search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். #sterlite #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு புற்றுநோயை வெகுமதியாக வழங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நாளையே(இன்று) அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக பட்டியலிட்டு தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றலாம். அதனடிப்படையில் புதிய மூடல் ஆணையை பிறப்பிக்கலாம். அதுதான் சட்டப்படி செல்லத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

    ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #sterlite #AnbumaniRamadoss
    வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். அவரது விளக்கத்தில் சட்டவல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் சட்டவல்லுனர்களுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    ரெயில் பயணத்தின் போதோ, இறங்கும்போதோ பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணத்தின் போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது பற்றியும் விசாரித்தனர்.

    1984-ம் ஆண்டு ரெயில்வே சட்டம் 124ஏ பிரிவின்படி ரெயில் முன் பாய்ந்து உயிர் இழந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது கிடையாது. ஆனால் சில ஐகோர்ட்டுகள் இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டன.

    இந்த முரண்பாடுகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. 124-வது பிரிவின் படியும், 124-ஏ பிரிவின் படியும் உயிரிழக்கும் ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமையாகும்.



    எனவே ரெயில் பயணத்தின்போதோ அல்லது ரெயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தற்போது ரெயில்வே சார்பில் இழப்பீடு தொகையாக ஆண்டுதோறும் ரூ.350 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடு கேட்டு 38,000 மனுக்கள் நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    ×