search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்ரன்"

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடித்து வருகிறார். #Rajini #Petta #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

    மேலும் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் கம்மட்டிப்பாடம்.



    இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.



    இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்கள் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டம். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. 

    சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - டி.இமான், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை - முத்துராஜ், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஆடை வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு - மாலா மன்யன், தயாரிப்பு - ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் - பொன்ராம்.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,

    “ படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 



    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் ” என்றார்.

    பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் - பாலசுப்ரமணியம் - விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்ததாக கலை இயக்குநர் தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

    படம் பற்றி கலை இயக்குநர் முத்துராஜ் பேசும்போது,

    "சீமராஜா படத்தில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸ்-ஆப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.



    பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது" என்றார். #Seemaraja #Sivakarthikeyan

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு “பேட்ட” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

    ‘பேட்ட’ படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது. அதன்பின் கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி பங்கேற்று நடித்தார்.

    இதையடுத்து அடுத்த கட்டமாக “பேட்ட” படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ரஜினி கடந்த 7-ந்தேதி சென்னையில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார். அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.

    லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அவரது பெயரை உச்சரித்து கோ‌ஷம் போட்டனர். அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.



    லக்னோவில் பேட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 500 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது.

    இதேபோல் வாரணாசி, சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 போலீஸ் காரர்களை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

    போலீசார், ரசிகர்களை ரஜினி அருகே செல்லவிடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. #Petta #Rajinikanth

    ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான் என்று கூறியிருக்கிறார். #Petta #KarthikSubbaraj #Rajini
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. மிகவும் கலர்புல்லாக வெளியான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. 



    இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி. அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்’ என்றார். #Rajinikanth165 #Rajinikanth #Petta
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படம் படைத்த முதல் சாதனை. #Rajinikanth165 #Rajinikanth #Petta
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் வெளியிட்ட சில விநாடிகளிலேயே சென்னை டிரெண்டிங்கிலும், இந்தியா டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது. #Rajinikanth165 #Rajinikanth #Petta
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. #Rajinikanth165 #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.

    அதன்படி சரியான 6 மணிக்கு ’பேட்ட’ என்ற தலைப்பும், மோஷன் போஸ்டரும் வெளியானது. இது ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


    பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj

    ‘சீமராஜா’ படப்பிடிப்பு குறித்து பேசிய சமந்தா, சிவகார்த்திகேயன் - சூரியை வீட்ல எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ என்று நினைத்து சிரிப்பேன் என்று கூறினார். #Seemaraja #Samantha
    சமந்தா திருமணத்துக்கு பின்னும் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சீமராஜா, யு டர்ன் என்று 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

    சீமராஜா படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன்.



    சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத் தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” என்று கூறி உள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

    டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை என்றார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    “சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலர் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது.



    அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 

    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை பார்க்க:


    சீமராஜா டிரைலர் பார்க்க:

    ×