search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104469"

    சரவணம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    போலீசாரின் தீவிர விசாரணையில் சின்னவேடம் பட்டியில் 3 பேர் சிக்கினர்.

    விசாரணையில் அவர்கள் கணபதி ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகித் குமார் (22), உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நதிஷ் குமார்(26), மணியகாரம்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார்(22) என்பது தெரிய வந்தது.

    இவர்களில் மோகித் குமார், நவீன்குமார் இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவார்கள். நதிஷ் குமார் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மோகித் குமார், நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார்.

    அவர்கள் காரில் வைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கைதான 3 பேரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தவர்கள் ஆவர்.

    கோவையில் கஞ்சா விற்று வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இதனால் கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓன்றிரண்டு பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சில மாணவர்கள் தவறான நண்பர்களின் பழக்கத்தால் கஞ்சாவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் யார்- யாருடன் நண்பர்களாக பழகுகின்றனர்? வெளியில் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது? என்பதையும் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரையில் 6 கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்வது நடந்து வருகிறது.

    குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, கீரைத் துறை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது.

    இந்த நிலையில் பீ.பி. சாவடி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போலீஸ்காரர்கள் ராமலிங்கம், சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது சிட்டா லாச்சி நகர் சந்திப்பில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பேரையூர், காளாம் பட்டியைச் சேர்ந்த அல்லிக் கொடி (46) என்பவரையும், திருப்பரங்குன்றதைச் சேர்ந்த அருண்பாண்டி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

    அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பாரதி தெருவில் நேற்று இரவு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருப்பதாகவும், அந்த வாலிபர்களிடம் சிலர் ரகசியமாக ஏதோ பொருட்கள் வாங்கி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களது சட்டை பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் கோரிமேடு வீமன் நகரை சேர்ந்த அருண் (வயது 29), நைனார் மண்டபம் புதுவை - கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்த ரபீஷ் (22) மற்றும் முத்துப்பிள்ளை பாளையம் விமல் (23) என்பதும் இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை பணம் ரூ.9 ஆயிரம், 5 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    கொடைக்கானலில் காரில் கஞ்சா கடத்திய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை குறி வைத்து சிலர் கஞ்சா, போதை காளான் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். போலீசாரின் கெடுபிடியால் தற்போது போதை காளான் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டது.

    இருந்தபோதும் கேரள மாணவர்கள் இங்குள்ள ரிசார்ட்டுக்கு வந்து மறைமுகமாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகின்றனர். கொடைக்கானல் போலீசார் ரோந்து சென்றபோது வட்டக்கானல் சாலையில் ஒரு கார் வந்தது. அதில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்ணுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் தங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் ஆகியோர் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர்ஷா (வயது 23), அன்சர் (24), ராகுல் (21) என தெரிய வந்தது. மேலும் அவர்களின் பையை சோதனையிட்டதில் 3 பொட்டலங்களில் 4 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சாவை கடத்தி வந்தனரா? அல்லது இங்கிருந்து கஞ்சாவை வாங்கி சென்று விற்பனை செய்வதற்கு சென்றனரா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புழல் ஜெயிலில் இன்று அதிகாலை 100 போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.

    அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.

    செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
    கஞ்சா விற்ற கணவன் -மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை கீழமாசிவீதி தேரடி அருகே கஞ்சா விற்கப்படுவதாக விளக்குத் தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோமு தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்றதாக கீரைத் துறை மேலதோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (43), மேலஅனுப்பானடி ஸ்ரீதரன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5500 மற்றும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

    கூடல்புதூர் போலீசார் கரிசல்குளம் ராமுனி நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கண்மாய் தெருவைச் சேர்ந்த முத்தையா, அவரது மனைவி மீனா (55) ஆகி யோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.7700 பறிமுதல் செய்யப் பட்டது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Egmore #RailwayStation
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி சென்ற சிர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் வந்தது.

    அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கண்டனர். அந்த பை குறித்து விசாரித்தபோது யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அந்த பைக்குள் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறுகையில், “இந்த ஆண்டு(2018) இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பிலான 187 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கஞ்சா பையை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
    வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    நாகர்கோவிலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2¼ கிலோ கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து பின்னணியில் உள்ள கும்பல் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார். போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா கும்பலை கைது செய்து வருகிறார்கள்.

    வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெனட் சேவியர் தலைமையிலான போலீசார் வடசேரியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பெயர் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சபரி (வயது20), செந்தில்குமார் (34), அருகுவிளையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா (32) என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் 2 ¼ கிலோ கஞ்சா இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னணியில் உள்ள கஞ்சா கும்பல் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயண மூர்த்தி மற்றும் சிப்காட் போலீசார் புது கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலீஸ்வரன் ஏரிகரையோரம் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒரு பெண் உள்பட 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

    அவர் புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்த வாலிபர் தங்கமணி, தப்பி ஓடியது அவரது தாய் சாந்தி, தம்பி நடராஜன் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோடம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இரண்டு பேரை வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துருபிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சூளைமேடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, ராமு என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சுமி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சேலையூரில் கஞ்சா வைத்திருந்ததாக 5 கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிக்கரணை:

    சேலையூர், நியூபாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு தங்கி இருந்த 5 பேர் கஞ்சா போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, கஞ்சா வைத்திருந்ததாக யோகேஷ், மெல்வின், ராஜு, கிருஷ்ணன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள். ஒருவர் கலைக்கல்லூரி மாணவர்.

    இவர்கள் அனைவரும் இந்த வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×