search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    கோவையில் வருகிற 21-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-

    எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து  தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.
    இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத் தக்கது.

    அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக  கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடைபெறுகிறது.
    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது-

    எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.

    கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.



    இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.

    ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.

    எனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகையில் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்றுமாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மறைமாவட்ட முதன்மை குருவும், திருவருட்பேரவை மாவட்ட துணைத்தலைவருமான ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். திருவருட்பேரவை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மறைமாவட்ட அதிபர் செபாஸ்டின்பெரியண்ணன், மறைமாவட்ட வேந்தர் ஜான்சக்கரியாஸ், திருவருட்பேரவை மாவட்ட செயலாளர் அமலதாஸ்ஜான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜோசப்மரியவியான்னி, மாவட்ட திருவருட்பேரவை இணைத்தலைவர் கோவிந்தராஜன், ஆலோசகர் கலந்தர் நைனார்முகமது, திருவருட்பேரவை உறுதிமொழிகோவிந்தராஜன், செயலாளர்கள் தாஜூதீன், தியாகராஜன், ஐ.ஜே.கே.மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #JerusalemUSembassy #Israeliprotestersrally
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது.

    இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

    வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேலில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு திறப்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிலர் இந்த விழாவை புறப்பணிப்பார்கள் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக நேற்று சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்றனர். #JerusalemUSembassy  #Israeliprotestersrally 
    கிருஷ்ணகிரி அணை நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக ஆற்றில் கலக்க செய்யாமல் அதை மக்களுக்கு பயன்படும் வகையில் ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், மாநில துணை தலைவர் மேகநாதன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகை சரி செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்காததை கண்டித்தும், அணையின் நீரை 52 அடியாக உயர்த்தி உடனடியாக மதகு அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகு உடைந்து தண்ணீர் வீணாகி சென்றது.

    அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்ததை மதகு உடைந்ததின் காரணமாக 42 அடியாக்கி உள்ளார்கள். தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தண்ணீரை வீணாக்க கூடாது. மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு அணைகளை கட்டவில்லை. கால்வாய்களை வெட்டவில்லை.

    இருக்க கூடிய அணையை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் முதல் கட்டமாக 28 ஏரிகளையும், அடுத்த கட்டமாக 25 ஏரிகளையும் நிரப்பிட வேண்டும். குறிப்பாக போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூர் திட்டத்தை படேதலாவ் ஏரியுடன் இணைக்க வேண்டும்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொடியாளம் அருகில் தடுத்து பக்கத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பினால் சூளகிரி சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×