search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷங்கர்"

    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் `விஸ்வரூபம்-2' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான `இந்தியன்-2' துவங்குவது பற்றி கமல் மனம்திறந்துள்ளார். #KamalHaasan #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில் `விஸ்வரூபம்-2' ஆகஸ்ட் 10-ல் ரிலீசாக இருக்கிறது. `விஸ்வரூபம்-2' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    கமல் தற்போது, அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், `இந்தியன்-2' படம் குறித்து மனம்திறந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, தான் ஷங்கர் இயக்கும் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் இறுதியில் முடிவடைவதால், அக்டோபரில் கமல் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷங்கர் தற்போது `2.0' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் பிசியாகி இருக்கிறார். `2.0' படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. எனவே அக்டோபரில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்வது உறுதியாகி இருக்கிறது.



    படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் வர்ம கலையால் ஊழல்வாதிகளை வீழ்த்தும், இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. அதே கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் வருவதுபோல் இயக்குனர் ‌ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    முழுமையான அரசியல் படமாக இது இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    அதேநேரத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள `சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பிலும் கமல் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #KamalHaasan #Indian2

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் 2 எந்திரங்களுக்கு இடையேயான காதல் பற்றி எழுதியிருப்பதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறினார். #2Point0 #Rajinikanth
    பாடலாசிரியர் மதன் கார்க்கி எந்திரன் முதல் பாகத்துக்கு சில பாடல்களை எழுதினார். அதன் அடுத்த பாகமான 2.0-விலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டதற்கு ’எந்திரன்’ படத்துல பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன்.

    ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வரும் காதலை எழுதினேன். `2.0’ படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்’ என்று கூறி இருக்கிறார். இதன்மூலம் 2.0 படத்தில் ரஜினி, எமி இருவருமே காதல் செய்யும் எந்திரங்களாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.



    ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். #2Point0 #Rajinikanth

    இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு படத்தில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vadivelu #IA24P
    வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

    இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.

    சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.



    வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள். #IA24P #ImsaiArasan

    இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan
    ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.

    இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

    இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. 



    பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. 

    இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியால் படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடி வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. 

    கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் எடுத்து இருப்பதாகவும், அதனால் தான் கிராபிக்சுக்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட் ஏறியதாகவும் கூறுகிறார்கள்.



    படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளிப்போயுள்ள நிலையில், படம் வருகிற ஜனவரி 25--ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. 

    இந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் இயக்குநர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாததால், கிராபிக்ஸ் பணிக்கு மேலும் மெனக்கிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், பட்ஜெட்டில் மேலும் ரூ.100 கோடி கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth
    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த கதையை ரஜினியை வைத்து இயக்க நினைத்தேன் என்று கூறினார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும் போது " டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.



    எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்." என்றார். #TrafficRamasamy #SAChandrasekar

    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்றார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநரும், கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

    " படத்தின் இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.  



    இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் " என்றார். 

    ரஜினி நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய `காலா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

    இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. 2.0 ரிலீஸ் தள்ளிப்போனதால், காலா படம் ரிலீசாகியது.



    இந்த நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகி இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், பாடலாசிரியராக தாமரை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் அடுத்ததாக ‌ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

    எப்போதும் ஏ.ஆர்.ரகுமானுடனேயே பயணிக்கும் ‌ஷங்கர் இந்த முறை அனிருத்துடன் இணைகிறார். இந்த படத்தில் இன்னொரு ஆச்சர்யமும் நடக்க இருக்கிறது. படத்தில் ஒரு பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதுகிறார்.



    ‌ஷங்கர் படத்தில் தாமரை பாடல் எழுதுவதும் இதுதான் முதல்முறை. கமல்ஹாசனுடன் இணைந்தாலும் ‘இளமையும் புதுமையும் வேண்டும்’ என்று ‌ஷங்கர் முடிவு செய்திருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப கலைஞர்களை `இந்தியன்-2' வுக்காக சேர்க்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. #2Point0 #Rajinikanth
    உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

    ‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.



    சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.

    மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படம் என்கிறார்கள். பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார்.



    படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகனை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படுமாம். #2Point0 #Rajinikanth #AமshayKumar

    ×