search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்று அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் அமெரிக்காவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவரும் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக வந்திருக்கிறார். அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


    கேள்வி:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை சுயநல கூட்டணி என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளாரே.

    பதில்:- இதை சொல்வதற்கு முன்பு அவரது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் உள்ள தலைவர்களிடையேயும் நிலவும் பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டும்.

    எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்று மக்கள் சொல்வார்கள்.

    5 மாநில தேர்தலில் அடி பலமாக விழுந்ததால் அவர்கள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.

    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்பதை கேள்விப்பட்டேன். மாற்றம் வரும் பார்ப்போம்.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #Congress #Kushboo
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். #Kushboo #Congress
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் ஆதிலாபாத். நகரில் பிரசாரம் செய்தார். அப்போது குஷ்பு பேசியதாவது:-

    தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தால் ஐதராபாத் நகர் பெயரை பாக்யநகர் என்று மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    உலகம் முழுவதும் ஐதராபாத் பிரியாணி பிரசித்தி பெற்றது. பலர் இங்கு வரும்போதெல்லாம் ஐதராபாத் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிறார்கள். பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது. அதற்கு பதில் பாக்மதி பிரியாணிதான் கிடைக்கும். பா.ஜனதாவும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், ரகசிய கூட்டு வைத்து இருக்கிறார்கள்.



    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சிறுபான்மையினருக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் மக்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு பதில் பிரியாணி தான் கிடைக்கும். அதுவும் பாக்மதி பிரியாணிதான் கிடைக்கும். மோடி அரசு பா.ஜனதா கட்சியின் சுய விளம்பரத்துக்காக பொதுமக்கள் பணத்தில் ரூ.4,500 கோடி செலவழித்து உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #kushboo
    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Kushboo #ChandrashekarRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்பட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஐதராபாத் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரசேகரராவ் தன்னை நவாப் (ராஜா ) என்று நினைத்து செயல்படுகிறார். பல 100 கோடி மதிப்பில் வீட்டை கட்டி உள்ளார். அங்கு ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. அவரும், அவரது கட்சியும் கமி‌ஷன் மட்டுமே வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

     


    நாட்டிலேயே தலைமை செயலகத்துக்கு செல்லாமல் பண்ணை வீட்டிலேயே இருக்கும் ஒரே முதல்வர் சந்திரசேகரராவ்தான்.

    கடந்த தேர்தலில் சந்திர சேகரராவ் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அவற்றை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டு விட்டார். அவரது அரசாங்கம் நியாயமற்ற நெறிமுறைகளை கடைபிடித்தது.

    நக்சலைட்டு விவகாரத்தில் சரியாக கையாளவில்லை. போலி என்கவுண்டர் நடத்தியதற்கு சந்திர சேகரராவ் அரசாங்கமே பொறுப்பு. தெலுங்கானாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 பெண்களுக்கு போட்டியிட சீட் கொடுத்துள்ளது. ஆனால் சந்திரசேகராவ் கட்சி 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்துள்ளது. அவரது அரசு பெண்களுக்கு எதிராக உள்ளது.

    பெண்கள் வளர்ச்சி என்ற பெயரில் அவரது மகள் கவிதா வளர்ச்சி அடையவே திட்டங்களை கொண்டு வருகிறார். பாதுகாமா சரீஸ் என்ற பெயரில் ரூ.220 கோடி கொள்ளையடித்து உள்ளனர். ஒரு பெண் அமைச்சரை கூட நியமிக்காததற்கு சந்திர சேகரராவ் அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ChandrashekarRao

    ஏமாற்றும் கட்சியும், ஏமாற்றுகிற தலைவரும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள்வதாக குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi #ParliamentElection
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    மோடி அரசின் தவறான முடிவுகளால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதையும், மொத்த அதிகார மையமாக மோடி இருப்பதையும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    அதாவது நாடு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக எச்சரித்து இருக்கிறார். உலக அளவில் மிகச்சிறந்த பொருளாதார மேதை அவர். அதேபோல் மிகச்சிறந்த பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் ஆரம்பத்திலேயே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றின் எதிர்விளைவுகள் நாட்டை பாதிக்கும் என்று கூறினார்கள். ஆனால் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக நாட்டு மக்களை நசுக்கினார்.

    ரகுராம்ராஜன், மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தை விட மோடி, ஜெட்லி, அமித்ஷா எல்லாம் பொருளாதாரம் படித்த மேதைகளா?

    இந்த தீய சக்தி அழிக்கப்பட வேண்டும். திரும்பி வரக்கூடாது என்பதில் எல்லா கட்சிகளும் கவனமாக இருக்கின்றன. ஏமாற்றும் கட்சியும், ஏமாற்றுகிற தலைவரும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு வருகின்றன.

    பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் வராதா? நிலையான ஆட்சியை கொடுக்க முடியுமா? என்கிறீர்கள். முதலில் இந்த தீய ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும்.

    அதன்பிறகு தலைவர்கள் கூடி பேசி பிரதமரை தேர்வு செய்வார்கள். அது ஒரு பிரச்சனையே இல்லை. எங்களை பொறுத்தவரை ராகுல் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். கட்சி தொண்டர்களுக்கு இது இயல்பு தானே.


    அவசரப்பட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் மோடி எடுத்த நடவடிக்கையால் மக்களுக்குதான் பிரச்சனை. சிறு சிறு தொழில் செய்தவர்கள், ஓரளவு பொருளாதார வசதியுடன் இருந்தவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள். சாதாரண மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

    காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய உழைப்போம். அதிகமான வெற்றியை ஈட்டுவதன் மூலம் காங்கிரசாரின் எண்ணம் நிறைவேறும்.

    தமிழகத்தில் காங்கிரசுக்குள் நிலவும் கோஷ்டி பூசலால் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது. திருநாவுக்கரசர், இளங்கோவன் இடையேயான மோதல் பற்றி நான் பேசக்கூடாது. தமிழகத்திற்கு என்று பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் நியமித்துள்ளது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இங்குள்ள நிலைமையும், என்ன நடக்கிறது என்பதும் ராகுல்காந்திக்கு தெரியும். அவரே நேரடியாக முடிவு செய்வார்.

    தற்போது 5 மாநில தேர்தல்களில் தீவிரமாக இருப்பதால் வேறு எந்த பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தமாட்டார்கள். தேர்தல் முடிந்த பிறகு எல்லா பிரச்சனைகளுக்கும் ராகுல் தீர்வு காண்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Modi #ParliamentElection
    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். #Sarkar #Kushboo #Congress
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    இந்நிலையில் சர்காரில் சர்ச்சை காட்சிகளை நீக்குவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

    சர்காருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை கலாச்சாரம் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளதாகவும் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். #Sarkar #Kushboo #Congress
    பா.ஜனதா ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Congress #Kushboo

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் ஏ.ஐ.டி.யு.சி மகளிர் சங்க மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் தெரிவிக்க காத்திருக்க கூடாது. தயக்கம் இல்லாமல் உடனடியாக புகார் செய்ய முன்வர வேண்டும்.

    பாசிச பா.ஜனதா ஆட்சியின் தவறான கொள்கைகளால் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பணிபுரியும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

    மோடி ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது. மத்தியில் நடப்பது பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்களுக்கான ஆட்சி. பொதுமக்களுக்கான ஆட்சி இல்லை.


    சாதாரண விவசாயி வங்கியில் வாங்கிய கடனை கட்ட தவறினால் அவரது டிராக்டரை ஜப்தி செய்கிறார்கள். அவரையும் பிடித்து வழக்கு போடுகிறார்கள். ஆனால் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியை வங்கிகளில் கடன் பெற்றவர்கள் பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் வெறுப்பை ஓட்டாக்கி இந்த ஆட்சியை விரட்ட வேண்டும்.

    இங்கு ஏராளமான பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் பாதிப்பை நேரடியாக அனுபவிப்பவர்கள் நீங்கள். பெண்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

    ராகுல் தலைமையில் மக்களுக்கான ஆட்சி மத்தியில் அமையவும், பா.ஜனதாவின் அடிமை ஆட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவும் ஒன்றுபட்டு உழைப்போம்.

    இவ்வாறு குஷ்பு பேசினார். #Congress #Kushboo

    பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களால் ட்விட்டரில் பூதாகாரமாய் வெடித்திருக்கும் மீடூ விவகாரம் பற்றி நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #TimesUp #Kushboo
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி மீடூ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைகள், பாடகிகள் என்று திரைத்துறையில் உள்ள பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்து வருகிறார்கள்.

    கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மீடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.
    இந்த நிலையில், நடிகை குஷ்பு பாலியல் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, 

    40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றினேன். 

    என்று கூறியுள்ளார். #MeToo #TimesUp #Kushboo

    அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா? என்ற ரசிகரின் கேள்விக்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். #Kushboo #Rajinikanth
    குஷ்பு தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக இருந்து பிறகு 2010-ல் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். அந்த கட்சியில் முன்னணி பேச்சாளராக செயல்பட்ட அவர் 2014 பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார்.

    அதன்பிறகு தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் யார் என்பதில் சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளாகி அவரது வீட்டில் கல்வீச்சும் நடந்தது. இதனால் தி.மு.க.வை விட்டு விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போது அந்த கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். சமீபத்தில் காங்கிரசில் இருக்கும் நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் பரவின.



    இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததும் குஷ்பு அவரது கட்சியில் இணைந்து விடுவார் என்றும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி குஷ்புக்கு வழங்கப்படும் என்றும் பேச்சு அடிபட்டது. ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில்தான் குஷ்பு அறிமுகமானார். மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்தை அடிக்கடி பாராட்டியும் பேசி வருகிறார். இப்போது ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த குஷ்பு, “நான் காங்கிரஸ் கட்சியில் மனநிறைவோடு இருக்கிறேன்” என்று பதில் அளித்து இருக்கிறார். #Kushboo #Rajinikanth


    சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் சிம்பு தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்திற்கு இயைமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #STR #Simbu
    அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்' வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். அதேநேரத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக ஹிப்ஹாப் ஆதி, சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சுந்தர்.சியின் அரண்மனை 2, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களுக்கும் ஆதியே இசைமைத்திருந்தார். அதுமட்டுமின்றி ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு படத்தை சுந்தர்.சி தான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



    இந்த படம் தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. 

    இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா 2 ஆகிய படங்களிலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #AttarintikiDaredi

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு, அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் சிம்புவின் மாமியாராக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu
    சிம்பு தன்னை பற்றி தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்ற சபதம் எடுத்து, படங்களை தேர்வு செய்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் `மங்காத்தா' படத்தில் அஜித் நடித்தது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். நேற்று இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.

    இது பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் மாமியாராக நதியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தை சுந்தர்.சி இயக்குவதால், இந்த வேடத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.



    இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் சிம்பு நடிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `செக்கச்சிவந்த வானம்' செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது. #STR #Simbu #AttarintikiDaredi

    என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று கருணாநிதி மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காவேரி ஆஸ்பத்திரி சென்று கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.

    பின்னர் குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கோடிக்கணக்கான தமிழக மக்களும், தி.மு.க.வினரும் கருணாநிதி மீண்டும் உடல் நலம் பெற்று திரும்புவார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

    அவர் பூரண நலம் பெற்று திரும்புவார். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அவர் மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தியுள்ளார். #Congress #Khushboo
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    11. 15க்கு தொடங்கிய இந்த சந்திப்பு 11.45 வரை நேரம் நீண்டது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:-

    கே:- ராகுல் காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள்?

    ப:-ராகுல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம்.

    கே:-தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க அனுமதி மறுத்தது பற்றி?


    ப:-ஒரு துணை முதல்-அமைச்சர் நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதல்-அமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

    கே:-ஓ.பி.எஸ். அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

    ப:-இந்த வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

    கே:-ஓ.பி.எஸ். தம்பி சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகி உள்ளதே?

    ப:-அவசரம், முக்கியம் என்னும்போது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    கே:-ராகுல் பிரதம வேட்பாளர் பதவியை தியாகம் செய்ய துணிந்ததாக செய்தி வருகிறதே?

    ப:-காங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். சில சந்தர்ப்பங்களில் வலுவான கூட்டணி அமைய அது விட்டுக்கொடுக்கப்படலாம். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை.

    ஆனால் நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

    ப:-இதை நான் முடிவு செய்ய முடியாது. கருத்து சொல்லவும் முடியாது. கட்சி தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவர் தான் முடிவு செய்யவேண்டும்.

    கே:-தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா?

    ப:-அதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை.

    2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #RahulGandhi #OPS
    ×