search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக்"

    வளைகுடா நாடுகளான ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரான் பெட்ரோலிய துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #Iraq #Iran
    டெஹ்ரான் :

    எண்ணெய் வளம்  மிக்க ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரானிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை எதிரி நாடுகளாக இருந்த இவ்விரண்டு நாடுகளும் திடீரென  தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளது முக்கிய நிகழ்வாகும்.

    ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கிர்குக் பகுதியில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யை ஈராக் டேங்கர் லாரிகள் மூலம்  ஈரானுக்கு அனுப்பி வைக்கும். அதை ஈரான்,  தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும். மீண்டும், ஈரான் அதே அளவிலான எண்ணெய்யை ஈராக்கின் தெற்கு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கும்.

    கடந்த வருடம் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் இருந்த போராளிகளை விரட்டி, ஈராக் சுதந்திரமடைய ஈரான் முக்கிய பங்காற்றியது. இதன் பின்னர், அதிகமான எண்ணெய் வளம் மிக்க ஈராக்கின் கிர்குக் பகுதியில் தங்களது வர்த்தக ஆதிக்கத்தை ஈரான் வலுப்படுத்த தொடங்கியுள்ளது.

    தினம் தோறும் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரல்கள் வரை ஈராக்கில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஈரானில் தெற்கு பிராந்தியமான டராஹ் ஷாஹ்ர் பகுதிக்கு சென்றடையும். காலப்போக்கில் இரு நாடுகளுக்கு இடையில் குழாய் பதித்து எண்ணெய்யை கொண்டு செல்லவும் இவ்விரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி அந்நாடின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், அண்டை நாடான ஈராக்குடன், ஈரான் நெருங்கி செல்வது வளைகுடா எண்ணெய் பிரதேசங்களில் அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிகத்துக்கு ஒரு போட்டியாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். #Iraq #Iran
    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவரது மார்பில் இருந்து 9 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் அவருக்கு புதுவாழ்வு அளித்துள்ளனர். #doctorsmadelife
    சண்டிகர்:

    பல மாதங்களாக மூச்சு விடமுடியாமல் தவித்து வந்த ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவருக்கு ஃபோர்ட்டீஸ் நினைவு ஆரய்ச்சி மருத்துவமனையில் மார்பில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய மார்பில் இருந்து 9 கிலோ அளவிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர் உத்ஜித் திர் கூறுகையில், ‘தியீ அலீமின் மார்பில் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி அவரை மூச்சு விட விடாமல் செய்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு பலனளிக்கவில்லை. தியீ அலீம் ஃபோர்ட்டீஸ் மருத்துவமனையை அணுகும்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார்.

    கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மார்பில் இருந்து இரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டிருந்த 9 கிலோ எடையுள்ள கட்டியை நீக்கினோம். இப்போது அவர் நல்ல முறையில் சுவாசித்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’  என தெரிவித்துள்ளார். #doctorsmadelife
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா அல்-சத்ர் பிரதமர் ஹைதர் அல் அபாடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ClericSadrmeetsIraqPM #coalitiongovernment
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

    தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

    அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது.

    இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார். மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா அல்-சத்ர் பிரதமர் ஹைதர் அல் அபாடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஹைதர் அல் அபாடி தலைமையில் புதிதாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

    இதர கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி மக்களுக்கு தேவையான பாதுக்காப்பு, வளம் மற்றும் சிறந்த நல்லரசை கொடுக்கும் ஆட்சியாக இந்த கூட்டணி அரசு அமையும் என இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டார்.

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டின் மிரட்டல்களை கையாண்டதிலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கியதிலும் அபாடி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் அவரது தலைமையிலான புதிய கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு இருக்காது என தெரிகிறது.

    எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான 90 நாட்களுக்குள் புதிய அரசு அமைந்தாக வேண்டும் என்னும் நிலையில் இதர கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் பெற்று போதுமான பெரும்பான்மையுடன் புதிய அரசு அமைக்க சற்று தாமதம் ஆகலாம் என ஈராக் ஊடகங்கள் கருதுகின்றன. #ClericSadrmeetsIraqPM  #coalitiongovernment
    ×