search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #IPL2019
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. பொதுவாக ஐபிஎல் சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதி வாக்கில் முடிவடையும். ஐபில் தொடர் முடிந்து 10 நாட்களுக்குள் உலகக்கோப்பை தொடர் தொடங்குகின்றன.

    உலகக்கோப்பை தொடருக்கு முன், இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை என்று இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட இந்திய அணியின் நிர்வாகிகள், பிசிசிஐ நிர்வாக குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

    ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று விராட் கோலி நிர்வாக குழுவிடம் தெரிவித்து உள்ளார்.  மேலும் ஐபிஎல் போட்டிகளை தவற விடும் வீரர்களுக்கு பிசிசிஐ இழப்பீடு வழங்கலாம் எனவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.

    இந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. கோலியின் இந்த கோரிக்கையால், மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக பாதிக்கப்படும். அந்த அணி பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை இழக்க நேரிடும். மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.



    இப்பிரச்சனை தொடர்பாக சிஓஏ, ஐபிஎல் முதன்மை இயக்க மேலாளர் ஹேமங் அமினிடம் விவாதித்தனர். இதுகுறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அணிகளின் நிர்வாகங்களிடம் பேச வேண்டும். குறைந்தது வரும் நவம்பர் 15-ம் தேதி வீரர்கள் வாங்குதல், பரிமாற்றம் செய்வதற்கு கடைசி நாளுக்கு முன்பு ஆலோசிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டுமே வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் வீரர்கள் இல்லாவிடில் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மார்ச் 23-ந்தேதியில் ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். #ViratKohli
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தயாராவது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விராட் கோலி பேசும்போது, அடுத்தடுத்த தொடர்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைவார்கள். இதனால் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.



    அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது சிறந்த முடிவாக இருக்கும். இல்லையென்றால் 7 அல்லது 8 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
    இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் விராட் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் அப்துல் பாஷித், "இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோலி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோலி நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், "கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோலி கூறினார். அப்படியென்றால், கோலியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி விடலாமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்நிலையில் கோலி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில்,

    ‘‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாக், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.



    மேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பூமா போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழ்ச்சி அடையும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane
    புவனேஸ்வரில் நடைபெற்ற எகம்ரா விளையாட்டு இலக்கிய விழாவில் ரகானே கலந்து கொண்டார். அப்போது ரகானேவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.



    இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    இந்திய அணியின் கேப்டனும், ரன் மெஷினும் ஆன விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. #HappyBirthdayVirat
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், 2010-ம் ஆண்டு டி20 போட்டியிலும், 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.

    கடந்த 2015-ல் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 24 சதம், 19 அரைசதங்களுடன் 6331 ரன்கள் குவித்துள்ளார். 216 ஒருநாள் போ்டடியில் 38 சதங்கள், 48 அரைசதங்களுடன் 10232 ரன்கள் குவித்துள்ளார். 62 டி20 போட்டியில் 18 அரைசதங்களுடன் 2102 ரன்கள் குவித்துள்ளார்.

    இந்திய அணியின் ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள். 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி பிறந்த விராட் கோலி இன்று 30 வயதை நிறைவு செய்து 31-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் விரைவாக 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனை்ப படைத்தவர். கேப்டனாக ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ரன்களை விரைவாக கடந்தவர். ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம், 16 ஆயிரம், 18 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்தவர்.
    இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

    நவம்பர் 21-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை சுமார் இரண்டு மாதம் விளையாடுகிறது. இந்த தொடர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குமிடையில் கையெழுத்து ஆகியிருக்கும். அதில் வீரர்களுக்கான தங்குமிடும், அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள், சாப்பாடு மெனு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.


    கோப்புப்படம்

    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது. அதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில்தான் வீரர்களுக்கான உணவு மெனுவில் இருந்து மாட்டிறைச்சியை நீக்க கூறியதாக கூறப்படுகிறது. அதற்குப்பதில் வெஜிடேரியன் மெனுவை அதிகரித்துள்ளது.
    பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வதாக கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #BCCI #Ganguly
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தை வினோத்ராய் தலைமையிலான குழு நடத்தி வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த குழு கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த குழு இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.,இ.ஓ.) ராகுல் ஜோரி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ராகுல் ஜோரியும் விடுப்பில் சென்று விட்டார்.

    இந்த நிலையில் பி.சி.சி.ஐ.யின் தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவால் பி.சி.சி.ஐ.யின் பெயர் சரிந்து வருகிறது. ராகுல்ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டால் பி.சி.சி.ஐ.யின் நன்மதிப்பு மீது கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை நிர்வாகக்குழு கையாண்ட விதம் வேதனை அளிக்கிறது.

    நிர்வாக குழுவில் முதலில் 4 பேர் இருந்தனர். தற்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொழில்நுட்ப குழுவை (கங்குலி, தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன்) மீறி நிர்வாகக்குழு எடுக்கிறது.



    தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை நிர்வாகக்குழு மாற்றி வருகிறது. பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முடிவுகளை மாற்றி உள்ளனர்.

    பயிற்சியாளர் நியமனம் போன்ற நிர்வாக முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுகிறது. பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. நீண்ட நாட்கள் விளையாடியவன் என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் நிலை முக்கியமாகும். பாரம்பரிய மிக்க இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். #BCCI #Ganguly
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை என கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடுபவர் கேதர் ஜாதவ். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதர் ஜாதவ் விளையாடினார். முதல் போட்டியில் விளையாடும்போது அவருக்கு தொடைப்பகுதியில தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

    அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போதும் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை.

    கேதர் ஜாதவ் உடற்தகுதி பற்றி தெரிந்து கொள்ள தியோதர் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு கேட்டுக்கொண்டது. தியோதர் டிராபியில் சிறப்பாக பேட்டிங் செய்ததன் உடன் பந்தும் வீசி தனது உடற்தகுதியை நிரூபித்தார் கேதர் ஜாதவ்.

    இந்நிலையில் நேற்று கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த அணியில் கேதர் ஜாதவிற்கு இடம் கிடைக்கவில்லை.



    இதனால் கேதர் ஜாதவ் அதிர்ச்சியடைந்தார். தன்னை தியோதர் டிராபியில் விளையாட சொல்லிவிட்டு அணியில் இடம் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ‘‘தேர்வுக்குழு என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை நான் ஆராய வேண்டியது அவசியம். அவர்களுடைய தற்போதைய திட்டம் என்ன வென்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் தற்போது நான் அணியில் இல்லை. நான் ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளனர்.

    இந்திய அணியில் இடம் கிடைக்காத முரளி விஜய் மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கு தேர்வுக்குழு மீது தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை பிசிசிஐ-யின் சிஏஓ ஏற்றுக்கொண்டது. #BCCI #ViratKohli
    வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்கள் மனைவியர், தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது என்பது பிசிசிஐ நிலையாக உள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.



    அப்போது, மனைவியர் மற்றும் தோழிகள் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்பட உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் சப்போர்ட் சிஸ்டம் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்களால் ஒருபோதும் ஆட்டம் பாதிக்காது என்பதை வலியுறுத்தியிருந்தார்.

    உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள் தங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், தொடர் தொடங்கும் முதல் 10 நாட்கள் வீரர்கள் அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. அதன்பின் தொடர் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
    மீடூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோர ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். #MeToo #BCCI
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. கிரிக்கெட் வாரியத்துக்கு வருவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. அவர் அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் வருகிற 17 மற்றும் 18-ந்தேதியில் சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொள்ள இருக்கிறார்.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடே மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.

    இந்த டெஸ்ட் முடிந்தபின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. 2-வது போட்டி இந்தூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டிக்கெட்டுக்களை பிரித்துக் கொள்வதில் மத்திய பிரதேச கிரக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ-க்கும் முரண்பாடு ஏற்பட்டதால் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.



    3-வது போட்டி 27-ந்தேதி புனேயில் நடக்கிறது. 4-வது போட்டி அக்டோபர் 29-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டியை நடத்த பணம் பிரச்சனை ஏற்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியதாக தெரிகிறது.

    இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த நான்காவது ஆட்டம் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
    நிதாஹாஸ் இறுதிப் போட்டியில் சிக்சர் அடித்து ஹீரோவான தினேஷ் கார்த்திக் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #INDvWI
    இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    அதன்பின் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்தார். இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 தொடரில் வங்காள தேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று புகழப்பட்டார். 13 ஒருநாள் போட்டியில் பங்கேற்று இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 33, 31 நாட்அவுட், 1 நாட்அவுட், 44, 37 ரன்கள் அடித்திருந்தார்.



    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தேர்வுக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஈர்க்கப்பட்டார். ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுவார். தினேஷ் கார்த்திக்கிற்கு நாங்கள் சில வாய்ப்புகள் கொடுத்தோம்’’ என்றார்.

    ரிஷப் பந்தின் மீது தேர்வுக்குழு அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
    ×