search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐபிஎல் அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #IPLSeason2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. #ICC #AmbatiRayudu
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. பகுதி நேர பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.

    அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.

    ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடைவிதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.
    தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைய இருக்கிறார். இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல் சேர்கிறார். #HardikPandya
    இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான சர்ச்கைக்குரிய கருத்துக்களை கூறியதாக விமர்சனம் எழும்பியது. இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இருவர் மீதான தடை நீக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழு அதிகாரி வினோத் ராய் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பிசிசிஐ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து செல்கிறார். நாளை நடக்கும் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28-ந்தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    அதேசமயம் லோகேஷ் ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக பிசிசிஐ அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால், தேர்வுக்குழுவில் உள்ள ஐந்து உறுப்பினர்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

    அதன்பின் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 எனக்கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி தொடரை வெற்றிகரமாக முடித்தது.

    இந்திய அணி சாதனைப் படைத்ததால் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கியது. இந்நிலையில் சிறந்த அணிகளை தேர்வு செய்ததற்காக ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சிகே கண்ணா கேட்டுக்கொண்டுள்ளார் #HardikPandya
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார்கள். ஆனால், இருவர் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணா இருவருக்கும் ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து சிகே கண்ணா கூறுகையில் ‘‘அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்களை நாம் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். தவறுக்காக எந்தவித நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களுடைய கேரியர்ஸ்-க்கு தடை போடக்கூடாது’’ என்றார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தற்போதுள்ள சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா யார்க்கர் வீசுவதில் சிறப்பாக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பும்ரா கடைசி கட்ட பந்துவீச்சில் பெரிய வித்தியாசத்தையும், தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.

    அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசுகிறார். பும்ராவின் சிறப்பே அவர் சாதாரணமாக யார்க்கர்களை வீசும் திறமை பெற்று இருப்பதுதான். வக்கார் யூனிஸ்போல் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் யார்க்கர் பந்து வீசுகிறார்.



    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பலவீனமான ஆஸ்திரேலிய அணியை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்திய அணியினர் முழு திறமையை வெளிப்படுத்தினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு கட்டாயம் இடமுண்டு என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதியாக தெரிவித்துள்ளார். #RishabhPant
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்து, தொடரில் புஜாராவிற்கு அடுத்தபடி அதிக ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திது.

    இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-

    சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார்.  இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

    இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ‌ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தலா இரணடு போட்டியில் விளையாட தடைவிதிக்க வாய்ப்புள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிர்க்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதால் சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பாண்டியா இதற்காக மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்திருந்தார்.

    பாண்டியாவின் விளக்கம் தனக்கு திருப்திகரமான இல்லை என்று கூறிய நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ‘‘பெண்கள் குறித்து சர்ச்சையாக தெரிவித்த பாண்டியா, ராகுலுக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன்’’ என்றார். மேலும்,‘‘நிர்வாகக்குழுவின் மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி-யின் கருத்தை பொறுத்து இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். #HardikPandya #BCCI #LokeshRahul
    புதுடெல்லி:

    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



    இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.
     
    இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. #HardikPandya #BCCI #LokeshRahul
    பாராளுமன்றம் தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் தொடரை பிரச்சனையின்றி நடத்த பிசிசிஐ 20 இடங்களை தயாராக வைத்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 ஐபிஎல் தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதேபோல 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் (துபாய், அபுதாபி, சார்ஜா) பாதி ஆட்டங்கள் தேர்தல் காரணமாக நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டு நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பாதுகாப்பு கருதி வெளிநாட்டுக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று கருதப்பட்டது.

    இந்நிலையில் ‘‘ஐபிஎல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும். வெளிநாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது’’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    ஐபிஎல் போட்டி வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் தொடங்கும். உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி தொடங்குவதால் அதற்கு 15 தினங்களுக்கு முன் ஐபிஎல் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். இதனால்தான் முன்னதாக மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.

    மே 12-ந்தேதி ஐபிஎல் போட்டிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு ஏற்றவாறு தேதி மற்றும் இடங்கள் முடிவு செய்து போட்டி அட்டவணை வெளியாகும்.

    ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் என்ற முறையில் எப்போதும் நடைபெறும். இந்த முறை தேர்தல் நடைபெறுவதால் அதில் மாற்றம் செய்யப்படுகிறது. பொதுவான இடத்திலும் அணிகள் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

    இதற்காக 20 இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தயாராக வைத்துள்ளன. தேர்தல் தேதிக்கு ஏற்றுவாறு இடங்கள் நிர்ணயிக்கப்படும்.
    ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. #AUSvIND #BCCI
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.

    சிட்னியில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்தது. கடைசி இரண்டு நாட்கள் மழை பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

    இதனால் அணியின் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், சப்போர்ட் ஸ்டாஃப்-களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘ஊக்கத்தொகை ஒவ்வொரு வீரர்களும் போட்டியில் வாங்கும் சம்பளத்திற்கு சமமான அளவில் வழங்கப்படும். ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தலா 15 லட்சம் ரூபாயும், ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களுக்கு தலா 7.5 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சியாளர்கள் அல்லாத சப்போர்ட் ஸ்டாஃப்-களுக்கு சம்பளம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
    ×