search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery
    கோரக்பூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு அங்கு தங்கி இருந்து படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர்.

    அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது.

    விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.

    இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery


    கென்யா நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். #EthiopianAirlines #flightcrashe #157killed
    அடிடாஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

    வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அஹமத் இரங்கல் தெரிவித்துள்ளார். #EthiopianAirlines #flightcrashe #157killed
    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சாராயம் குடித்த அனைவரும் கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் சிறிது நேரத்திற்குள் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை மாநில கலால்துறை வெளியிட்ட தகவலின்படி, கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலால்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அப்பர் அசாம் டிவிஷனல் கமிஷனருக்கு, முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். #HoochTragedy  #AssamHoochTragedy
    இயற்கை பேரிடர்களை விட சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ஊர்வக்காவல்படை மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தப்படி போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-

    சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தான் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இறக்கின்றனர். அதில் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிந்து 4 சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
    சிறப்பு வகுப்பு காரணமாக திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த சாதிக் மகன் பாட்ஷா (வயது 17). திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அரசு பொதுத் தேர்வு என்பதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    பிளஸ்-2 மட்டுமின்றி 10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று காலை படிப்பதற்காக எழுந்த பாட்ஷாவின் உடல் சோர்வுடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    அவரை காட்டாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில் எனது மகனுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். அதனுடன் சிறப்பு வகுப்புக்காக மிகுந்த நேரம் ஒதுக்கி படித்ததால் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வைத்தால் அவர்கள் நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றனர்.

    திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சலால் ஜனவரி முதல் தேதியில் இருந்து இன்றுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் தேதியில் இருந்து 28-ம் தேதிவரை 1911 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்தாக்கம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இம்மாதத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    உத்தர பிரதேசத்தில் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். #UPEncounter #Constablekilled
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா நகரில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷிவாவ்தார் என்பவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று இரவு சென்றனர். ஷிவாவ்தார் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார்,  அவரை சரண் அடையும்படி கூறினர். ஆனால்,  ஷிவாவ்தார், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ் தரப்பில் கான்ஸ்டபிள் ஹர்ஷ் சவுத்ரி (26)உயிரிழந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில் ஷிவாவ்தார் பலத்த காயம் அடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

    இந்த என்கவுண்டரில் உயிரிழந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிளின் மனைவிக்கு ரூ.40 லட்சம் மற்றும் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPEncounter  #Constablekilled
    பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் வீசிய பனிப்புயல் ஓட்டல் சுவரை தாக்கி உடைத்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #15dead #mudslideinPeru
    லிமா:

    பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமாக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இன்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.

    அப்போது, பனிப்புயலின் வேகத்தால் அருகாமையில் இருந்த பாறைகள்  மற்றும் மண்கட்டிகள் அந்த ஓட்டல் சுவற்றின் மீது பலமாக மோதின. 

    இதனால் ஓட்டலின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அபன்கே நகர மேயர் எவரிஸ்ட்டோ ரமோஸ் தெரிவித்துள்ளார். #15dead #mudslideinPeru  
    ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். #Afghanistan #VolleyballCourt #BombBlast
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் போட்டியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. சற்றும் எதிர்பாராதவிதத்தில் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் அந்த மைதானமே குலுங்கியது. போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

    எனினும் இந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குண்டுவெடிப்பு நடந்த இடம், தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #Afghanistan #VolleyballCourt #BombBlast 
    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.



    நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

    வாலாஜா எடக்குப்பம் கிராமம் அருகே மணல் லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா எடக்குப்பம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி யாமுனாநதி. இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அவரின் வீட்டு வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் இறந்தார்.

    இதையடுத்து யமுனாநதி தனக்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் வந்து மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் வாலாஜா அடுத்த தகரகுப்பம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 35). என்பவரை நேற்று மாலை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சீனு என்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியில் பெண் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன் இன்று உயிரிழந்தார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வருகை தருகிறார்கள்.

    இவர்கள், இங்குள்ள லாட்ஜுக்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள். காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்களும் இங்குள்ள சில விடுதிகளில் தங்கி ஜாலியாக பொழுதை கழிப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    லாட்ஜுகளில் அறை எடுப்பவர்கள் தங்களது முகவரி சான்று நகலை அளிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் வகையில் இங்கு தங்குபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.

    ஆனாலும் கன்னியாகுமரியில் சில லாட்ஜுகளில் காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27). கோபி செட்டிப்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த கார்த்திகா (26) ஆகிய கள்ளக்காதல் ஜோடி கன்னியாகுமரி லாட்ஜில் அறை எடுத்து தங்கி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

    கார்த்திகாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு திருமணம் ஆகவில்லை. சதீஷ் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கார்த்திகா ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சதீசும், கார்த்திகாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். கன்னியாகுமரி வந்து லாட்ஜில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    எப்படியும் தங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் வி‌ஷத்தை குடித்தனர். அதன் பிறகு தங்களது கைகளையும் பிளேடால் வெட்டிக் கொண்டனர்.

    இதில் கார்த்திகா, லாட்ஜ் அறையிலேயே இறந்து விட்டார். உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த சதீஷை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததனர்.

    அங்கு சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இறந்த கார்த்திகாவின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் உள்ளது. அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைகளும் இன்று நடக்கிறது. இதையொட்டி சதீஷ் மற்றம் கார்த்திகாவின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    ×