search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகம்"

    கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    பாராளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கர்நாடாகவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.வை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

    மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க பா.ஜ.க. டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.



    இதற்கிடையே, நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜ.க. முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. முதல் மந்திரியாக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
    கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமார்சாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் முதல் மந்திரி அமர்ந்துள்ள சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும் சாமானிய மக்களுக்கும், திருடர்களுக்கும் நேர்மையான மக்களுக்கும் இடையிலானது என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #AnilAmbani
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் சித்ரதுர்கா பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும், சாமானிய மக்களுக்கும் இடையிலானது. திருடர்களுக்கும் நேர்மையான மனிதர்களுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். உண்மைக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது.



    கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்ற அநியாய ஆட்சிக்கும், நியாய் என்ற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கும் இடையிலான தேர்தல் இதுவாகும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #AnilAmbani
    கர்நாடக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை கண்டித்து முதல் மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். கட்சி சார்பில் குமாரசாமி முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார். 

    இதற்கிடையே, நுண்ணுயிர் பாசனத்துறை மந்திரி சிஎஸ் புட்டாராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.



    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் முன்னால் முதல் மந்திரி குமாரசாமி, துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மற்றும் ஜே.டி.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். #Kumaraswamy #PMModi #ITRaid
    கர்நாடகம் மாநிலத்தின் தார்வாட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. #DharwadBulidingCollapse
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

    கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதற்கிடையே, கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 6 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக தார்வாட் போலீசார் கூறுகையில், கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆனது. இடிபாடுகளில் சிக்கிய 55க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளோம். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றனர். #DharwadBulidingCollapse
    கர்நாடகம் மாநிலத்தின் தார்வாட் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய பலரை தேடி வருகின்றனர். #DharwadBulidingCollapse
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

    கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



    இந்நிலையில், கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், இடிபாடுகளில் சிக்கிய 40க்கு மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    தார்வாட் கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி குமாரசாமி டுவிட்டரில் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என பதிவிட்டுள்ளார். #DharwadBulidingCollapse
    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது. #ParliamentElection #Congress #JDS
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18, 23 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி உடன்பாடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக களமிறங்கி உள்ள்ன.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட இறுதிச்சுற்று பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே இன்று கையொப்பமானது. #ParliamentElection #Congress #JDS
    கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் உடனிருந்தார். #KarnatakaCongress #IndependentMLA
    எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தொடர்ந்து சதிசெய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.
     
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜ.க. காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரி குமாரசாமி சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



    இந்நிலையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

    முதல் மந்திரி குமாரசாமி கர்நாடக மாநிலம் தென்பகுதியில் அமைந்துள்ள புனிதத்தலமான தர்மஸ்தலாவுக்கு இன்று சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன். அந்த ஆடியோவில் எடியூரப்பாதான் பேசியுள்ளார். அவர் தான் பேசவில்லை, அது மிமிக்ரி என்பதை நிரூபிக்கட்டும். நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக பொறுப்பு வகித்து வந்தவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

    வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி நேற்று காலை 11.40 மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் சித்தகங்கா மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மந்திரி சதானந்தா கவுடா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, யோகா குரு ராம்தேவ் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஜீயர் சிவகுமார சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer 
    கர்நாடக அரசை கவிழ்க்கப் போவதில்லை என்பதால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை என மாநில பா.ஜ.க தலைவரான எடியூரப்பா தெரிவித்துள்ளார். #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்து வருபவர் எடியூரப்பா. இவர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டெல்லியில் இருந்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு திரும்பியுள்ளனர். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். 

    கர்நாடக அரசை சீர்குலைக்கும் எந்த வேலையிலும் நாங்கள் ஈடுபடப் போவதில்லை. எனவே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளோம் என தெரிவித்தார்.

    எடியூரப்பாவின் முடிவை வரவேற்கிறேன் என முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். #Yeddyurappa
    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #Congress #LegislaturePartyMeet #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சித்த ராமையா அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 18-ம் தேதி விதான் சவுதாவில் உள்ள கூட்ட அரங்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு சித்தராமையா முன்னிலை வகிக்கிறார் என தெரிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை நேற்று வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. #Congress #LegislaturePartyMeet #Siddaramaiah
    ×