search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 2-வது இடத்தை பிடித்தது. 1987, 1996, 2015 ஆகியவற்றில் அரை இறுதியில் தோற்றது.

    12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

    ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.

    உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-

    1. தெண்டுல்கர்

    சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.



    2.கங்குலி

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இவரும் சிறந்த தொடக்க வீரர் ஆவார். இலங்கைக்கு எதிராக 183 ரன் குவித்தது (1999) இன்றும் சாதனையாக இந்திய அணியில் உள்ளது. 3 உலகக்கோப்பை தொடரில் விளையாடி 1006 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 55.88 ஆகும். 4 சதமும், 3 அரை சதமும் அடித்துள்ளார்.

    3. ராகுல் டிராவிட்

    3-வது வரிசையில் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டவர். 1999 உலகக்கோப்பையில் ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் 860 ரன் (21 இன்னிங்ஸ்) பெற்றார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும். சராசரி 61.42 ஆகும்.

    4. மொகீந்தர் அமர்நாத்

    1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டர். 254 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 21.16 ஆகும். 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    5. முகமது அசாருதீன்

    3 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பணியாற்றியவர். இதில் 1996-ல் இந்தியாவில் நடந்த போட்டியில் அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றவர். மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு பலம் சேர்த்தவர். 1987-ல் இந்திய அணி அரை இறுதியில் நுழைய காரணமாக திகழ்ந்தார். 8 அரை சதத்துடன் உலகக்கோப்பையில் 826 ரன்கள் எடுத்துள்ளார்.

    6. யுவராஜ் சிங்

    சுழற்பந்து ஆல்-ரவுண்டர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தொடர் நாயகன் விருதை பெற்றார். 2003 மற்றும் 2011 உலககோப்பையில் சில ஆட்டங்களில் அதிரடியான ஆட்டம் மிகவும் பலன் அளித்தது. 3 உலகக்கோப்பையில் விளையாடி 738 ரன் எடுத்து உள்ளார். சராசசி 52.71 ஆகும். 1 சதமும், 6 அரைசதமும் அடித்துள்ளார்.

    7.டோனி (துணைகேப்டன்)

    இந்திய ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த கேப்டனில் ஒருவர். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2015-ல் அணியை அரைஇறுதி வரை அழைத்து சென்றார். உலககோப்பை தொடரில் 507 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.25 ஆகும். 3 அரைசதம் அடங்கும். 27 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.



    8. கபில்தேவ் (கேப்டன்)

    ஆல்-ரவுண்டர் திறமையில் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ல் அப்போதைய ஜாம்பவான் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி உலககோப்பையை வென்று பெருமை சேர்த்தார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்து சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்சை நீண்ட தூரம் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் மறக்க இயலாத ஒன்றாகும். 669 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.16 ஆகும். 28 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    9. ஸ்ரீநாத்

    இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.

    10. கும்ப்ளே

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீரர் கும்ப்ளே. 1996 உலககோப்பையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியான இருந்தது. அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். 31 விக்கெட்டுகளை உலகக்கோப்பையில் கைப்பற்றினார்.

    11. ஜாகீர்கான்

    இந்திய அணியின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலககோப்பையில் இவரது பங்களிப்பு சிறப்பானது. 23 ஆட்டத்தில் விளையாடி 44 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    12-வது வீரராக தேர்வான விராட் கோலி 2 உலககோப்பையில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும்.
    மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து எந்தவொரு ஆதாயமும் பெறவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார். #BCCI
    கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இடம்பிடித்தார். தொடர்ந்து அந்த அணியில் இருந்து பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    இவர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து வருகிறார். அந்த அணி எங்கெல்லாம் சென்று விளையாடுகிறதோ, அங்கெல்லாம் சச்சின் செல்கிறார். இதனால் அவர் ஆலோசகராக செயல்படுகிறார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் இரட்டை ஆதாயம் தரும் பதவி வகிக்கிறார் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சஞ்சீவ் குப்தா என்பவர் பிசிசிஐ-யின் குறைதீர்க்கும் அதிகாரியிடம் புகார் கூறியிருந்தார்.



    இந்நிலையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்த எந்தவொரு ஆதாயமும் பெறவில்லை. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் தேர்வு அல்லது மற்ற எந்தவொரு பதவியிலும் இல்லை’’ என அவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது. #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் நடக்கிறது. நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.



    அவர்கள் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.



    20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், வீரர்கள் செல்லும் பஸ்சில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    மே மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. #WorldCup2019 #BCCI
    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.

    4-வது வீரர் வரிசை, ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீரர்கள், 2-வது விக்கெட் கீப்பர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #WorldCup2019
    ஐ.பி.எல். போட்டி உலக கோப்பை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #IPL2019
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஏப்ரல் 20-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் தீவிரமாக இருக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். ஆட்டங்கள் வருகிற 23-ந்தேதி தொடங்கி மே 2-வது வாரம் வரை நடைபெறும்.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்த மண்ணில் 2-3 என்ற கணக்கில் இழந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி இருந்தார்.

    ஆனால் இதற்கு மாறாக ஐ.பி.எல். போட்டி உலக கோப்பை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    4-வது நிலை பேட்ஸ்மேன், 2-வது விக்கெட் கீப்பர் இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.

    4-வது வரிசை பேட்ஸ்மேன் இடத்துக்கு ரகானே, அம்பதி ராயுடு, ஷிரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் 4-வது வரிசைக்கு தேர்வு செய்யபடுவார்.

    ஆஸ்திரேலிய தொடரிலும் இந்த வரிசையை நிரப்ப முடியவில்லை.

    தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கரை உலக கோப்பையில் 4-வது வீரர் வரிசைக்கு பயன்படுத்தும் திட்டத்தையும் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய இருக்கிறது. ஐ.பி.எல்.லில் முதல் 3 வாரம் நடைபெறும் போட்டியின் முடிவில் இது குறித்து தீர்மானிக்கப்படும்.

    டோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரி‌ஷப்பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளனர்.

    தினேஷ்கார்த்தி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவே. ரிசப்பந்த் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவார். அவரை உலக கோப்பை 4-வது வீரர் வரிசையில் களம் இறக்கலாம் என்று கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகியோர் யோசனை தெரிவித்துள்ளனர். #BCCI #IPL2019
    ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7 கட்ட தேர்தல் நடந்தாலும் கொல்கத்தா அதற்குரிய 7 ஹோம் மேட்ச்களை பெற்றுள்ளது. #IPL2019
    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

    தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-

    1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)

    2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)
    3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)

    4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)

    5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)

    6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)

    7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)

    8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)

    9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)
    10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)

    11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)
    12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

    13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி)

    14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)

    15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

    16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)

    17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)

    18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)
    19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)

    20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்)
    21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)

    22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)

    23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

    24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)

    25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)

    26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)

    27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)
    28. ஏப்ரல் 13:-  கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)

    29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)
    30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்)

    31. ஏப்ரல் 15:- மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை)

    32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)

    33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)

    34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)

    35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)

    36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)
    37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)

    38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)
    39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)

    40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)

    41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)

    42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)

    43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)

    44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

    45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)

    46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
    47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)

    48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)

    49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)

    50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை)

    51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)

    52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)

    53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)
    54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)

    55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)
    56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)
    ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    புதுடெல்லி:

    2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
     
    குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இது சம்பந்தமாக விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


     
    இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
     
    மேலும் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க  வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    இந்திய கிரிக்கெட் அணி அனுமதி வாங்கியே ராணுவ தொப்பியை அணிந்தது என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. #ICC #BCCI #TeamIndia
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடினார்கள். இந்தப் போட்டிக்கான சம்பளத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை தவிர்த்து ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இதை பார்க்கவில்லையா?. இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்பு’’ என்றார்.

    பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, ‘‘ராணுவ வீரர்களின் தொப்பியுடன் இந்திய வீரர்கள் வலம் வந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘‘இது வெறும் கிரிக்கெட் அல்ல. ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்று பதவிட்டிருந்தார்.

    மேலும் அவர் ‘‘இதுபோன்ற செயலை இந்திய அணி நிறுத்திக் கொள்ளாவிட்டால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்படி புகார் கொடுக்க வேண்டும்’’ என்றார்.



    பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான இன்ஜமாம் உல்-ஹக் கூறுகையில், ‘‘நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணி. இது அரசியல் விவகாரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசிலையும் ஒன்றாக கலக்கக்கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ‘‘ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசே‌ஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’’ என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டா? அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீக்கா? என்று வெளிநாட்டு வீரர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ ஆலோசனை செய்துள்ளது. #IPL2019
    புல்வாமா பயங்கரவாதி தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதனால் அனைத்து வகை விளையாட்டிலும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.

    குறிப்பாக பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடர் கிடையவே கிடையாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா? என்று ஆலோசித்து வருகிறது.

    பிசிசிஐ சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடுகிறார்கள். ஏபி டி வில்லியர்ஸ் முதன்முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கைவிட ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடக்கூடாது என்று வலியுறுத்த பிசிசிஐ கருதியது.

    இதுகுறித்து பிசிசிஐ-யின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி, குறைதீர்க்கும் அதிகாரி, பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிசிசிஐ இதில் உறுதியாக இருந்திருந்தால் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
    ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். புல்வாமா பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இதனால் இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசியிடம் வலியுத்த இருக்கிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடன் உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பது, ஒருவேளை நாக்அவுட் சுற்றில் மோத வேண்டியிருந்தால் என்ன செய்தவது என்பது குறித்து முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்து நிர்வாகக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் வினோத் ராய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மார்ச் 23-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் தொகை வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த உள்ளது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்தார். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று முன்னாள் கேப்டன் அசாருதீன், ஹர்பஜன்சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    மற்றொரு முன்னாள் கேப்டனான கங்குலி “பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது. அப்படி தடை விதிக்காவிட்டால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுக்கும்.



    இது தொடர்பான கடிதத்தை பி.சி.சி.ஐ.யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகி தயாரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராயன் ஒப்புதலின் பேரில் இந்த கடிதம் தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் இன்று இறுதி முடிவு செய்கிறது. அதன்பிறகு இந்த கடிதம் ஐ.சி.சி.க்கு அனுப்பப்படும்.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. வினோத்ராய் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான் செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    2019-ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    புதுடெல்லி:

    காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறும்போது, ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக்கில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16-ந்தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.



    பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் வந்து நாம் விளையாடாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ள பிசிசிஐ உலககோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    ×