search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    விராட் கோலி அப்செண்ட்-ஆல் வருமானம் போச்சு என்று கடிதம் எழுதிய ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது. #BCCI #StarIndia #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனும், உலகின் நட்சத்திர வீரரும் ஆன விராட் கோலி இந்த தொடரில் விளையாடவில்லை. இங்கிலாந்து மண்ணில் 84 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20, ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி விராட் கோலி அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்னும் கூடுதல் பலம் பெற்றிருக்கும். இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என ஸ்டார் இந்தியா திட்டமிட்டிருந்தது.



    விராட் கோலி ஓய்வால் தங்களது வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதிய ஸ்டார் இந்தியா போட்டியின் ஒருங்கிணைப்பாளரான ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு மெயில் அனுப்பியது. இந்த மெயில் பிசிசிஐ-க்கும் இணைக்கப்பட்டது. அந்த மெயிலில் ‘‘தலைசிறந்த வீரரான விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை என்பதை 15 நாட்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. இதனால் எங்களுக்க பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயில் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்தும். மேலும், ஒப்பந்தத்தின்போது சிறந்த தேசிய அணியை அனுப்பும் வகையில் வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பதில் அளித்துள்ளது. அதில் ‘‘இந்திய அணியின் தேர்வை ஒளிபரப்பும் நிறுவனம் முடிவு செய்ய முடியாது. எங்களுடைய தேசிய அணியை தேர்வு செய்வது பிசிசிஐ-யின் தனியுரிமையாகும். இதில் வெளியில் இருந்து எந்தவொரு குறுக்கிட்டையும் அனுமதிக்க முடியாது’’ என்று பதிலடி கொடுத்துள்ளது.
    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

    இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

    போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி உள்பட வீரர்கள் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் வீரர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களின் மேட்ச் சம்பளம், ஒப்பந்தத் தொகையுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது.

    தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரிக்கு 18.7.2018 முதல் 17.10.2018 வரை முன்னதாகவே சம்பளமாக 2 கோடியே 5 லட்சத்து இரண்டாயிரத்து 198 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.



    ஹர்திக் பாண்டியாவிற்கு ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ரூ. 50,59,726, அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ரூ. 60,75,000 ஒப்பந்தத் தொகையாக பெற்றுள்ளார்.

    புஜாரா சம்பளம்

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 60,80,725

    ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை - ரூ. 92,37,329

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை ரூ. 1,01,25,000

    இஷாந்த் ஷர்மா

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 55,42,397

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத் தொகை - ரூ. 29,27,700

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான பரிசுத் தொகை - ரூ. 48,44,644

    பும்ரா

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,13,48,573

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

    குல்தீப் யாதவ்

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 25,05,452

    பார்தீவ் பட்டேல்

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 43,92,641

    தினேஷ் கார்த்திக்

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 ஒப்பந்தத் தொகை- ரூ. 53,42,672

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

    புவனேஸ்வர் குமார்

    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 56,83,848

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 27,14,056

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,18,06,027

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத் தொகை - ரூ. 29,27,700

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,41,75,000

    அஸ்வின்

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 52,70,725

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 92,37,329

    ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,01,25,000

    ரோகித் சர்மா

    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்காக போட்டி சம்பளம் - ரூ. 56,96,808

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்காக போட்டி சம்பளம் - ரூ. 30,70,455

    இலங்கை நிதாஹாஸ் கோப்பைக்கான போட்டி சம்பளம் - ரூ. 25,13,442

    ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத்தொகை - ரூ. 29,27,700

    விராட் கோலி

    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் - ரூ. 65,06,808

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டிக்கான சம்பளம் - ரூ. 30,70,456

    ஐசிசி தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

    சாஹல்

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான சம்பளம் - ரூ. 25,05,452

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 53,42,672

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

    ஷிகர் தவான்

    ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,12,23,493

    இலங்கை தொடருக்கான சம்பளம் - ரூ. 27,00,000

    அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,41,75,000
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #BCCI #Sreesanth
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசந்த். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பானை வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஸ்ரீசந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது.

    2015-ம் ஆண்டு பாட்டியாலா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீசந்த் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஸ்ரீசந்த் மீதான வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்கவில்லை.

    இதனால் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் மனுதாக்கல் செய்தார். அப்போது பிசிசிஐ விதித்துள்ள வாழ்நாள் தடையை நீக்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச்-ல் பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவு செல்லாது என அறிவித்தது.



    இந்நிலையில் பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழங்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்த்ரசுட் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

    ஸ்ரீசந்த் தனது மனுவில், நான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன். இதுவே போதுமான தண்டனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை.

    ஆனால் நேற்றுடன் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை.

    சொந்த மண்ணில் பல்வேறு அணிகளை வீழ்த்திய இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியபோது தொடரை 1-2 என இழந்தது. அப்போது அதிக போட்டிகள் காரணமாக பழு அதிகமானது. அதனால் விளையாட முடியவில்லை என்று கூறப்பட்டது.

    இதனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரின்போது டி20, ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழ்நிலை பழக்கப்பட்டு விடும் என்று கூறியது.

    அதன்படியே பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் சாக்குபோக்கு சொல்ல முடியாது. இதற்கிடையே விராட் கோலி முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

    இந்திய அணி 3-வது போட்டியில் வருகிற சனிக்கிழமை (9-ந்தேதி) நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும்.



    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்க இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் (பந்து வீச்சு), டிரெவோர் பென்னி (பீல்டிங் கோச்) ஆகியோரி அதிரடியாக நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி மானேஜராக நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்பின் சஞ்சங் பாங்கர் பேட்டிங் கோச்சராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தியா பேட்டிங் மற்றும் ஸ்லிப் கேட்ச் ஆகியவற்றில் பலவீனமாக இருப்பதால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பிசிசிஐ சார்ந்த பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகிக்கக் கூடாது. அரசியல்வாதிகள், எம்பிக்கள் உயர் பதவியில் இருக்கக்கூடாது போன்ற முக்கிய ஷரத்துக்கள் பரிந்துரையில் இடம் பிடித்திருந்தது.

    லோதா தலைமையிலான பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை நடைமுறை படுத்த வினோத் ராய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவால் லோதா பரிந்துரையை அமல்படுத்த முடியவில்லை.

    பிசிசிஐ ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கக்கூடாது போன்ற சில பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பரிந்துரைகளை அமல்படுத்ததாமல் இருந்தது.

    இந்நிலையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, பதவிக்காலம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி குஜராத் மாநிலத்தில் உள்ள குஜராத், சவுராஷ்டிரா, பரோடா மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, விதர்பா, மகாரடிஷ்டிரா மாநிலத்திற்கு முழு உறுப்பினர் பதவி நீடிக்கும்.

    அதிகாரிகள் தலா மூன்று வருடங்கள் என இரண்டு முறை தொடர்ச்சியாக பதவி வகிக்கலாம். அதன்பின் இடைவெளி விட்டு இன்னொரு முறை பதவி வகிக்கலாம்.
    ரஞ்சி டிராபியில் மேலும் 9 அணிகள் இடம்பிடித்து 37 அணிகள் உள்ளூர் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்கள் இணைந்துள்ளன. #BCCI
    வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அணிகளுக்கு ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி கொடுக்கப்பட்டதால் இந்த சீசனில் 37 அணிகள் பங்கேற்கின்றன. அத்துடன் இளையோர் கிரிக்கெட் தொடரிலும் விளையாட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் உள்ளூர் தொடர்களில் 2000 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

    சீனியர் பெண்களுக்கான சேலஞ்சர் டிராபி ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கான துலீப் டிராபி ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    தேசிய ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 20-ந்தேதி வரை 31 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 160 போட்டிகள் நடைபெறும்.

    ரஞ்சி டிராபி நவம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதிலும் 160 போட்டிகள் நடைபெறும்.



    தேசிய டி20 சாம்பியன்ஷிப்பான சையத் முஷ்டாக் அலி டிராபியில் 140 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதுபோக 23 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 302 போட்டிகளும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 286 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

    சீனியர் பெண்கள் அணி 23 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 292 போட்டிகளிலும், அத்துடன் 295 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.
    இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற பிசிசிஐ மற்றும் பிசிசி முயற்சி எடுக்க வேண்டும் என்று மியான்தத் தெரிவித்துள்ளார். #INDvPAK
    கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்குப்பின் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரைத்தான். மிகவும் பரபரப்பானதாக விளையாடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது இருநாடுகளுக்கிடையிலான பிரச்சனையால் முடங்கி போய் கிடக்கிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடைபெற எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இணைந்து மத்திய அரசுகளை சம்மதிக்க வைத்து தொடரை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தானும் ஒரே கோர்ட்டில் நின்று இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு மத்திய அரசுகளை சம்மதிக்க வைக்க இதுவே சரியான நேரம்.



    இந்தியாவும் பாகிஸ்தானும் இருநாட்டு தொடரில் விளையாடாவிடில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அல்லது ஐசிசி கொண்டு வர இருக்கும் லீக்கின் நோக்கம் என்ன?. இரண்டு நாடுகளும் பிரச்சினைகள் குறித்து பேசி முடிவிற்கு வந்தால், ஆஷஸ் தொடரை மிகப்பெரிய தொடராக இருக்கும்.

    அரசியல் தொடர்பான பிரச்சினை பெரிய விஷயம் அல்ல. கடந்த காலங்களில் நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான தீவிரமான பிரச்சினை இருக்கும்போதே விளையாடியுள்ளோம். அது இருநாடு உறவிற்கும் உதவியது’’ என்றார்.
    உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiaCricketFans #ICC #BCCI #IPL

    புதுடெல்லி: 

    உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 

    கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் தான் உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



    இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். #IndiaCricketFans #ICC #BCCI #IPL
    இந்திய ‘ஏ’ அணிக்கு அதிக அளவிலான தொடர்கள் இல்லாததால், பிசிசிஐ-க்கு தலைமை பயிற்சியாளர் டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். #Dravid
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் நீண்டு நாட்களுக்கு இந்தியா ‘ஏ’ அணிக்கு போட்டியில்லை. இளம் வீரர்கள் அவரது விளையாட்டை சீரான வழியில் தொடர அதிக அளவிலான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் பிசிசிஐ-க்கு டிராவிட் கோரிக்கை விடுத்திருந்தார். ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்று ஜூலை மாதம் இறுதியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.



    அதேபோல் இந்தியா ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிக்கும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணிக்கும், ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகளுக்கு இடையிலான தொடருக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. #BCCI #CentralContractPayments

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.

    இந்த ஊதிய உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

    இன்று இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியானது.

    இதனிடையே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து நேற்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுத்தனர். அப்போது வீரர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ளது. இதனால் வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். #BCCI #CentralContractPayments
    நான்கு முறை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு விருது கிடைத்தும், இந்திய ‘ஏ’ அணியல் இடம் கிடைக்காத வீரர். #BCCI
    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1986-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி பிறந்தவர் ஜலாஜ் சக்சேனா. தற்போது 31 வயதாகும் இவர் கேரளா அணிக்காக விளையாடி வருகிறார். 12 வருடத்திற்கு முன் தனது 19 வயதில் கேரளா அணியில் அறிமுகம் ஆனார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் 99 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதம், 28 அரைசதங்களுடன் 5418 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.62 ஆகும். பந்து வீச்சில் 262 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 5 முறை 10 விக்கெட்டும், 15 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

    ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதற்காக நான்கு முறை பிசிசிஐ-யின் விருதை பெற்ற இவருக்கு இந்தியா ‘ஏ’ அணியில் கூட இடம்கிடைக்கவில்லை. இது சக்சேனாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இதுகுறித்து சக்சேனா கூறுகையில் ‘‘நீங்கள் விருதுகள் வழங்கி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு எந்தவித வெகுமதியும் இல்லை. கடந்த நான்கு வருடங்கள் நான் விருதுகள் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய ‘ஏ’ அணியில் கூட என்னை எடுக்காகது பற்றி பிசிசிஐ-யிடம் கேள்வி கேட்கவில்லை என்றால், அதில் எந்தவித பயனும் இல்லை. இந்த விஷயம் என்னை மிகவும் அவமதிக்குள்ளாக்கியுள்ளது. நான் மிகவும் மன ஆழுத்தத்துடன் உள்ளேன்.

    கடந்த நான்கு வருடமாக பிசிசிஐ உங்களுக்கு தொடர்ந்து விருது வழங்கி வருகிறது. ஆனால், உங்களை இதைவிட உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் பார்க்கவில்லை என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்கிறார்கள். இது அவமானத்திற்குரியதாக நினைக்கிறேன்’’ என்றார்.



    2017-18 சீசனில் 49 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்க இருக்கிறது. இந்த விருது பெங்களூருவில் அடுத்த வாரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை சிறந்த ஆல் ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×