில் எதிர்க் கட்சிகளின் கேள்விகளை எதிர்கொண்டு அதற்கு பதில் அளித்து இருக்க வேண்டும் என்றார். #DeveGowda #pmmodi #Rafael #nirmalasitharaman
பெங்களூர்:
கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக ஜே.டி.எஸ். கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசுக்கு ஜே.டி.எஸ். கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும்.
எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றாலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #devegowda #Congress
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளால் தொய்வடைந்த கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் 3-ம்தேதி முடிவடைந்து, சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. 5900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த பாலம் திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாதது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பங்கேற்றார். அப்போது அவரை சந்தித்த நிருபர்கள், ‘‘உங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட பாலம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லையா?’’ என்று கேட்டனர்.
இதற்கு படுவேகமாகவும் வேதனையாகவும் பதிலளித்த தேவேகவுடா, ‘‘அட ராமா! என்னை யார் இப்போது நினைவில் வைக்கப்போகிறார்கள். சில நாளிதழ்களாவது இதை சுட்டிக்காட்டி இருக்கலாம். நான் பிரதமாரக இருந்தபோது அடிக்கல் நாட்டிய இந்த பாலத்துக்கு அப்போதே 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி இருந்தேன். இன்று மக்களும் என்னை மறந்து விட்டார்கள்’’ என்று குறிப்பிட்டார்.-
சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது பேரனை நிறுத்த மாட்டோம். உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்தே இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது.
காங்கிரசுடன் ஆலோசித்து பல்லாரி தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்வோம். சிவமொக்காவில் மது பங்காரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் ஏற்க மறுத்தால், வேறு வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்துவோம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #MandyaConstituency
டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியின் பயனை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை.
கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் வெற்றி பெறுவோம். கடன் தள்ளுபடி விஷயத்தில் வெளியாகும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்பக் கூடாது. விவசாயிகள் சரியான தகவல்களை வழங்கினால், அதன் அடிப்படையில் கடன் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் பயன் அடைவது தடுக்கப்படும்.
தனியார் கடன் தள்ளுபடிக்கான சட்ட மசோதாவில் 2 சந்தேகங்களை மத்திய அரசு கேட்டது. அவற்றுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இந்த சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். கடன் தள்ளுபடியின் பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். #Kumarasamy
பெங்களூரு :
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சித்தராமையாவும், நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அவர் காங்கிரசில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டணி ஆட்சியை காப்பது எனது பொறுப்பு என்று குமாரசாமியிடம் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.
ஹாசன் மாவட்ட வளர்ச்சி குறித்து எச்.டி.ரேவண்ணா கனவு வைத்துள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாசனை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. அப்போது நான் ஹாசனில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சில முடிவுகளை எடுத்தேன். அதற்கு குறுக்கீடுகள் வந்தன.
குமாரசாமியின் முதல்-மந்திரி நாற்காலி கெட்டியாக உள்ளது. குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது அவர் தினமும் 16 மணி நேரம் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். கூட்டணி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
கூட்டணி ஆட்சி மீது எடியூரப்பாவுக்கு கோபம் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். அவர் நினைத்தது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் கூட்டணி ஆட்சி மீது அவர் கோபத்தை காட்டுகிறார்.
மத்தியில் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து நான் பிரதமரானேன். அதன் பிறகு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் வாஜ்பாய் தனது கோபத்தை காட்டவில்லை. சபையை நடத்தவிடாமல் செய்யவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கண்ணியமாக நடந்து கொண்டார்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Siddaramaiah #DeveGowda
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா எகட்டி கிராமத்துக்கு நேற்றுவந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் சில மாவட்டங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள், பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்.
கர்நாடகத்தில் தற்போது நடந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #DeveGowda
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள இல்லத்தில் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் என்னை சந்தித்து விவாதித்தனர். அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் என்னிடம் இருந்து சில தகவல்களை பெற்று சென்றனர். சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) நடக்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுடன் செல்ல தயாராக இல்லை. அதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை. தரம்சிங் முதல்-மந்திரி ஆகும்போதே, அந்த பதவிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பெயரும் அடிபட்டது.
அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதனால் முதல்-மந்திரி பதவிக்கு தற்போது ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர் அடிபடுகிறது. இதில் என்ன தவறு உள்ளது?. ராமகிருஷ்ண ஹெக்டே மந்திரிசபையில் நானும், ஆர்.வி.தேஷ்பாண்டேவும் ஒன்றாக பணியாற்றினோம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #kumaraswamy
பெங்களூரு:
காங்கிரஸ் தலைவர் பி.எல்.சங்கர், நேரு பல்கலைக்கழக பேராசிரியர் வேலேரியன் ரோட்ரிக் ஆகியோர் எழுதிய இந்திய பாராளுமன்றம் என்ற ஆங்கில புத்தகத்தின் கன்னட மொழியாக்க புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது.
இதில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
நேரு இருந்த காலம் வரை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் அரசியல் அதிகாரம் பெற்ற கட்சியாக இருந்து வந்தது. 1960-ம் ஆண்டுகளில் மொழிவாரிய மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு பிராந்திய கட்சிகள் வளர ஆரம்பித்தன.
அவற்றின் எழுச்சியாலும், ஜாதி ரீதியாக கட்சிகள் வளர்ச்சி பெற்றதாலும், காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழக்க தொடங்கியது. இது தொடர்ந்ததால் காங்கிரஸ் கட்சி பலவீனமான ஒன்றாக மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த நேரு வலுவான ஜனநாயக அடித் தளத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நேரு நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய ஜனநாயக நடைமுறையில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் ஜனநாயக அமைப்பை ஒருபோதும் மாற்ற முடியாது. ஜனநாயக நடைமுறைகள் என்பது ஒரு கட்சி பாராளுமன்றத்திலோ, சட்டசபையிலோ அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பதால் மட்டும் நடந்து விடாது. எதிர்க் கட்சிகள் அதில் முக்கிய பங்களிப்பு இருந்தால் தான் அது ஜனநாயகமாக இருக்க முடியும்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இதன் மூலம் தனி மாநில கோரிக்கைக்கான விஷ விதையை குமாரசாமியே விதைத்தார் என்பது தேவேகவுடாவுக்கு தெரியவில்லையா?. குமாரசாமி சென்னப்பட்டணாவில் பேசும்போது, சாதி மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்தீர்கள் என்று பேசினார். இதன்மூலம் தனிமாநில கோரிக்கைக்காக வடகர்நாடக மக்களை தூண்டிவிட்டதே முதல்-மந்திரி தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபற்றி தேவேகவுடாவுக்கு எதுவும் தெரியவில்லையா?.
வட கர்நாடகத்தில் இருந்து மாநில அரசுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது என்று குமாரசாமி பேசினார். அதுபற்றி தேவேகவுடா ஏன் எதுவும் பேசவில்லை. வட கர்நாடகத்தில் அமைதி குலைய குமாரசாமி தான் காரணம். அவருக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு தேவேகவுடா, என் மீது குறை கூறுவது சரியல்ல. தேவேகவுடா பொறுப்பு இல்லாமல் பேசுவதை கைவிட்டு கர்நாடகம் உடையாமல் இருக்க தனது மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்