search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜானி"

    தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
    அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்து வருகிறார்.



    ஜானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சஞ்சிதா ஷெட்டி, அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு பிடிக்கு என்று பேட்டியளித்துள்ளார். #SanchitaShetty
    சூது கவ்வும் படம் மூலம் கவனிக்க வைத்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஜானி படம் வெளியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி:

    இது ஒரு விறுவிறுப்பான திரில்லர். படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைக்கும்.

    பிரசாந்த்?

    அவர் செம ஜாலி டைப். நடிக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லோர் மாதிரி அவரோட ரசிகைதான். ஆனா, `ஜானி’யில அவர்கூட நடிச்சதுக்குப் பிறகு, நல்ல நண்பர் ஆகிட்டார்.

    உங்களை அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டே இருக்கிறதுல அர்த்தமில்லை. கொஞ்சமா நடிச்சாலும், நச்சுனு கேரக்டர்ஸ் பிடிக்கணும். என் நடிப்பில் அடுத்து இன்னும் சில படங்கள் வர இருக்கு.

    நடிக்க வந்ததன் காரணம்?

    காரணம் தெரியலை. நான் செம கியூட்டா இருக்கேன்னு ப்ரெண்ட்ஸ், வீட்டுல இருக்கிறவங்க சொல்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான், ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணிப்பாரு’னு சொல்ற அளவுக்கு வளர்ந்துடுச்சு. முதலில் ‘தில்லாலங்கடி’யில ஒரு கேரக்டர் கிடைச்சது. அந்த வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை முழு நேர நடிகையாக்கி விட்டது.

    தமிழ் ரசிகர்கள் எப்படி?

    அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நினைச்சு பேசுறாங்க. ஒருநாள் ஷூட்டிங்ல இருக்கும்போது, ‘ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறோமே?ன்னு குடும்பத்தோட வருவாங்க. இதையெல்லாம் நினைச்சாலே சந்தோ‌ஷமா இருக்கும். ஓப்பனா சொன்னா, சென்னை ரசிகர்களுக்காகவே தமிழ்ல நிறைய படங்கள்ல நடிக்கணும். ஏன்னா, என்னை ரசிகர்கள் நேசிப்பதற்கு மேல் நான் அவர்களை நேசிக்கிறேன்.

    பிடித்த கதாநாயகி?

    கஜோல். அவங்க கண்ணு அவ்ளோ அழகு. வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டை கஜோலுக்காக திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.

    கனவு வேடம்?

    அப்படி எந்த எண்ணமும் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தர்ற எல்லா வேடமுமே எனக்கு கனவு வேடம்தான்.

    பிடித்த கதாநாயகன்?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.
    பி.வெற்றிசெல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜானி' படத்தின் விமர்சனம். #JohnnyReview #Prashanth #SanchitaShetty
    பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.



    பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.

    கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

    2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.



    ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஜானி' த்ரில்லர் ஜர்னி. #JohnnyReview #Prashanth #SanchitaShetty

    வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம். #Johnny #Prashanth #SanchitaShetty
    ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘ஜானி’.

    பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இதில், பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - எம்.வி. பன்னீர் செல்வம், இசை - ஜெய்கணேஷ், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், படத்தொகுப்பு - சிவசரவணன், கலை - மிலன் பர்னாண்டஸ், தயாரிப்பு நிறுவனம் - ஸ்டார் மூவிஸ், தயாரிப்பு - தியகராஜன்,  இயக்கம் - வெற்றி செல்வன்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது ரஜினி பட தலைப்பு. ஆனால், ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை. சுவையான திருப்பங்களுடன் செல்லும் பிரபு வேடம் பேசப்படும். கலகலப்பான பாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார்.

    ‘ஜானி’ விறுவிறுப்பான அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவரும் இந்த படம் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் கொண்டதாக இருக்கும்” என்றார். இதன் 3 கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது.

    வேகமாக வளர்ந்து வரும் ‘ஜானி’யை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Johnny #Prashanth #SanchitaShetty

    அடுத்தடுத்து பண்டிகை நெருங்குவதால், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் 20 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #TFPC #ProducersCouncil
    படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. 

    வாரம் தோறும், தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியது.

    இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 14-ந் தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, பிரசாந்தின் ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.



    வருகிற 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. 

    பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #TFPC #ProducersCouncil

    வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ஜானி படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #Johnny #Prashanth #SanchitaShetty
    90-களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

    இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குனர் ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் தயாரித்துள்ளார்.



    ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை படத்தின் டிரைலரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

    கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரை பார்க்கும்போது அறிய முடிகிறது. 2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’. போலீஸ் அதிகாரிகள், காணாமல் போன பணத்தை தேடி போகும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ஜானி. #Johnny #Prashanth #SanchitaShetty

    படத்தின் டிரைலரை பார்க்க:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் வில்லனாக ஒருவர் நடித்து வருகிறார் என்ற செய்தி வதந்தி என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஜானி நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. சூர்யா நடிப்பில் வெளியான ‘7-ஆம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஜானி. ஆனால், சர்கார் படத்தில் இவர் வில்லன் இல்லை என்றும் இந்த செய்தி வதந்தி என்றும் கூறப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.



    இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #Sarkar #VIJAY
    ×