search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
    ஐஸ்வால்:

    மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

    40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
     
    கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.



    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

    இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
    மிசோரம் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #MizoramElections #MizoramVoterTurnout
    கவுகாத்தி:

    மிசோரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

    இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். செர்சிப் போன்ற தொலைதூரப் பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியிருந்தன.

    தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சியில் மூதாட்டி

    கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. ஐசால் நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐசால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐசால் வடக்கு-2 தொகுதிக்குட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். #MizoramElections #MizoramVoterTurnout
    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. #MadhyaPradeshElections #MizoramElections
    இந்தூர்:

    மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

    இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும், மிசோரமில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

    மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியதால், பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும். மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க பாஜக  தீவிரம் காட்டுகிறது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அங்கு முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்தனர்.



    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிர பிரசாரம் செய்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச மக்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அப்பாவி மக்களை பாஜக நீண்ட காலம் சுரண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். #MadhyaPradeshElections #MizoramElections

    ஜம்மு காஷ்மீரில் நான்காம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    339 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1749 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5470 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.




    மொத்தம் 2618 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 639, ஜம்மு 1979) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 777 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 99 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 969 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 24ம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 75.2 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #JKPanchayatPolls

    ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    358 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1652 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.



    மொத்தம் 2773 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 727 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளில் 6 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1437 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற முதற்கட்டதேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது. #JKPanchayatPolls
    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. #ChhattisgarhElections2018
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    2-வது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் நக்சலைட்டுகள் நிறைந்த மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.

    இதேபோல முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. #ChhattisgarhElections2018

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதற்காக காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காஷ்மீர் பகுதிக்குட்பட்ட 491 வாக்குச்சாவடிகள்,  ஜம்முவில் உள்ள 196 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 687 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றன. பிற்பகல் 2 மணியுடன் இன்றைய வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இன்று பதிவாகும் வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection

    சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. #70percentturnout #Chhattisgarhpolls #Chhattisgarhfirstphasepolls
    ராய்ப்பூர்:

    90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    இன்று மாலை 6 மணியளவில் கிடைத்த தகவலின்படி மேற்கண்ட தொகுதிகளில் சராசரியாக சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் கமிஷன் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    மேலும் சில வாக்குச்சாவடிகளில் இருந்து விபரங்கள் வர வேண்டியுள்ள நிலையில் இந்த சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. #70percentturnout #Chhattisgarhpolls #Chhattisgarhfirstphasepolls
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    அந்த வகையில், 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று (12-ந்தேதி) தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


    படம் - நன்றி ANI

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதுதவிர மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh #ChhattisgarhElections

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. #KarnatakaBypolls #Shimoga
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.  பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.  #KarnatakaBypolls #Shimoga
    ஜம்மு காஷ்மீர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று நடைபெற்ற கடைசி கட்ட தேர்தலில் வெறும் 4.2 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன.#KashmirULBPolls #KashmirElection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று கடைசி மற்றும் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.



    ஸ்ரீநகர், கந்தர்பால் உள்ளிட்ட 8 உள்ளாட்சி அமைப்புகளுக்கான 132 வார்டுகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இதில்  44 வார்டுகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 52 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  எனவே, மீதமுள்ள 36 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 4.2 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 4 கட்ட தேர்தல்களிலும் சேர்த்து சராசரியாக 35.1 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வரும் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் இந்த  தேர்தலை புறக்கணித்ததால், வாக்குப்பதிவு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirULBPolls #KashmirElection
    பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். #PakistanByElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.

    இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.


    இன்றைய இடைத்தேர்தலுக்காக 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

    பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanByElection
    ×