search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104736"

    டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் புதிய 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார்சைக்கிள் பிரிவில் சாகசப் பிரியர்களுக்கான பைக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களை வெகுவாகக் கவர்வதற்காக முன்னணி நிறுவனங்கள் இத்தகைய சாகச பைக்குகளை அதிக அளவில் அறிமுகம் செய்கின்றன. 

    அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் புதிய மாடல் ஸ்கிராம்ப்ளர் 1200 எக்ஸ்.சி. மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் மே மாதம் 23-ந் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

    சர்வதேச அளவில் எக்ஸ்.சி. மற்றும் எக்ஸ்.இ. என இரண்டு மாடல்களில் இது கிடைக்கிறது. இதில் எக்ஸ்.சி. மாடல் மட்டும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சாகச பைக் மாடலில் டபுள் கிரேடில் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.



    முதல் முறையாக இதன் முன்சக்கரம் 21 அங்குல அளவிலும், பின் சக்கரம் 17 அங்குல அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வயர் ஸ்போக் சக்கரங்களைக் கொண்ட இந்த மோட்டார்சைக்கிளில் டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாகசப் பயணத்துக்கேற்ற வகையில் பைரேலி ஸ்கார்பியன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவை நெடுந்தூர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டயர்களாகும். இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. இதில் பிரெம்போ எம்.50 நான்கு பிஸ்டன் காலிபர் டிஸ்க் பிரேக் முன் சக்கரத்திலும், டியூயல் பிஸ்டன் பிரெம்போ டிஸ்க் பிரேக் பின் சக்கரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ஏற்கனவே தர்க்ஸ்டன் மாடலில் பயன்படுத்தப்பட்டதாகும்.



    இது 90 ஹெச்.பி. திறனை 7,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 110 என்.எம். டார்க் செயல்திறனை 3,950 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) போன்றவை உள்ளன. 

    இந்த மோட்டார்சைக்கிளில் ஐந்து வகையான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண சாலை, மழை நேர சாலை, கரடு முரடான சாலை, ஸ்போர்ட் மற்றும் ஒருவர் மட்டும் பயணிப்பது என ஐந்து வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன. 

    இதில் டி.எஃப்.டி. டிஸ்பிளே உள்ளது. நேவிகேஷன் வசதி, புளூடூத் இணைப்பு, டயர் காற்றழுத்தத்தை உணர்த்துவது, யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.15 லட்சத்துக்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #bajaj #motorcycle



    பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாகனங்கள் விற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 

    டிசம்பர் 2017 இல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2,92,547 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2018 டிசம்பரில் பஜாஜ் நிறுவனம் சுமார் 3,46,199 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. 



    டிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் நிறுவனம் 2,98,855 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே போன்று டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 2,28,762 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தது. அந்த வகையில் டிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 31 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    வர்த்தக ரீதியிலான வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் டிசம்பர் 2018 இல் 47,344 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 63,785 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், வர்த்தக வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் 26 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.
    டுகாடி இந்தியா சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிளில் அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #ducati #bike



    டுகாடி இந்தியா நிறுவனம் தனது புதிய ரக மோட்டார்சைக்கிள் பேனிகேல் வி-4 ஆர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புது டுகாடி பேனிகேல் வி-4 ஆர் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடலாகும். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெறும் ஐந்து யூனிட்களே வழங்கப்படுகின்றன.

    ரேசிங் பைக் மாடலான டுகாடி பேனிகேல் வி-4 ஆர் 998 சி.சி. திறன் கொண்டது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

    இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.



    இதில் ஏ.பி.எஸ்., மல்டி லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவிலான மின்னணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பந்தய மைதானத்துக்கான இந்த மோட்டார் சைக்கிளை சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் சீறிப் பாயலாம்.

    இந்தியாவில் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட விற்பனை மையங்களில் பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்யப்படுகிறது.

    டுகாட்டி பேனிகேல் வி-4 ஆர் விநியோகம் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என டுகாடி இந்தியா தெரிவித்துள்ளது.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. #jawamotorcycles



    இந்தியாவில் 1970-களின் பிற்பாதியில் மோட்டார் சந்தையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளாக இருந்தவை என்பீல்டு நிறுவனத்தின் புல்லட், மற்றொன்று ஜாவா. புல்லட் அதிக எடையோடு இருந்ததால் கொஞ்சம் வலிமை உள்ளவர்கள் மட்டுமே அதை வாங்கி பயன்படுத்தினர். தட்டினால் சீறிப் பாயும், மெல்லியதான தோற்றத்துடன் இருந்தது ஜாவா மாடல்கள் தான். 

    இதனாலேயே இது நடுத்தர பிரிவினரின் ஏகோபித்த வாகனமாக இருந்தது. புல்லட் சத்தம் டப்..டப்..டப்.. என ஒரே சீராக இருக்கும். ஆனால் ஜாவா மோட்டார் சைக்கிளோ இரட்டை சைலன்ஸருடன் விர்ரென்ற சத்தத்துடன் சீறிப்பாயும். ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது, அதன் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

    இப்போது மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் 15-ம் தேதி ஜாவா மோட்டார் சைக்கிளை மீண்டும் களம் இறக்கப் போவதாக அறிவித்துள்ளது.



    புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் 293 சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் இது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது. புதிய ஜாவா மாடலில் லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக 27 பி.ஹெச்.பி. திறன் 28 என்.எம். டார்கியூ செயல்திறன் வெளிப்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்படுகிறது. 

    இதில் பியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட உள்ளது. இது ‘பாரத்-6’ புகை விதிகளுக்குப் பொருந்தும் வகையிலான மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்டதாகும். புதிய மோட்டார்சைக்கிளின் 293சிசி என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. அந்தக் கால ஜாவா மோட்டார் சைக்கிளில் கிக்கர் மற்றும் கியர் சேஞ்ச் லீவர் எல்லாமே ஒன்றுதான். புதிய வடிவமைப்பில் இது எத்தகைய மாற்றம் கொண்டிருக்கிறது என்பது விற்பனைக்கு வந்தால்தான் தெரியும். 

    மேலும், புதிய மாடலில் செல்ப் ஸ்டார்ட்டர் வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இரட்டை சைலன்ஸருடன் இது வெளி வர உள்ளது ஜாவா பிரியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும். இதன் விலையும் நவம்பர் 15-ம் தேதி அறிவிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
    சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI



    சுசுகி நிறுவனம் ஒருவழியாக தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில், இதன் வெளியீடு சற்றே தாமதமாகி இருக்கிறது. இந்தியாவில் புதிய வி ஸ்டாம் XT விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    வி ஸ்டாம் தோற்றம் பார்க்க முந்தைய வி ஸ்டாம் 1000 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. வி ஸ்டாம் 1000 மாடலில் இருப்பதை போன்றே அட்வென்ச்சர் ஃபேரிங் மற்றும் ஹெட்லைட்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய வின்ட்ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT மாடலில் அலுமினியம் ஸ்போக் சக்கரங்கள், டியூப்லெஸ் பேட்லேக்ஸ் அட்வென்ச்சர் ஏ40 டியூப்லெஸ் டையர்கள், ஹேன்ட் கார்டுகள் மற்றும் இன்ஜின் கவுல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் 12 வாட் டிசி சார்ஜிங் போர்ட் ஸ்டான்டர்டு அம்சமாக கொண்டுள்ளது.



    இந்த மோட்டார்சைக்கிள் 650சிசி லிக்விட்-கூல்டு வி-ட்வின் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 71 பி.ஹெச்.பி. @8800 ஆர்.பி.எம். செயல்திறன், 62 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதில் மூன்று வகையில் மாற்றிக் கொள்ளக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முன்பக்கம் 43எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், மாற்றக்கூடி ரீபவுன்ட் உடனும் பின்புறம் பிரீலோடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் அம்சங்கள் பின்புறம் 260 எம்.எம். டிஸ்க், முன்பக்கம் 310 எம்.எம். டூயல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கிறது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT சேம்பியன் எல்லோ மற்றும் பியல் வைட் கிளேசியர் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், விநியோகம் சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.
    மோட்டார் பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNPolice #Helmet
    சென்னை:

    மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர  வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வெளியீடு மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TVS #motorcycle


    இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 110 சிசி மோட்டார்சைக்கிளை ஆகஸ்டு 23-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிள் டி.வி.எஸ். ஃபீனிக்ஸ் மாடலுக்கு மாற்றாக அமைகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் பிரீமியம் அம்சங்கள் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் போன்றவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பை பொருத்த வரை புதிய மோட்டார்சைக்கிள் பார்க்க டி.வி.எஸ். விக்டர் மற்றும் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய பைக் வடிவமைப்பு இந்திய சந்தையில் டி.வி.எஸ். இதுவரை அறிமுக செய்த மாடல்களை விட புதுவித வடிவமைப்பை கொண்டிருக்கும்.



    2012-ம் ஆண்டு டி.வி.எஸ். நிறுவனம் 125சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிளை ரேடியான் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. எனினும் புதிய பைக் 110 சிசி மோட்டார்சைக்கிள் என்பதால் இது முற்றிலும் புதிய மாடலாக இருக்கும். இதில் 109.7சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இதில் 9.5 பி.ஹெச்.பி. பவர், 9.4 என்.எம். டார்கியூ மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய 110 சிசி பைக் பிரீமியம் மாடலாக உருவாகும் நிலையில், இதில் ஸ்போர்ட் ரக பாடி கிராஃபிக்ஸ் வழங்கப்படும் என்றும் இதனால் பைக் தோற்றம் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலின் முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படலாம்.
    மத்திய பிரதேச மாநிலம் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக தலித் இளைஞரை பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக தாக்கியுள்ளார். #BanPartiality #DalitManAttacked
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் டிகம்பர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த தயாராம் அகிர்வால் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹேமந்த் குர்மியின் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஹேமந்த் குர்மி, அவரது சகோதரர் வினோத் குர்மி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் யாதவ் ஆகியோர் தயாராம் அகிர்வாலை மிக கொடூரமான முறையில் தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து தயாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஹேமந்த் குர்மி, வினோத் குர்மி, முன்னு குர்மி, அனிருத் குர்மி, மற்றும் அவர்களது அண்டை வீட்டார் தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ஹேமந்த் குர்மி உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #BanPartiality #DalitManAttacked
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. 

    டிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் பியல் வைட் நிறத்தில் பைக்கின் முன்பக்க மட்கார்டு, ஃபியூயல் டேன்க், பின்புற கௌல் உள்ளிட்டவற்றில் சிவப்பு மற்றும் கிரே நிற ஸ்டிரைப்கள் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவைப்பும் பிரத்யேக ரேசிங் கார்பன் ஃபைர் தீம் கொண்டிருக்கிறது.  

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய நிறம் மற்றும் ஸ்டிக்கரிங் தவிர ரேஸ் எடிஷன் அபாச்சி RTR 180 மாடலின் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. 



    இதன் ஃபியூயல் டேன்க் ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது. அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இன்ஜின் கௌல் மற்றும் டிவிஎஸ் ரேசிங் பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளு பேக்லிட் டிஸ்ப்ளே, டிஜிட்டல் மீட்டரில் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேக ஸ்பீடு ரெக்கார்டர், லேப் டைமர் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் அபாச்சி RTR 180  ரேஸ் எடிஷன் மாடலில் 177.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 16.3 பிஹெச்பி பவர், 15.5 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய RTR 180 மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.96 நௌடிகளில் செல்லும்.

    இத்துடன் டிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலில் தலைசிறந்த பிரேக்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப இது எடை கொண்டிருப்பதால், கட்டுப்படுத்துவது சுலபமாகிறது.

    இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 180 விலை ரூ.83,233 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×