search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகப்பரு"

    சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. முகப்பருவை போக்கும் இயற்கையான தீர்வுகள், தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.

    முகப்பரு உள்ளவர், ஜெல் வகை கிரீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். துரித உணவுகள், சாக்லேட், கேக், பிஸ்கெட் சாப்பிட்டால் முகப்பரு வரும்.

    அடிக்கடி முகத்தில் கைவைத்துக்கொண்டே இருந்தாலும் பருக்கள் அதிகமாக வரும். பரவவும் செய்யும். ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது ஃபேஸ் வாஷ் பவுடரால் முகத்தைக் கழுவுங்கள்.

    தலையில் பொடுகு, தலைமுடி சுத்தமில்லாமல் இருந்தாலும் பரு வரும். வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள். முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.

    * கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.

    * துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து  அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

    * வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

    * பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.
    வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.
    வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம். அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு - இவை மூன்றுமே முகப்பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.

    நீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் முகப்பபரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.

    திருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும். இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம். எண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் 'பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.

    அதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து 'பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம். அதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்களைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

    உணவில் மாற்றம்!

    பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை. ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.

    தவிர்க்க வேண்டியவை:

    மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.

    டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/ உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

    நலங்கு மாவு

    சோப்புக்குப் பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப் பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.
    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையும் செய்யக்கூடாது. முகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை, செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
    எண்ணெய் தன்மையுடைய சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். முகப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.

    பரு வந்தால் செய்யக் கூடாதவை

    * விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.
    * பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.
    * பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம்  முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.
    * பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.



    பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

    * நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.

    * ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.

    * முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.

    * ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.

    * பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.

    * வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.

    * வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.

    * கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    * சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    * கற்றாலை சருமத்திற்கு மிகவும் உகந்தது. கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில்  பேக் போடலாம். கற்றாலையில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.

    * வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.

    * அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

    * சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே  குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
    இன்றைய இளம் பெண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது முகப்பரு. முகப்பரு வந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    பரு முகத்தில் வருவதால், பருவக்கான கிரீமோ, பேக்கோ போட்டால் பரு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது. ஸ்கால்பில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு இறங்கி வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் பரு வருகின்றது. அதனால் பலருக்கு நெற்றியிலும் கன்னங்களிலும் பரு வருகிறது. எண்ணெய்ப் பசை சருமத்தால்: எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் என்றாலும், அதாவது நம் சருமத்தின் செபேஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.

    பரு வந்தால் என்ன செய்வது?

    * பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்!

    * பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து வாஷ் பண்ணி விட்டாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.

    * பரு இருந்தால் முகத்துக்கு சோப் போடக்கூடாது. சோப்பில் உள்ள கொழுப்பு மறுபடி சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும். பரு சீக்கிரம் போகாது…
    இதற்கென்றே சில ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. அக்னே ஃபேஸ்வாஷ் என்று கேட்டு வாங்கி, சோப்புக்கு பதில் முகத்துக்குப் போடலாம். இந்த ஃபேஸ் வாஷில் ஆன்டி பாக்டீரியல் விஷயங்கள் உள்ளதால் பருவால் ஏற்படும் இன்ஃபெக்ஷன் குறையும்!

    பரு வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?

    முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கருப்புத் தழும்பாக மாறிவிடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை எடுக்கிறேன் என்று கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது. முகத்தில் கை வைக்காமல் பருவுக்கான ட்ரீட்மெண்டை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால், பருக்கள் போய்விடும்… தழும்புகளும் வராது. 
    தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
    தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது பதின்ம வயதில் வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது.

    காரணங்கள்:


    1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி) களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள்,

    2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.

    3. காரணிகள்:

    1. மரபு வழி (குடும்ப வழி)

    2. ஹார்மோன் மாற்றம்,

    3. மாதவிடாய் சுழற்சி,

    4. தோல் சுழற்சி,5. மன அழுத்தம்,

    6. சில வகை மருந்துகள்,

    7. இரசாயன சேர்மங்கள்,

    8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,

    9. பால் பொருட்கள்,

    10. புகை பிடித்தல்,

    11. கர்ப்ப காலம்,

    12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்

    சிகிச்சை முறைகள் :
    சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள் ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கீரிம்  போடக்கூடாது.  அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது. தரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.
    தற்பொழுது தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை.

    முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

    இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

    முகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகளை ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

    பருத் தழும்பு:

    பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

    தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
    பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    சருமத்துளைகள் : பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

    பொடுகு : தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட நெற்றியில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் நெற்றியில் பருக்கள் தோன்றுகிறது.

    தலைமுடி : தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.

    ஜீரணக்கோளாறு : நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

    மன அழுத்தம் : ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    ஷாம்பு : ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

    தவிர்க்க : இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
    வெளியில் செல்லும் போது ஏற்படும் தூசியால் சிலருக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு பேஷியல்..
    ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

    சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்.
    1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

    ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும்.

    வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.

    ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

    தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
    நமது வீட்டின் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும்.

    நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை எப்படி நீக்குவது என்பதைக் காண்போம்.

    இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.



    சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.

    இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான். தமிழில் தேயிலை மர எண்ணெய் என அழைக்கப்படுகிறது. டீ ட்ரீ ஆயில் கிட்டில் துளசியும் சேர்ந்திருக்கும். அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் இது கிடைக்கும். எந்த ஒரு ப்ராடக்டையும் ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் தோலிற்கு மிகவும் நல்லது. நல்லெண்ணெயும் தோலிற்கு மிகவும் நல்லது.

    நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.

    அந்தக் காலத்தில் பரு வந்தால் பெரும்பாலும் பெண்கள் ஜாதிக்கா யைத்தான் பயன்படுத்துவார்கள். இது தோலுக்கு மிகவும் நல்லது. முழு ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.

    முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.
    சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.

    முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

    சரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

    முதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும். 
    உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முகத்தில் முகப்பரு வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின் முடிவெடுங்கள்.

    முகப்பருவில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த முகப்பரு மிகவும் தீவிரமாகக் கூடும்.

    முகப்பருவை கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த முகப்பருவை சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

    அசுத்தமான கையால் முகப்பருவை தொடும் போது, முகப்பருவில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் முகப்பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    முகப்பருவை கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த முகப்பரு மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

    முகத்தில் முகப்பருவை வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். முகப்பருவை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.
    பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
    மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.

    எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

    * விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

    * பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

    * பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.

    * பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
    ×