search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104227"

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். #GajaCyclone #EdappadiPalaniswami #CentralTeam
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழு, இன்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    அப்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எப்போது ஆய்வு செய்வது? அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.   இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு அதிகாரிகளுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.



    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடலாம் என தெரிகிறது.

    கஜா புயல் ஏற்படுத்திய சேத  விவரங்களை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.   #GajaCyclone #EdappadiPalaniswami  #CentralTeam
    சர்கார் பட விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். #Sarkar #EdappadiPalaniswami #MinisterKadamburRaju
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். #Sarkar  #EdappadiPalaniswami #MinisterKadamburRaju
    இலங்கையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலக இந்து மாநாடு நடைபெறும் என அந்நாட்டின் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். #Srilankahost #WorldHinduCongress
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாண அபிவிருத்தி துறை மற்றும் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா இந்து சமயம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பாக அத்துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பழுதடைந்துள்ள இந்து கோவில்கள் மற்றும் அவற்றின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களை புனரமைப்பதற்கான பட்டியலை சமர்ப்பிக்குமாறு இந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். 

    இந்த ஆலோசனையின்போது இலங்கையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலக இந்து மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Srilankahost #WorldHinduCongress 
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.



    இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், “சீன அதிபருடன் நீண்ட நேரம் நடந்த உரையாடல் சிறப்பானதாக அமைந்தது. வர்த்தக முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசினோம். ஜி20 மாநாட்டின்போது நடைபெற உள்ள சந்திப்பு தொடர்பாக பேசினோம். வடகொரியா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

    அர்ஜென்டினாவில் ஜி20 மாநாட்டின் இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் டிரம்ப், ஜி ஜின்பிங் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
    மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #Petrol #Diesel #GST
    சண்டிகார்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சண்டிகாரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.



    ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறையும். இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கான தங்கள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

    ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பா.ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamdasAthawale #Petrol #Diesel #GST 
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.

    அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் சிறப்புரையாற்றி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்வது, டிசம்பர் 10&ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். #VCK
    கேரளாவில் சிவகிரி மடத்தில் நடைபெறும் நாராயணகுரு பூஜையில் கலந்துகொள்ளும் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். #Amitshah #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.

    சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் இன்று பிற்பகல் சிவகிரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்கிறார்.

    சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு இன்று மாலை நடைபெறும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் நாளை டெல்லி புறப்படுகிறார்.

    சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமித்ஷா கேரளா வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Amitshah #BJP


    ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசினார். #GeneralElections2019 #NitishKumar #AmitShah
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது.

    பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் தான் பெரிய கட்சி என்பதால் மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அதிக  தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் பாஜகவும் கணிசமான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி செயல்பாடுகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.  #GeneralElections2019 #NitishKumar #AmitShah
    சபரிமலை மண்டல பூஜையின்போது வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. #SabarimalaTemple #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டபோது ஏராளமான பெண்கள் சாமி தரிசனத்திற்காக சபரிமலைக்குச் சென்றனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

    மேலும் சபரிமலைக்குச் சென்ற 50 வயதுக்குட்பட்ட இளம்பெண்களை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சபரிமலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சபரிமலையே போர்க்களம் போல் மாறியது.



    இந்த நிலையில் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழாவுக்காக அடுத்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜையின் போது 41 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இந்தநிலையில் இளம்பெண்களும் அதிக அளவு சபரிமலைக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களை பாதுகாப்பாக சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

    இதைத் தொடர்ந்து மண்டல பூஜையின் போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் பற்றி ஆலோசனைக்கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, ஏ.டி.ஜி.பி. அனில் காந்த், ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

    இந்த கூட்டத்தில் மண்டல பூஜையின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

    குறிப்பாக சபரிமலை சன்னிதானம் வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு ஒரு நாளுக்கு மேல் தங்க அனுமதிக்க கூடாது. சன்னிதானத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க ஒரு நாளைக்கு மேல் அறைகளை வழங்க கூடாது போன்றவை பற்றி போலீசார் பரிந்துரை செய்தனர்.

    ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலை வந்த பக்தர்கள் பல நாட்கள் அங்கேயே தங்கியதால் தான் வன்முறை சம்பவங்கள் நடந்தது. அது தொடர்பாக இதுவரை 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் புதிய உத்தரவுகளை மாநில அரசு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple #PinarayiVijayan



    தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது.

    மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.



    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

    இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam

    தமிழகம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுவையில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RedAlertWarning #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அன்றைய தினம் 20 முதல் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கூடுதலாக மழைபெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியான புதுவையிலும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை 4 மணிக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் மாவட்ட கலெக்டர், அரசு துறையின் செயலர்கள், இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. #RedAlertWarning #Narayanasamy

    தமிழகத்தில் கனமழை குறித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.



    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதீத கனமழையால் ஏரி, ஆறுகளில் மதகுகள் அல்லது கரை உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீர்செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கனமழையில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    ×