search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கிம்"

    சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.

    இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.

    1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

    அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.

    அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி 23-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். #PMModi #Sikkimairport
    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க அங்கு புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி திறந்து வைக்கிறார். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இங்கிருந்து வர்த்தகரீதியான விமானச் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #Sikkimairport

    சிக்கிம் மாநிலத்தின் நல்லெண்ண தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை நியமித்து அம்மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #ARRehman
    காங்டோக் :

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளதாக அம்மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பாட்டில் அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் முழுமையன இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம், அதன் சமூக பொருளாதார வளர்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளையும், மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுளார். இதற்கு ஊதியமாக பணம் ஏதும் அவர் பெறவில்லை என அம்மாநில கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த 18-ம் தேதி முதல் சிக்கிம்மில் தங்கியபடி அம்மாநிலத்தின் இயற்கை அழகினை பிரதிபலிக்கும் வகையில் ஆவணப்படம் ஒன்றையும் ரஹ்மான் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.  #ARRehman
    ×