search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட நகராட்சி தேர்தலில் சம்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #Sambarecords #JKcivicpolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    முதல்கட்ட தேர்தலில் 65 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.6 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.
     
    இந்நிலையில், பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் 75.3 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1 சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 3.2 சதவீதம், ஸ்ரீநகரில் மட்டும் மிகவும் குறைந்தபட்சமாக 1.8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ஓட்டுமொத்தமாக இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட நகராட்சி தேர்தலில் 16.3 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Voterturnout #Sambarecords #JKcivicpolls
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #JKElection #LocalBodyPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார். இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வார்டுகளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து  159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.



    தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். தெற்கு காஷ்மீர் பகுதியில் செல்போன் இன்டர்நெட் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் பிற பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் வேகம் 2ஜி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  #JKElection #LocalBodyPolls
    திருச்சியில் ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் 19 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று தொடங்கி 10 கட்டங்களாக தெற்கு ரெயில்வே முழுவதும் நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் பொன்மலை ரெயில்வே பணிமனை உள்பட 42 இடங்களில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ரெயில்வே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ரெயில்வே ஊழியர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடந்த மையங்கள் முன்பு மாநகர போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுத்தேர்தல்களை போல ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதேபோல் சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைகிறது. வருகிற 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 
    வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. #ElectionCommission #Facebook
    புதுடெல்லி:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை 48 மணி நேரத்துக்கு முன்னரே நிறுத்த வேண்டும்.

    இந்த சட்டப்பிரிவு குறித்து ஆராய்வதற்காக தேர்தல் கமிஷன் அமைத்த சிறப்பு குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதிநிதியும் பங்கேற்றார்.



    அப்போது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. இதற்கு எந்தவித குறிப்பட்ட பதிலும் இதுவரை தெரிவிக்காத பேஸ்புக் நிறுவனம், அது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது.

    எனினும் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை தெரிவிக்க பேஸ்புக்கில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய பேஸ்புக் பிரதிநிதி, அதில் சட்டமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #ElectionCommission #Facebook #Tamilnews 
    குழந்தைக்கான பெயரை சூட்ட வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் பெயர் தேர்வு செய்த தம்பதிகள் பற்றிய செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #BabyName #MaharashtraCouple
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரி தாலுகாவை சேர்ந்தவர் மிதுன் பங் (வயது 34), தொழில் அதிபர். இவரது மனைவி மன்சி. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைக்கான பெயரை வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி யாக்‌ஷ், யுவன், யுவிக் ஆகிய 3 பெயர்களை தேர்வு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர். இதன்படி சம்பவத்தன்று மிதுன் பங்கின் வீட்டிற்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் வருகை புரிந்தனர். முன்னாள் எம்.பி. நானா பட்டோலே இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இதையடுத்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்த 3 பெயர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 192 பேர் இதில் கலந்து கொண்டு வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப்போட்டனர். இதில், யுவன் என்ற பெயர் அதிகபட்சமாக 92 ஓட்டுகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு பெற்றோர்கள் யுவன் என பெயர் சூட்டினர். 
    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கிறது.

    ஜெயநகர் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 13–ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். #Karnataka #Jayanagar #Bypoll
    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடந்தது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத பாபுவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், ஜேடி.எஸ். கூட்டணி அமைத்துள்ளதால், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். ஆதரவு அளித்துள்ளது.

    ஜெயநகர் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பெண்களுக்கென்று 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 துணை ராணுவ படையினரும் 350 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    23 பறக்கும்படை போலீசார் தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிவருகிறார்கள். இன்று காலை 6 மணி முதலே வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

    பா.ஜனதா வேட்பாளர் பிரகலாதபாபுவும் ஓட்டுப் போட்டார். நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் 51-வது வாக்குச்சாவடியான சுதர்‌ஷன் வித்யாமந்திர் பள்ளியில் ஓட்டுப் போட்டார். தொடர்ந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஓட்டுப்பதிவுக்காக ஜெயநகர் தொகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன. #KarnatakaBypoll #Jayanagar

    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தலுக்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13–ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது. #Karnataka #Jayanagar #Bypoll
    மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உ.பி.யின் கைரானா உள்பட நான்கு மக்களவை தொகுதிகளுக்கும், மேகாலயா மாநிலத்தின் அம்பாதி உள்பட 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

    உத்தரப்பிரதேச மாநிலம் நூர்புர், மராட்டிய மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்குவங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது, இந்த 10 தொகுதிகளில் மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் மட்டும் 90.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

    நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை மறுதினம் நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.#WestBengalPolls #panchayatelections
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections
    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #WestBengalPolls #panchayatelections
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

    621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections
    கர்நாடக தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக வந்த செய்திகளுக்கு மாறாக வரலாறு காணாத அளவில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின. இதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்திருந்தன.

    இந்நிலையில், இந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபைக்கு 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இருந்து இதுவரை நேற்று பதிவான வாக்கு சதவீதம் முந்தைய தேர்தல் வரலாறு காணாத வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    1989, 1990,1994-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் 69 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், 2004, 2008-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.45 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaAssembly polls #72.13percent 

    ×