search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னடைவு"

    கரூர் தொகுதியில் துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருக்கிறது.
    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றுள்ளார்.



    அதிமுக வேட்பாளரான துணை சபாநாயகர் எம். தம்பிதுரை 55491 வாக்குகளே பெற்றுள்ளார். ஜோதிமணி 79910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் 7724 வாக்குகள் பெற்றுள்ளது.
    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    ஐதராபாத் :

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.



    வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.

    காலை 10 மணி நிலவரப்படி 64 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார்.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார். காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
    ×