search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னேரி"

    பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மொத்தம் 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டுரோட்டில் மது குடிக்க பணம் தராததால் பேரனே பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டு ரோட்டில் வசித்து வந்தவர் மணிமேகலை (வயது 70). இவருடன் மகளின் மகனான கமல் தங்கி இருந்து பொன்னேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்த கமல் மது குடிக்க பணம் கேட்டு மணிமேகலையுடன் தகராறு செய்தார். இதனை மணிமேகலை கண்டித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் மது குடித்து வந்த கமல் மீண்டும் பாட்டி மணிமேகலையிடம் தகராறு செய்தார். அப்போது அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மணிமேகலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கமலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர், 5 மாதத்துக்கு பிறகு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    வேலூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் பொன்னேரியை அடுத்த மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கவுத் என்பவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி விஜய் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோல் விஜய்யுடன் தங்கி இருந்து சுரேஷ் கவுத்தும் தலைமறைவாகி விட்டார். இதனால் விஜய் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. விஜய் பயன்படுத்திய செல்போனின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
    இதற்கிடையே விஜயின் செல்போன் எண்ணூர் அருகே பயன்படுத்துவது தெரிந்தது. இதனை வைத்து  அப்பகுதியில் தங்கி இருந்த சுரேஷ் கவுத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டிசம்பர் 15-ந் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் விஜயை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், உடலை வீட்டிலேயே புதைத்ததாகவும் சுரேஷ் கவுத் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று இரவு  அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த தாசில்தார் சுமதி முன்னிலையில் போலீசார் தோண்டியினர். அப்போது விஜயின் எலும்புக்கூடுகள் கிடைத்தது. அதனை பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் கவுத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை நடந்த 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் குற்றவாளி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    பொன்னேரி அருகே மணல் கடத்தல் டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கோகுல் (வயது 3½).

    இன்று அதிகாலை பாபுவின் தம்பி சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் கோகுலை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் கோகுல் பரிதாபமாக இறந்தான். சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரும்பேடு ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் முருகன் (34). அதே பகுதியில் கிழக்கு கடற்கரையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த கார் முருகன் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் போலீஸ் போல நடித்து செல்போன் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.

    இரவு 11.30 மணியளவில் காரில் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டில் சோதனை போட வேண்டும் என்றனர். உடனே புருசோத்தமன் வீட்டு கதவை திறந்தார். 5 பேரும் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த 3 செல்போன்களை எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் புருஷோத்தமனின் மகன் கார்த்திக் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து புருஷோத்தமன் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×