search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து பயணப்படிகளும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை பேட்ஜ் அணிவது, தர்ணா உள்பட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசின் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கவன ஈர்ப்பு பேரணி புறப் பட்டது. பேரணிக்கு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். 
    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திண்டுக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் தலைமையில் அரசு டாக்டர்கள் சுரேஷ்பாபு, திருலோகசந்தர், உமாதேவி, செந்தில்குமார், சந்தனகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக செப்டம்பர் 9-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்வது என்றும் அதன்பின்னும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது எனவும் தெரிவித்தனர். #tamilnews
    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் இடமாறுதல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் வாரிசுகளுக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி போன்ற துறைகளில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கண்ணையன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் செல்வக்குமார், செல்வராஜ், செந்தில்குமார், முத்துக்குமரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

    போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.

    போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் டாக்டர்கள் புலிகேசி சாமிநாதன் சசிகுமார் ஸ்ரீதரன் உள்பட 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் விருத்தாசலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூர் அனைத்து கூட்டமைப்பு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சார்பில் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. பாஸ்கர், பாட்டாளி தொழிற் சங்கம் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி கருணாநிதி, ம.தி.மு.க. மணிமாறன், தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    வேலூரில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேலூர்:

    மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் தொழில் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, ஆம்பூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தன.

    இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சம்பத், ஆம்பூர் அரசு, பாலகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கச்சாவடி கட்டணத்தை கைவிடக்கோரியும், மோட்டார் வாகன துறைக்கு தனிவாரியம் அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதேபோல் ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுற்றுலா வேன், கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 
    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் மாசிலாமணி மகன் மணிகண்டன் (வயது 27).

    இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன் பலியானதாக கூறப்படுகிறது.

    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாத்துரை, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், ‘‘ திருட்டு வழக்கில் போலீஸ் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், இறப்பு குறித்து நீதி விசாரணையும், பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’, என்றார். #tamilnews
    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மதுரை:

    மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவ தற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள் ளன.

    மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்தன.

    அதன்படி இன்று எதிர்க்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ, வேன் போன்றவை இயக்கப் படவில்லை. மதுரையிலும் பல பகுதிகளில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கோரிக்கையை வலியுறுத்தி பெரியார் பஸ் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. எல்.பி.எப்., சி.ஐ. டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கத்தினர் இதில் பங்கேற் றனர்.

    தொ.மு.ச.வைச் சேர்ந்த மேலூர் அல்போன்ஸ், சி.ஐ.டி.யூ. மாவட்டத்தலைவர் வாசுதேவன், செயலாளர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் நந்தாசிங் உள்பட 300-க் கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கோ‌ஷங் களை எழுப்பினர்.
    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருச்சி:

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதால் தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முடிவுறு பணித்தொகுதியாக அறிவித்து, அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் அதே பணியிடத்திலேயே 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    சிவகங்கையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28-ந்தேதி நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் நகரின் மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர்.

    மேலும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில், சங்க தலைவர் அறிவுதிலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கந்தசாமி, மதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பைசல், அ.ம.மு.க. நகர செயலாளர் அன்புமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், தி.மு.க. சார்பில் அயூப்கான், ஜெயகாந்தன், வர்த்தகர் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் சுகர்னொ, துணைத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன், த.மா.கா. நகரச் செயலாளர் செல்வரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் வெள்ளையப்பன் நன்றி கூறினார்.
    ×