search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.ராஜன்"

    ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார்.
    இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

    திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

    இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.

    எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே இணையத்தில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.

    இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.


    அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். சினிமாக்காரர்களின் ஓட்டு அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

    அதை அவர்கள் கள்ள ஓட்டாகப் போட்டுக் கொள்வார்கள். பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.

    அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அலையப் போகிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ProducerCouncil
    தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பதிவுத்துறை தலைவரின் கடிதத்தில், ‘அரசாணையின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில், விரைந்து செயல்பட ஏதுவாக தனி அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் தற்காலிக குழு ஒன்றை அமைத்து அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 9 நபர்கள் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் இடம்பெற்றோர் பெயர்கள் வருமாறு:-



    பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், ஆர்.ராதாகிருஷ்ணன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #ProducerCouncil
     
    இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #Ilayaraja75 #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.



    பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது’ என்று கூறினார். #Ilayaraja75 #Vishal

    ×