search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ்."

    கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு தலச்சேரி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், தலச்சேரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த யாகூப் என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் படுகொலை செய்தது.

    இதுதொடர்பாக, பலரை கைது செய்து விசாரித்த போலீசார் தலச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.எல்.பைஜூ, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஷங்கரன் மாஸ்டர்(48), அவரது சகோதரர் மனோகரன்(42), விஜேஷ்(38), பிரகாஷன்(48), காவ்யேஷ்(40) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் வல்சன் தில்லேன்கேரி உள்பட இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டனர்.தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
    அயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. கவலை தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 
     
    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார். அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. வருத்தம் தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை பிரணாப் முகர்ஜி இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என ஷர்மிஸ்தா முகர்ஜி இன்று தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
    புதுடெல்லி:

    சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.

    இதற்கிடையே, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் ரவுத், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் முன்நிறுத்தும் என கருத்து தெரிவித்திருந்தார். 

    இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், சஞ்சய் ரவுத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக இன்று நேரடியாக பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற எனது தந்தை , இனி ஒருபோதும் தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
    ×