search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷங்கர்"

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் 4டி டீசரை படக்குழு வெளியிட்டது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார்.



    இந்த நிகழ்ச்சியின் போது படத்தின் 4டி டீசரை படக்குழு ஒளிபரப்பியது. 3டி கண்ணாடி மூலம் அரங்கில் இருந்த அனைவரும் இந்த டீசரை கண்டுகளித்தனர். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் இன்று நடக்கிறது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. 

    உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.



    ரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்களைத் தாண்டி பல மட்டங்களிலும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றி பெற்றதால், படத்தின் டிரெய்லர் வெளியீடு ஆவலுடன் எதிர்நோக்கப்பட்டது. இணையத்தில் டிரெய்லர் இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.

    முன்னதாக காலை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பிரத்யேகமாகப் படத்தின் சில பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்படுகிறது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது.

    எனவே இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகி இருக்கிறார்கள். அர்னால்டும் ஆர்வமாக இருந்து இருக்கிறார். ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்குமான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போயிருக்கிறது.



    அடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகி இருக்கிறார்கள். அவர் சங்கரிடம் இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள். இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது.

    அவரது மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார். 2.0 படத்தில் மொத்தம் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். #2Point0 #Rajinikanth #KamalHaasan #Shankar

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ஐந்தாம் விசை வருவதாக குறிப்பிட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #2Point0
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள படம் `2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தின் டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், அக்‌‌ஷய் குமார் ஏற்றுள்ள கதாபாத்திரம் தனது கையில் உடைந்த செல்போனை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

    மேலும் “ஐந்தாம் விசை வருகிறது” எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ‌ஷங்கர். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதால் தற்போது படத்தின் மீது புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயற்பியல் உலகில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த அணுக்கரு விசை மற்றும் தளர்ந்த அணுக்கரு விசை என நான்கு விசைகளே அகில விசைகளாக அறியப்பட்டு வருகின்றன.

    பிரபஞ்சத்தில் ஐந்தாவதாகவும்கூட ஒரு விசை இருப்பதாகப் பல்வேறு கோட்பாடுகள் உலவுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளார்கள். இப்படியான சூழலில் இந்தப் படத்திற்கு ஐந்தாம் விசை தியரியைக் கனெக்ட் செய்திருக்கும் காரணத்தால் அதுகுறித்த படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. #2Point0 #Rajinikanth #FifthForce

    சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth


    ரஜினி தற்போது `2.0' மற்றும் `பேட்ட' படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `2.0' படத்தின் டிரைலர் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்பாக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் `2.0'. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் ராஜாளி, எந்திர லோகத்து சுந்தரியே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போனுக்கு அடிமையாக இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    விஜய் சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தையும், படக்குழுவையும் பாராட்டியுள்ளார். #96TheMovie #Ratsasan
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். 

    அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
    இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

    `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின் அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கே உரியதாகும்' இவ்வாறு கூறியுள்ளார். #96TheMovie #Ratsasan

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குநர் ஷங்கர் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் 2.0. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் நிறுவனங்களால் தாமதம் ஆனது.

    பல நிறுவனங்களிடம் கிராபிக்ஸ் பணிகள் கைமாறி தற்போது வேறு ஒரு நிறுவனத்திடம் கிராபிக்ஸ் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் தள்ளிப்போடாமல் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்று சங்கர் உறுதியாக இருக்கிறார்.

    75 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள்.



    3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் ‌ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை சங்கர் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என்பதுதான் அது. கிராபிக்ஸ் பணி முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசைக்கு குறைந்தது ஒரு மாதமாவது தனக்கு வேண்டும் எனக் கேட்டிருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். #2Point0 #Rajinikanth

    இம்சை அரசன் பட விவகாரத்தில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்து வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். #ImsaiArasan #Vadivelu
    இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இவர்கள் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இது.

    சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவி னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து வந்தது .

    இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் ‌ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.



    இந்த முடிவால் வடி வேலு தரப்பினர் அதிர்ச் சியடைந்தனர். தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் வடிவேலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    “இம்சை அரசன் 24 ம் புலிகேசியில் நடிக்க 2016-ம் ஆன்டு ஜூன் 1-ந்தேதியில் ஒப்புக் கொண்டேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங் களில் நடிப்பதை தவிர்த்தேன்.

    ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத்தொடங்காமலே காலம் தாழ்த்தினர். தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.

    இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. அத்துடன், எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

    நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016-2017ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந் தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

    பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற் கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.



    ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப் பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

    இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக் கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப் பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத் தியுள்ளது.

    வடிவேலுவுக்கு தயாரிப் பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. இதுகுறித்து வடிவேலுவின் பதில் அறிய அவரை தொடர்புகொண்டபோது அவர் ‘அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வர வில்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்தி இதுதொடர்பாக எனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை’ என்றார். #ImsaiArasan #Vadivelu 

    ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் நேற்று காலை வெளியாகிய நிலையில், ஒரு நாளில் படத்தின் டீசர் தமிழ் மற்றும் இந்தியில் பெரும் சாதனை படைத்துள்ளது. #2Point0 #Rajinikanth
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியான நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியது. நேற்று காலை 9 மணிக்கு வெளியான 2.0 தமிழ் டீசரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் வேகமாக ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் டீசர் என்ற பெருமையை 2.0 படைத்துள்ளது.

    மேலும் படத்தின் டீசரை சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்தியில் 2.0 டீசரை 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 4.5 லட்சம் பேர் டீசரை லைக் செய்துள்ளனர். தெலுங்கில் இந்த டீசரை இதுவரை சுமார் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

    மொத்தமாக இதுவரை 2.0 டீசரை 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். 



    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என மாபெரும் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. #2Point0 #Rajinikanth 

    2.0 படத்தின் டீசர்:


    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் கதை பற்றிய சிறய விளக்கத்தை கீழே பார்ப்போம், #2Point0 #Rajinikanth
    உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில் படம் நவம்பர் 29- ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. 

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.



    2.0 படத்தின் டீசரில் இருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. தொழில்நுட்ப உலகத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணமாக உள்ளன. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சியானது அபரிமிதமானது. அந்த வகையில் செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.

    சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.

    மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற தான் உருவாக்கி சிட்டி ரோபோவை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும், பறவை வில்லனுக்குமான மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம். இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போன் அடிமையாகி இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது.



    எனினும் அதனை உறுதிப்படுத்த நவம்பர் 29 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். 

    படத்தில் பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார். படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படும் என்கிறார்கள். #2Point0 #Rajinikanth #AshayKumar

    ×