search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்கள் பற்றி பேசிய எச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #HRaja #BJP
    திருச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, அறநிலையத்துறை அலுவலர்களையும், அவர்களின் வீட்டு பெண்களையும் அவதூறாக பேசினார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் எச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மலைக்கோட்டையில் அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது மலைக்கோட்டை கோவில் அலுவலகத்தை பூட்டியும், கோவிலில் கட்டண தரிசன சீட்டு வழங்காமல் கவுண்டரை பூட்டியும், பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமரதுரை, திருவானைக்கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி பாரதராஜா மற்றும் அறநிலையத்துறை அனைத்து கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த பா.ஜ.க. முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் நடராஜனுக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் நடராஜனை அழைத்து சென்றனர்.

    பின்னர் தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க இணை பொதுச்செயலாளர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது வீட்டு பெண்களை மிகவும் கேவலமாகவும், இழிவாகவும் பேசி உள்ளார்.

    கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறை, நீதித்துறை என அனைத்து அரசு ஊழியர்களையும் தகாத வார்த்தையால் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

    இதுகுறித்து திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜிடம் மனு கொடுக்க உள்ளோம். இதனை தொடர்ந்து வரும் 27-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். எச்.ராஜாவை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். #HRaja #BJP
    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவி விலக கோரி தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவை:

    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவி விலக கோரி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-

    குட்கா ஊழலை பொறுத்தவரை வருமான வரித்துறையினர் மாதவராவ் வீட்டில் சோதனை நடத்தி டைரியை கைப்பற்றி மாதவராவை கைது செய்துள்ளனர்.

    லஞ்சம் கொடுத்த மாதவராவை கைது செய்துள்ள போது லஞ்சம் வாங்கிய அமைச்சரை கைது செய்யாதது ஏன்?

    இந்த அரசு பாதுகாப்பற்ற அரசாக உள்ளது. இந்த ஆட்சியில் தொழில் முடங்கி விட்டது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை உழைக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்த குமார், குமரேசன், குப்புசாமி, உமா மகேஸ்வரி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர் திருமலை ராஜா, தளபதி இளங்கோ, வக்கீல்கள் கணேஷ் குமார், அருண் மொழி, தண்டபாணி, இளைஞரணி மணிகண்டன், தனபால், மாணவரணி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் மாரிச் செல்வம், பீளமேடு பி.டி. முருகேசன், கோவை லோகு, தினேஷ், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மேயர் வெங்கடாசலம், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன், கொ.ம.தே.க. வடிவேல், தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    துடியலூர் பஸ் நிலையம் முன் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர், பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவரசு, டி.பி. சுப்பிரமணியம், பத்மாலயா சீனிவாசன், கணேஷ் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.
    வேலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கார், பைக்கை தொங்க விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK
    வேலூர்:

    அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, மாவட்ட மாணவ அணி செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த மேடைக்கு இருபுறமும் கிரேன் மூலம் கார், பைக் கட்டி தொங்க விட்டிருந்தனர்.

    வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, பொருளாளர் கண்ணையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல், நகர செயலாளர் பிரகாஷ், புகழேந்தி, சக்திவேல், ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், மாவட்ட அவை தலைவர் அசோகன், முன்னாள் ஊராட்சி  தலைவர் பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நல்லதம்பி எம்.எல்.ஏ. நகர செயலாளர் ராஜேந்திரன், ஜோதிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராஜமாணிக்கம் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, சிவானந்தம், எம்.எல்.ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, மற்றும் ஸ்ரீதரன், அண்ணாதுரை, கார்த்தி வேல்மாறன், முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
    புதுச்சேரியில் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரசார் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #congress
    புதுச்சேரி:

    மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக புதுவையின் கிராமப்புற தொகுதிகளில் இருந்து பஸ், வேன்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதேசி மில் முன்பு ஒன்று திரண்டனர்.

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த பிரமாண்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, சாரம், ராஜீவ்காந்தி சிலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் நமச்சிவாயம், முதல் அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோர் பேசினார்கள்.

    ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேல்,

    முன்னாள் அமைச்சர் வல்சராஜ், பெத்தபெருமாள், மாநில துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுசெயலாளர்கள் ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, செயலாளர்கள் சாம் ராஜ், காமராஜ்,

    சேவாதள தலைவர் சி.பி., குலசேகரன், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொதுசெயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், பொதுசெயலாளர் விக்கிரமாதித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிசந்திரன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி.யில் இணைக்கப்பட்ட சங்கத்தினர் 500 பேர் பங்கேற்றனர். #congress
    விழுப்புரம் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடந்தது. #Congress
    விழுப்புரம்:

    விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ரங்கநாதன் வீதி, திருச்சி சாலை வழியாக சென்ற இப்பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்பாட்டம் செய்தனர்.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி பேரணியை தொடங்கி வைத்து பேசினார். மத்திய மாவட்டத்தலைவர் சீனுவாசக்குமார், வடக்கு மாவட்டத்தலைவர் ரமேஷ், தெற்கு மாவட்டத்தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சிவராமன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன்மெளலானா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெமிமேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம் வட்டார தலைவர்கள் சுரேஷ், கோவிந்தன், காத்தவராயன், சரவணன், மரக்காணம் வட்டாரத் தலைவர் கார்த்திக் பெருமாள் பழனி மாநில பொதுக்குழு உறுப்பினர் இல. கண்ணன், தினகர், சேவாதளம் சசிகுமார், சிறுபான்மை துறை முகமது இம்ரன், இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ், விவசாய அணி சங்கர், அர்ச்சுனன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, சுரேஷ்ராம், நகரத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், சேகர், நாராயணசாமி, குப்பன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், புருஷோத்தமன், நடராஜன், மகிளாக காங்கிரஸ் தலைவி மகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் ஸ்ரீராம், மாநில சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் வாசீம்ராஜா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பிரபாகரன், ராமகிருஷ்ணன், குமரேசன், ரமணன், வேலு, செந்தில், வட்டார தலைவர்கள் அன்பு, ராதா, சேட்டு, காமராஜ், காசிநாதன், ஏழுமல, திருக்கோயிலூர் கதிர்வேல், அரிகிருஷ்ணன், அண்ணாமலை, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக கலெக்டர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #tamilnews
    திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #VCK
    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார்.

    தற்போது அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அவதூறு பரப்பிய இளைஞரை கைது செய்யக்கோரி அரூர் கச்சேரிமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜானகிராமன், சாக்கன்சர்மா, பாரதிராஜா, ராமச்சந்திரன், மூவேந்தன், சித்தார்த்தன், கேசவன் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவதூறு பரப்பிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #VCK #thirumavalavan
    தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சேலம்:

    தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருப்பாளர் குமார் வரவேற்றார். மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளில் குழுக்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் கூட்டுறவுதுறையின் நிர்மூலமாக்கும் போக்கு தவிர்க்கப்படவேண்டும்.

    இதனை வரைமுறைபடுத்த தகுதியான குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நாகராஜன் நன்றி கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    இலவசமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    காலியாக உள்ள முப்படை நலத்துறை இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சென்டாக் மூலம் மருத்துவக் கல்லூரியில் கல்விக்கு வழங்கப்படும் ஒரு சதவீதத்தை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும், இலவசமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர் சாலை மறைமலையடி சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் இளஞ்சேரலாதன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சாந்துராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர். #tamilnews
    மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி வந்தது ரூ.200 ஆகவும், வணிக குடிநீருக்கும் ரூ.200 செலுத்தி வந்தது ரூ.400ஆகவும் உயர்த்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செல்லவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் பேரூராட்சித் தலைவரும் உடையவர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுனன், மோகனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துசாமி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து முன்னால் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இள மதி துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நக்கீரன் உள்பட ஏராளமான பெண்கள் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக ஏற்றாதே ஏற்றாதே குடிநீர் கட்டணத்தை ஏற்றாதே என காலி குடங்களுடன் கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி கூறியதாவது:-

    நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை அரசே உயர்த்தியதனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அனைத்து பேரூராட்சியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்படதக்கது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரி சீர்கேடுகளை கண்டித்து ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரி சீர்கேடுகளை கண்டித்து ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு ஜனநாயக இளைஞர் சங்க தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். செயலாளர் பிரளயன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலம் நேரு வீதி மி‌ஷன் வீதி வழியாக அரசு ஆஸ்பத்திரியை நோக்கி வந்தது. ஊர்வலத்தை போலீசார் ஆம்பூர் சாலையில் தடுத்து நிறுத்தினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் சோசலிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் லெனின் துரை, ஏ.ஐ.யூ.டி.யூ.டி. தலைவர் சிவக்குமார், செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் சங்கர், ஹரிஷ், ருத்ரா, ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேடுகளை விளக்கும் வகையில் காய கட்டுகளுடன் சிலர் பங்கேற்றனர். அரசு ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று பல்வேறு கோரிக்கைகளை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று பல்வேறு கோரிக்கைகளை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள், கல்லூரியில் கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும்.

    கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். இலவச பஸ் பயண அட்டை மற்றும் தரமான கல்வியை வழங்கிட வேண்டும். அரசாணை 92-யை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கோவையில் 18-ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்று அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

    குட்கா ஊழலில் டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வலியுறுத்தி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகளும், செயல்வீரர்களும், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துவது,

    விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதி, வட்டக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் “குளங்கள் மேம்படுத்துதல் திட்டம்” என்னும் பெயரில் குளக்கரைகளை வலுப்படுத்தும் போது குளங்களில் நீர் நிறுத்தும் இடத்தின் பரப்பளவைக் குறைக்கக் கூடாது. அப்படி குளங்களில் உள்ள பரப்பளவைக் குறைத்து நீதிமன்றங்களின் ஆணைகளுக்கு எதிராக கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டால், கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல் மணி, நாச்சிமுத்து, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, பகுதி செயலாளர்கள் சண்முக சுந்தரம், கணபதி லோகு, மார்க்கெட் மனோகரன், கோவிந்தராஜ், எஸ்.எம்.சாமி, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கணேஷ் குமார், இளைஞர் அணி கோட்டை அப்பாஸ், பூபாலன், தம்பு மற்றும் கலந்து கொண்டனர்.
    ×