search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    * தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467.

    * தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

    * மிக மிக பதட்டம் நிறைந்ததாக 181 வாக்குச்சாவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 181 வாக்குச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    * தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.

    * 950 வேட்பாளர்களில் 606 பேர் சுயேட்சைகள். மற்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

    * தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420.

    * 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.

    * 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 263.

    * 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.

    * 50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.

    * 60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.

    * 70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.

    * 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.

    * தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

    * சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு "கடமைக்கான சவாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.


    * நாளை ஓட்டுப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை முழுமையாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.

    * அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை பெருமளவில் தடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்றாலும் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.

    * தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணத்தை காட்டி இவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக கூறி 21 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளன.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

    எனினும் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர்.



    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. ஏற்கனவே அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது.  

    அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மறுவாக்குப்பதிவும் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

    5 மணி நிலவரப்படி சூலூர் - 67.18%, அரவக்குறிச்சி - 79.49%, திருப்பரங்குன்றம் - 61.99%, ஒட்டப்பிடாரம் - 66.77% வாக்குகள் பதிவாகியிருந்தது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
    திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
     
    நான்கு தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் சதவீதம்:-

    1. அரவக்குறிச்சி :  66.38%, 2. திருப்பரங்குன்றம் : 56.25%, 3. ஒட்டப்பிடாரம் : 52.17, 4. சூலூர் : 58.16%,
    8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி: 

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

    பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

    8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் 63.58 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 57.27 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 50.24 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 49.43 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 48.18 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 46.66 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 46.07 சதவீதம் வாக்குகளும், பதிவாகின. 

    ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் 3 மணிவரை 51.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மனாலி பாராளுமன்ற தொகுதியில் இன்று திருமணமான ஒருவர் மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    சிம்லா:

    பீகார், இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மனாலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள எட்டாம் எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


    8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபடசமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66 சதவீதம் வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 36.20 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 35.60 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சாந்தலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.



    பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச்சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்கள் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இன்று காலை பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்று பேட்டியளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று காலை பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளியும் தேவையில்லை என்றும், தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக்கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன் என்று கூறினார்.
    இன்று காலை தொடங்கிய இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரிலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.



    மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீகாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர்.

    இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    நாடு முழுவதும் 59 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 59 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    ஹிமாச்சாலப்பிரதேசத்தில் 4, ஜார்கண்டில் 3, சண்டிகரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    நாட்டின், 17-வது மக்களவை தேர்தல், இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மக்களவைவில் உள்ள, 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்., 11 முதல் இதுவரை, ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளுக்கு இன்று நடக்கிறது.



    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில், 3.71 லட்சம் வித்தியாசத்தில் மோடி வென்றார். அவருக்கு, 5.51 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. தற்போது, பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    மத்திய பிரதேசத்தில், மத்திய அமைச்சர்கள், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீஹாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர். பாட்னா சாஹிப் தொகுதி, மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அமைந்துள்ளது.

    மத்திய சட்ட அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் இங்கு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியின் தற்போதைய, எம்பியான நடிகர் சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி, தற்போது, காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடுகிறார். 
    பாராளுமன்ற தேர்தலில் 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
    புதுடெல்லி:

    ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

    இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமித் ஷா பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் ஒருநாள் முன்னதாகவே (நேற்று முதல்) பிரசாரத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    மீதமுள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றுவந்த உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுவடைந்தது. 

    19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். முன்னர் ஆறுகட்டங்களாக நடந்த தேர்தலுடன் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் படிப்படியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 
    ×