search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரலை"

    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.



    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

    கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 



    கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

    யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

    இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
    விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர். #Maharashtra #CommitSuicide #Live #SocialMedia
    மும்பை:

    மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.

    அதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.

    அப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.

    அதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நீதிமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உள்ளது. #CourtProceedingsLive #SupremeCourt
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ ஆவணமாக பதிவு செய்யவும் உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

    ‘நேரடி ஒளிபரப்பு செய்வதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. முக்கியமான செயல்திட்டத்தை தொடங்குகிறோம். முதலில் அதை ஆரம்பித்து, அது எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #CourtProceedingsLive #SupremeCourt
    கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியதுபோல், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூத்த உறுப்பினர் இருக்கும்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த போபையாவை நியமித்ததற்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது.

    போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு மனு தாக்கல் செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    அதன்படி போபையா நியமனத்திற்கு எதிரான மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதில் மரபு மீறப்பட்டுள்ளதாகவும் அவர்போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்காலிக சபாநாயகராக போபையா நீடிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.



    மூத்த எம்எல்ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்? என நீதிபதி பாப்தே கேள்வி எழுப்பினார்.  அதேசமயம் போபையா இல்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யார் கண்காணிப்பார்கள்? வாக்கெடுப்பை ஒத்திவைக்க நேரிடும். சபை நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறுதற்கு சிறந்த வழி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை நேரலை செய்வதுதான் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து தீர்ப்பு அளித்த நீதிபதிகள், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்துசெய்ய மறுத்துவிட்டனர். அதேசமயம், சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    ×