search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    திருப்பூரில் நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). பனியன் தொழிலாளி. நேற்று மாலை வேலை முடிந்து நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் குளத்தில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அரைகுறையாக நீந்த தெரிந்த பழனிசாமி ஆர்வத்தால் இவரும் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மூழ்க தொடங்கினார். அதை அறிந்த அவர் அலறி சத்தம்போட்டார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பழனிசாமியை காப்பாற்ற முயன்றனர். பழனிசாமியை கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம் அருகே கடல் அலையில் சிக்கி நெல்லையைச் சேர்ந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    திருவனந்தபுரம்:

    நெல்லை அருகே பத்தமடை பள்ளிவாசல் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் அமீது. இவருடைய மனைவி செய்புநிஷா. இவர்களுடைய மகள் பாத்திமா (வயது 9). இவர்கள் உள்பட 11 பேர் ஒரு வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

    விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பி வைத்து விட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு திருவனந்தபுரம் அருகே சங்குமுகம் கடலுக்கு புறப்பட்டனர். சங்குமுகம் கடலில் 11 பேரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிறுமி பாத்திமா உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். இதனால் 6 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி 5 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் சிறுமி பாத்திமாவை மீட்க முடியவில்லை. கடல் அலை உள்ளே இழுத்து சென்று விட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த வலியத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் காலை 6 மணியளவில் வெட்டுக்காடு பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக வலியத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடல் அலையில் சிக்கி மாயமான சிறுமி பாத்திமா தான், கடற்கரையில் பிணமாக கிடந்தது என தெரியவந்தது. தொடர்ந்து பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாவின் உடல் நேற்று காலை 11 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பாத்திமாவின் உடலை கட்டிப்பிடித்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் சஜிகுமார். இவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ஸ்ரீகண்டனும், சஜிகுமாரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செருப்பாலூரில் இருந்து குலசேகரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை சஜிகுமார் ஓட்டினார். ஸ்ரீகண்டன் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

    அவர்கள் குலசேகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே குலசேகரத்தில் இருந்து செருப்பாலூர் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக அந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீகண்டன், சஜிகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    இதில் சஜிகுமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீகண்டன் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஸ்ரீகண்டன் இறந்துவிட்டார். சஜிகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்போது விபத்து நடந்து உள்ள பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    ×