search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குச்சந்தை"

    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளைத் தாண்டி, பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 322 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள், முதலீட்டார்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது.

    காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.



    அதன்பின்னர் மேலும் எழுச்சி பெற்று, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 12000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆனது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது.

    யெஸ் பேங்க், இந்தஸ்இந்த் பேங்க், எல்அண்ட்டி, எஸ்பிஐ, ஐசிஐசிடி பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்டிஎப்சி ட்வின்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. வேதாந்தா, ஐடிசி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 14 காசுகள் உயர்ந்து, 69.51 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது. 
    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.

    சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
    ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Vedanta #LabourParty
    லண்டன்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.



    ‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.

    மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. #Vedanta #LabourParty
    ×