search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்திதா"

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

    நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் தேவி 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். #Devi2 #Prabhudeva #Nandita
    `அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார்.

    முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை சரளாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தையும் இயக்குநர் விஜய் இயக்குகிறார். 

    இது தவிர வைபவ்வுக்கு ஜோடியாக `டாணா' என்ற படத்திலும் நந்திதா நடித்து வருகிறார். இது ஒரு பேண்டசி போலீஸ் படமாக உருவாகி வருகிறது. #Devi2 #Prabhudeva #Nandita

    தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நந்திதா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் கதாநாயகனுக்கு டீச்சராக மாறியிருக்கிறார். #Nandita
    நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த நிசார் சபி ‘7’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏழு முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் திரில்லர் கதையான இதில் நந்திதா ஸ்வேதா, ரெஜினா, புஜிதா பொன்னடா, திரிதா சவுத்ரி, ஹரிஷ், அதிதி, ஆர்யா மற்றும் வஞ்சகர் உலகம் படத்தில் நடிக்கும் அனிதா அம்புரோஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இவர்களுடன் நடிகர் ரகுமானும் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ஆர்.எக்ஸ்.100 படத்துக்கு இசையமைத்த சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார்.



    கன்னட நடிகையான நந்திதா நன்றாக தமிழ் பேச தெரிந்தவர். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிஸ் என்ற புதுமுகத்துக்கு தமிழ் பேச வரவில்லை. அவருக்கு நந்திதாவே டீச்சராக மாறி தமிழ் கற்று கொடுத்திருக்கிறார்.
    அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகை நந்திதா, தற்போது பள்ளியில் கர்ப்பமாகும் மாணவியாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். #Nandita
    அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து நடித்து வருகிறவர் நந்திதா ஸ்வேதா.

    சமீபத்தில் அவர் நடித்த அசுரகுலம் படம் வெளிவந்தது. தற்போது நந்திதா நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதை. நந்திதா இதில் பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.



    அவருடன் விஜய் வசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
    தமிழில் அட்டக்கத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா, சத்தமில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். #Nandita
    முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா’  என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கிலும் ‘வெற்றிகரமான நடிகை’ என்று பெயர் பெற்றிருக்கிறார். இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

    இது குறித்து நந்திதா பேசுகையில், ‘தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம்’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். தற்போது இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன். 



    இதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

    தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், ‘நர்மதா’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்’ என்றார்.
    கீதா ராஜ்புத் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாக இருக்கும் ‘நர்மதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் இருந்து தொடங்கி இருக்கிறது. #Narmatha
    ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி.சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குனராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

    படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.



    இயக்குனர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குனர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ×