search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MaduraiConstituency #LSPoll #CEO
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.



    மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #MaduraiConstituency #LSPoll #CEO
    மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ParliamentElection
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டிய கடமை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

    வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கும்போது தமிழகத்தில் 3 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது சரியல்ல.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன்.

    18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.



    அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

    எடியூரப்பா பாராளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார்.

    அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பி.ஜே.பி.யின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Vaiko #ParliamentElection



    மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்படி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #Modi #LSPolls
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் நிறைவடைய  உள்ளதையடுத்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவில் உலக சாதனை படைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப்பதிவை அதிகரிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டரை டேக் செய்த மோடி, வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    பிரதமரின் வேண்டுகோளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, டுவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். #Modi #LSPolls

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. #parliamentelection #LSpollsinTamilnadu
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள்  மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் சுமுகமான முறையில் நிர்ணயிக்கப்பட்டதாகவும் சுனில் அரோரா குறிப்பிட்டார்.

    சி.பி.எஸ்.சி.இ. தேர்வுகள் மற்றும் சில திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.4 கோடி வாக்களர்கள் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்களர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடியாகும்.

    இந்த தேர்தலில் 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தாங்கள் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான இயந்திரங்கள் வைக்கப்படும். இதற்காக 17.4 லட்சம் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

    தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க ரிசர்வ் போலீசார் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் விதிமீறல்கள் பற்றி புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் அடையாளம் பாதுகாக்கப்படும்.

    இந்த முறை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்  வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும்.

    வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29-ம் தேதியாகும். 
     
    7 கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்படும் என சுனில் அரோரா அறிவித்தார். #parliamentelection #LSpollsinTamilnadu 
    ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 8-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 9 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 73.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இன்று 8ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. 331 பஞ்சாயத்து தலைவர்கள், 2007 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்து அமைப்புகளில் 43 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 681 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 2633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 361 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #JKPanchayatPolls

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #TelanganaElections2018
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்கள் குடும்பத்தினருடன் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

    துணை முதல்வர் கதியன் ஸ்ரீஹரி வாரங்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.  தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி கவிதா, நிஜாமாபாத்தின் போதங்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

    பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, காச்சிகுடாவில் ஓட்டு போட்டார். மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சாஸ்திரிபுரம் மைலார்தேவ்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.


    முன்னாள் மத்திய மந்திரியும் நடிகருமான சிரஞ்சீவி, நடிகர் நாகார்ஜூனா, நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

    தெலுங்கானாவில் மொத்தம் 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 9.30 மணிக்கு 10.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 11 மணி நிலவரப்படி 23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இதேபோல் காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதிய ஜனதா கூட்டணியும் தீவிர களப்பணியாற்றி உள்ளது.

    வாக்குப்பதிவு அமைதியாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வதற்காக மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 446 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. #TelanganaElections2018
    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #RajasthanElections2018 #AssemblyElection #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

    காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தனர். மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஓட்டு போடுவதற்கு முன்னதாக உதய்பூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.



    ராஜஸ்தானில் தேர்தல் தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி உள்ளன. பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 941 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானாவிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்படுகின்றன. #RajasthanElections2018 #AssemblyElection #Rajasthan
    அசாம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 65 சதவீதம் வாக்குகள் பதிவானது. #Assamcivicpolls
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இந்நிலையில், இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு இன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்ட 43,515 வேட்பாளர்களில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் காலையில் இருந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    பொதுவாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தாலும் மத்திய அசாம் பகுதிக்குட்பட்ட கோலாகட் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியின் அருகாமையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய முன்னாள் வீரர் கியானேந்திரா ராஜ்கோவா என்பவர் கொல்லப்பட்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

    இன்றைய தேர்தலில் சராசரியாக 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை தெரிவித்துள்ளது.

    வரும் 9-ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இருகட்டங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியிடப்படும். #Assamcivicpolls
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இன்று ஏழாவது கட்டமாக நடந்த தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற ஏழாம்கட்ட தேர்தலில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. காஷ்மீர் பகுதியில் 30.3 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.



    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவதுகட்ட தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகளும், நான்காம்கட்ட தேர்தலில் 73.1 சதவீதம் வாக்குகளும், ஐந்தாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், ஆறாம்கட்ட தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு காஷ்மீரில் இன்று 7-ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JKPanchayatPolls #PanchayatElection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.



    341 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1798 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5575 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2714 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 576, ஜம்மு 2138) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 892 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 912 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #JKPanchayatPolls #PanchayatElection
    வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ஐதராபாத் மற்றும் ஹாமம் பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘ஓட்டு போட்டவுடன் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களோ? அது எந்திரத்தில் தெரியும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #MadhyaPradeshAssemblyElections
    போபால்:

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக ஓட்டு போட்டனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளோம். இதற்கென லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றினர் என தெரிவித்தார்.



    இந்நிலையில், மாலை 6 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshAssemblyElections
    ×