என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 104727
நீங்கள் தேடியது "விமல்"
ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் முன்னோட்டம். #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.
விமல் - ஆஷ்னா சவேரி நாயகன், நாயகியாக நடிக்க ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா போலீஸ் வேடத்திலும், ஐரோப்பிய பட உலகின் ஆபாச நாயகிகளில் ஒருவரான மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் - விவேகா, கலை - வைரபாலன், நடனம் - கந்தாஸ்,
ஸ்டண்ட் - ரமேஷ், படத்தொகுப்பு - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
இது கிளாமர் கலந்த காமெடி படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்றார்.
படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்
கஜா புயலால் முற்றிலுமாக பாதிக்ப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்ளுக்கு உதவும் வகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் களத்தில் இறங்கியுள்ளனர். #GajaCycloneRelief #GVPrakashKumar #Vemal
கஜா புயல் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களை புரட்டி போட்டது. அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் அதிக அளவில் நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.
திரைத்துறையை சேர்ந்த நடிகர்களில் சிலர் நிவாரண நிதி அறிவித்தனர். சில நடிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் 2 நாட்கள் பயணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டார். இரவு பகல் பாராமல் பணியாற்றுபவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டுகள் தெரிவித்தார்.
கஸ்தூரி வாட்டர் பில்டர்களோடு நேற்று இரவு தஞ்சை மாவட்டத்துக்கு சென்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தனது குழுவுடன் பார்வையிட்ட ஜி.வி பிரகாஷ், தென்னைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு அணுகுமாறு இரண்டு எண்களை அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து, குறுகிய காலப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர். எவ்வளவு வேலை செய்தாலும் போதாது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவரப் பல மாதங்கள் ஆகும்.
இங்கு லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் விழுந்து கிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான விஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும்.
அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த விஷயம் நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும்.
இளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் கவனித்து வருகிறேன். தன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்துக்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் விமல் பார்வையிட்டார். அவர் பயின்ற பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள பள்ளியில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்ததுடன், அங்கு பணியாற்றி வரும் மின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். இங்கு எல்லோருமே ஆடு, மாடு, மரங்களை இழந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில், கைவிட்டதுபோல் இருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி தங்களது ரசிக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
ரஜினி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தின் போது தூத்துக்குடி சென்றதை போல டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்ல இருக்கிறார் என்று நேற்று தகவல் பரவியது. ஆனால் அது உறுதியாகவில்லை. நடிகர்கள் அரசிடம் நிவாரண நிதியை வழங்கியதோடு நில்லாமல் களத்தில் நேரடியாக இறங்கி பணிபுரிவது அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. #GajaCycloneRelief #GVPrakashKumar #Vemal
கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் மறைவுக்கு நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #NaMuthuSwamy
கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானார். தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.
நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.
நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
களவாணி படம் மூலம் புகழ் பெற்ற, விமலையும், காமெடி நடிகர் சிங்கம்புலியையும் நடிகை பூர்ணா, ஒரு படத்திற்காக துரத்தி வருகிறார். #Vimal #Poorna
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
இப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள்.
ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்’ என்றார்.
ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி வரும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் பிரபல கன்னட நடிகை தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். #IvanukkuEngeyoMachamIrukku #Vemal
ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி இணைந்து நடிக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.
இந்த படத்தை சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கன்னட பட உலகின் பிரபல நடிகையான சர்மிளா மாண்ரேவும், ஆர்.சாவண்ட் என்பவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சர்மிளா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கோபி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நட்ராஜ் சங்கரன் இசையமைக்கிறார். தினேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,
இது கிளாமர் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள். எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் என்கிறார். #Vemal #IvanukkuEngeyoMachamIrukku
சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Parthiban #Vadivelu
விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
விமல் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் விமல், வடிவேலுவுடன், பார்த்திபன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parthiban #Vadivelu
‘களவாணி 2’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக விமலும் ஓவியாவும் பழமையான வீட்டை சுற்றி சுற்றி வருகிறார்கள். #Vimal #Oviya #Kalavani2
விமல் - ஓவியா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘களவாணி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.
ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X