search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதேபோல், வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

    கஜா புயல் பாதிப்பால், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல், திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #ChennaiRain #HeavyRain #Schools #Holiday

    தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #LowPressure #HeavyRain #ChennaiRain
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.



    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    பலத்த காற்று வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தெற்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடி பகுதிகளில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது. வேதாரண்யம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வலங்கைமான், கும்பகோணம், சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது.   #LowPressure #HeavyRain #ChennaiRain
    புதுவையில் கணவன்- மனைவியை கொன்று கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).

    பாலகிருஷ்ணன் மூத்த வக்கீல் ஆவார். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள்.

    கணவன் - மனைவி மட்டும் புதுவையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அவருடைய வீடு தரை தளத்துடன் சேர்த்து 3 மாடிகள் கொண்டதாகும்.

    இதில் தரைத்தளத்தில் கணவன் - மனைவி வசித்து வந்தனர். முதல் தளம் காலியாக இருந்தது. எனவே வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பு பலகையை தொங்க விட்டு இருந்தனர்.

    2-வது மாடியில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் முன்பக்க விளக்கு போடவில்லை.

    எனவே, மேல் வீட்டினர் விளக்கை போட்டு விட்டு சென்றனர். இன்று காலை அவர்கள் கீழே வந்து பார்த்த போது வீட்டில் யாருமே நடமாட்டம் இல்லாதது போல் இருந்தது.

    பாலகிருஷ்ணன் புதுவை முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். எனவே, தேனீ.ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் நேரில் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

    அப்போது பாலகிருஷ்ணனும், அவரது மனைவி ஹேமலதாவும் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    யாரோ மர்ம மனிதர்கள் அவர்களை தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்று அங்கிருந்த நகை - பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். எவ்வளவு நகை- பணம் கொள்ளை போனது? என்பது தெரியவில்லை.

    மேல் மாடியை வாடகைக்கு விடுவது பற்றி அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு இருந்ததால் வீட்டை வாடகைக்கு கேட்பது போல் வந்து அவர்களை கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    நேற்று மாலையில இந்த கொலை நடந்திருக்கலாம் எனதெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை அருகே காற்றழுத்தம் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    சென்னை:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிவரை பரவியுள்ளது.

    இது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்தமாக மாறி தமிழகத்தையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதியில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை காற்றழுத்தம் புதுவையை நெருங்கும். அதன்பிறகு நாகை-வேதாரண்யம் நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 60 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தெற்கு மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காற்றழுத்தம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

    மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் மழை தூரியது. #Rain

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் அங்கு பணியாற்றும் வெளிமாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ந் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



    இதனால் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அமைந்தது.

    இதே போல் புதுவையிலும் வருகிற 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருப்பதால் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை அளிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் புதுவை அரசின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். இதற்கு பதிலாக டிசம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.

    இது, புதுவை, காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்து உள்ளார்.

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் புதுவையில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment

    புதுவை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி மீனாகுமாரி (வயது 35). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீனாகுமாரி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதற்கிடையே அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மீனாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மீனாகுமாரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் அவரது உடலை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகர் கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் தாஜன் (வயது52). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள தாஜன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் கேட்டு மதுகுடித்து வந்தார். அதுபோல் தாஜன் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த தாஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் போலி லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி லாட்டரியை முற்றிலும் ஒழிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவை ஏற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் போலி லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற் கொண்டு செய்து வருகிறார்.

    நேற்று ஒதியஞ்சாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குலுக்கலில் ஒரு நம்பர் விழுந்தால் ரூ.50-ம், 2 நம்பர் விழுந்தால் ரூ. 500-ம், 3 நம்பர் விழுந்தால் ரூ.13 ஆயிரம் பரிசு தருவதாக ஒருவர் தினமும் பெரிய மார்க்கெட் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மாறனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பெரிய மார்க்கெட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர்.

    அப்போது பூக்கடை பகுதியில் ஒருவர் கையில் துண்டு சீட்டுகளை வைத்து கொண்டு செல்போனில் பேசியபடி இருந்ததை போலீசார் கண்டனர்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் சிறு வியாபாரிகளுக்கு நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அவர் கடலூரை சேர்ந்த சண்முகம் (வயது 43) என்பதும், அவர் தினமும் கடலூரில் இருந்து புதுவை பெரிய மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 நம்பர் போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 14,500 மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தனர்.

    புதுவை அருகே பன்றி காய்ச்சலால் 9 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் கீழ்கூத்தபாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாபகேசவன் (வயது 35). புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் சுகன்யா மீண்டும் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் புதுவை ராஜீவ்காந்தி மகளிர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சுகன்யாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சுகன்யா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் இறந்து போனது. தாயும், சிசுவும் இறந்ததை அறிந்து சுகன்யாவின் கணவர் பஞ்சாப கேசவன் குடும்பத்தினர் கதறி அழுதனர். பன்றி காய்ச்சலால் 9 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் கீழ்கூத்தபாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுவை அருகே சாப்பிட்ட போது தொண்டையில் உணவு சிக்கி அரசு ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் சின்னையன்பேட் அய்யனார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண ராஜி. இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு அச்சகத்தில் மஸ்தூர் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி எழிலரசி இறந்து விட்ட நிலையில் இவர்களது மகன் பிரவீன்ராஜ் வெளியூரில் தங்கி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு பிரவீன் ராஜ் தனது தந்தை கிருஷ்ணராஜிக்கு போன் செய்தார். ஆனால், கிருஷ்ணராஜ் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன்ராஜ் அருகில் உள்ள தனது சித்தப்பா குப்புராஜிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

    இதையடுத்து கிருஷ்ணராஜியின் வீட்டுக்கு குப்பு ராஜ் சென்று பார்த்தார். அப்போது சாப்பாட்டு அறையில் கிருஷ்ணராஜ் சாய்ந்த நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணராஜை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கிருஷ்ணராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கிருஷ்ணராஜ் சாப்பிட்டு கொண்டிருந்த போது, தொண்டையில் உணவு சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் பெய்து வரும் கனமழையால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #Rain #puducherryRain #HolidayForSchools
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதத்திற்கு பிறகும் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்தது.

    புதுவையில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கோடை காலத்திற்கு நிகரான வெயில் அடித்தது. வழக்கமாக இந்த மாதங்களில் புதுவையில் காற்று வீசும், தென் மேற்கு பருவ மழை பெய்யும்.

    ஆனால், ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான மழை பெய்தது. பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலே அடித்தது. இதனால், செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையாவது பெய்யுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதும் கோடை வெயிலை விட கூடுதலான உக்கிரத்துடன் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    அக்டோபர் மாதத்தின் தொடக்க நாட்களிலும் வெயிலின் தாக்கமே இருந்தது. இதே நிலையே நேற்றும் நீடித்தது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் பருவம் மாற தொடங்கியது.

    வானில் கருமேகங்கள் தென்பட தொடங்கியது. லேசான குளிர்ந்த காற்றும் வீச தொடங்கியது. ஆனால், மழை பெய்யவில்லை. இரவு 10 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    இரவு முழுவதும் அவ்வப்போது லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. அதிகாலை 4 மணியளவில் மழையின் வேகம் கூடியது. கனமழை பெய்ய தொடங்கியது.

    தொர்ந்து காலை 6 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து லேசான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்த வண்ணம் உள்ளது. இதே நிலையே புதுவையின் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நிலவுகிறது.

    மழை காரணமாக நகரத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க தொடங்கி உள்ளது. சிவாஜி சிலை பகுதியில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் இந்திராகாந்தி சிலை, புஸ்சி சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காலை 8.15 மணிக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று விட்டனர். பள்ளி சென்ற மாணவர்கள் மீண்டும் வீடு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகினர். #Rain #puducherryRain #HolidayForSchools
    தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TamilNaduRains
    சென்னை:

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருத்தாசலம்,  நிலக்கோட்டை பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வாலாஜா, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduRains
    ×