search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்துக்கணிப்பு"

    மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எத்தகைய அம்சங்கள் தீர்மானித்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லோக்நிதி அமைப்பு சார்பில் சர்வே நடத்தப்பட்டது.

    குறிப்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற வி‌ஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

    அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பா.ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது. வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.



    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.

    மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

    பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.

    ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.

    யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.

    பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.

    தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-

    மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
    நாக்பூர்:

    நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும். மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    பேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன். பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.
    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். #TamilnaduCorruption
    புதுடெல்லி:

    இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.


    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவது தெரியவந்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.

    2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  #TamilnaduCorruption
    பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.

    தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.

    இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.


    இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குகள் சிதறும் சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்போம் என்பது பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் “தந்தி” டி.வி.யின் இந்த கருத்து கணிப்பு விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “மக்கள் யார் பக்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணலாம். #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    ×