search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை"

    காந்தியை தீவிரவாதி என்பதா? என்று திருமாவளவன் மீது தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

    சகோதரர் திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டு விட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் தேர்தல் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார்.

    இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுலை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார்.

    தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.

     


    ஆக, இவர்களின் கொள்கை என்பது அவர்களின் சுய நலம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். ஆனால், அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்.

    இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகள் என்ன சொல்லப் போகிறது?

    காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ‘ஹேராம்’ என்று சொன்னது தப்பா? எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கி இருக்கிறார்.

    இளைஞர்கள் மனதில் வி‌ஷத்தை பாய்ச்சி வரும் திருமாவளவன் மனநிலை எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டு இருக்கிறது. தான் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார். இப்படியே பிரிவினை உணர்வுகளுடன் பேசியே குளிர்காய நினைக்கிறார். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதில் அவரது வலையில் சிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை என்று கமல் மீண்டும் கூறி உள்ளதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    அவர் கூறுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அவர் காந்தியை கொலை செய்ததற்கு நியாயம் கேட்டு வந்துள்ளேன்” என்றார்.

    நடிகர் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதையொட்டி பல இடங்களில் கமல்ஹாசன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மன்னார்குடி ஜீயர் உள்பட ஏராளமானவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கிடையே இந்து தீவிரவாதி என்று கூறியதால் கமல்ஹாசனால் அடுத்த 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் 2 நாட்கள் பிரசாரத்தை ரத்து செய்தார்.

    இந்த நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்ததைத் தொடர்ந்து நேற்று கமல்ஹாசன் பிரசாரத்தை தொடர முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.



    அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை” என்று உறுதிபட கூறினார். கமல்ஹாசன் மீண்டும் இந்து தீவிரவாதி பற்றி பேசியதால் அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று முதல் ஆளாக எச்சரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்வது உறுதியாகியுள்ளது. பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கி விட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன் ராஜீக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார்.

    பின்னர் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே இந்து முன்னணியினர் அரவக்குறிச்சியில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

    கமல்ஹாசன் பிரசாரத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று. அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால் அந்த மாபாதக செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். ஆனால் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ‘இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று நடிகர் கமல் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



    புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமல் பழைய, வி‌ஷமத்தனமான, வி‌ஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்தவர் மகாத்மாகாந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத கமல்தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    பக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டுவெடிப்பு நடந்து... அதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள், கருத்து கூட சொல்லாதவர்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று சப்பை கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிரச்சினையை அதுவும் ‘இந்து’ என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    பிரசாரக் கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவெடுக்கிறார்கள். இது எதற்கு? இத்தகைய கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு. இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் பிரசாரம் செய்வதே தடை செய்யப்பட்டிருக்கிறது.

    இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து வி‌ஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது. ஆக இத்தகைய நோக்குடையவர்களின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதால், காவல்துறை இவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் ஒரு படத்திற்கு தடை ஏற்பட்டதால் நாட்டை விட்டே ஓடுவேன் என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல், இன்று நாட்டைப் பற்றியும், காந்தியைப் பற்றியும், நாட்டுப்பற்றையும் பற்றி பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு. திரை நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல் அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    கமல்ஹாசனின் பேச்சுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராயும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘‘பி.எம் நரேந்திர மோடி’’ படத்தில் மோடியாக நடித்தவர். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டை துண்டாட வேண்டாம். கலைக்கு மதம் இல்லாதது போல தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. ஓட்டுக்காக முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கோட்சேவை இந்து தீவிரவாதி என்கிறீர்களா கமல்?

    இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னை:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  சந்திக்க உள்ளார்.



    இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    “திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு?

    தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?”

    இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.



    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj
    சென்னை:

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் (11-ந்தேதி) தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி செல்கிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    வர்த்தக பிரமுகர்கள், மீனவர் சங்க பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் மத்தியில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #LokSabhaElections2019 #BJP #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

    வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள் பற்றி பார்க்கலாம். #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி.யும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவது தான் இதற்குக் காரணம்.

    எதிரெதிர் துருவங்களான இந்த இரு வேட்பாளர்களும் இங்கு களத்தில் இறங்கினாலும் இவர்கள் இருவருக்குமிடையே சில ஒற்றுமைகளும் உள்ளன. பெண் வேட்பாளர்களான இருவரின் பெயர்களும் தமிழின் சிறப்பை உணர்த்தும் பெயர்களாகும். அத்துடன் இவ்விருவரும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே பிரபல அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    கனிமொழியின் தந்தையான தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, முத்தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். தமிழிசையின் தந்தையான தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், இலக்கியச் செல்வர் என்று போற்றப்படுபவர்.

    தென் தமிழகத்தின் கடைக்கோடியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, தமிழிசை ஆகிய இருவரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி கொண்டு சென்றேன். போட்டியிடுவோர் பெயர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டது. பா.ஜனதா மத்திய தலைமை தேர்தல் குழு பெயர் பட்டியலை இன்று வெளியிடும். அதில் பெண் வேட்பாளர் பெயரும் இடம் பெறும்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றிக் கூட்டணி. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெறாது. இதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேறாத வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு ரெயிலில் இலவச பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்க வேண்டியதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படி கொடுக்க முடியும்.



    ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தி.மு.க.வும், மத்திய காங்கிரஸ் அரசும் என்ன செய்தன. அதை தி.மு.க. தீர்க்கும் என்பது வெற்று வாக்குறுதி. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போது அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது மத்திய பா.ஜனதா அரசு. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவோம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு தான் நிறைவேற்ற முடியும். எனவே அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேறும்.

    காங்கிரஸ் நீண்ட காலமாக ஆட்சி செய்தது. 1971-ம் ஆண்டிலேயே வறுமையை ஒழிக்கப்போவதாக இந்திரா காந்தி கூறினார். ஆனால் அவர்கள் ஆட்சியை விட்டு போகும் வரை வறுமையை ஒழிக்கவில்லை.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தி.மு.க. விமர்சிக்கிறது. ஆனால், இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan
    மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறலாமா? என மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்று முன்மொழிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் கூட்டணி மேடையில், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் அதை சொல்ல பயந்தது ஏன்? மாநிலம் மாறினால் நிறம் மாறும் ஸ்டாலின். விஞ்ஞானபூர்வமான ஊழல் கண்டுபிடிப்பு பட்டயம் வாங்கிய தி.மு.க. வாரிசு ஊழல் பற்றி பேசலாமா?

    ஒரு ரூபாய்க்கு படி அரிசி! மூன்று படி லட்சியம். ஒருபடி நிச்சயம் என பொய்யுரைத்த தி.மு.க. உண்மை விளம்பிகள் மோடி பொய்யுரைத்தார் என்பதா?

    மோடி ரூ.15 லட்சம் போடுவேன் என்று எங்கு? எப்போது சொன்னார்? சான்று காட்ட முடியுமா?

    வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் மட்டுமில்லாமல் உள்நாட்டிலும் பதுக்கி வைத்திருக்கிற கருப்பு பணத்தை மீட்டால் அது ஒரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் அளவுக்கு வரும் என்றார். அதில் ரூ.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டமாக வந்துள்ளது. இன்னும் 10 அல்லது 50 லட்சத்துக்கும் கூட அவர் திட்டங்களை கொடுப்பார்.

    வங்காள மொழியில் வணக்கம் சொன்ன ஸ்டாலின் மத்திய பிரதேசத்தில் கூட்டம் நடந்தால் இந்தியில் பேசுவாரா? மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறுகிறார்.

    அடைந்தால் திராவிட நாடு என்று வீரவசனம் பேசி ஆட்சி சுகம் கண்டது தி.மு.க. கொல்கத்தா கூட்டத்தில் 2-ம் சுதந்திர போராட்டம்! தேசியம்! என்றெல்லாம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது புல்லரிக்கும் நடிப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #Tamilisai #BJP
    சென்னை:

    பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சியினர் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார்கள்.

    சென்னையில் பட்டாசுக்கு எதிராக போராடுகிறார்கள். அதேநேரத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்.

    பட்டாசுக்கு எதிராக பிரசாரம் செய்த ஜபருல்லா மற்றும் கம்யூனிஸ்டுகளே சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க காரணம். தொழிலாளர்களே ஆதரவாளர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilisai #BJP

    5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறியுள்ளார். #Tamilisai #LokSabhaElection2019
    சென்னை:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்த பாஜக, 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட 5 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.



    சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றுள்ளது.

    இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

    5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilisai #LokSabhaElection2019
    வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். #Results2018 #TamilisaiSoundararajan
    சென்னை:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.

    இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:



    எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை தோல்வியால் துவள்வதும் இல்லை. மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை; மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?

    இவ்வாறு அவர் கூறினார். #Results2018 #TamilisaiSoundararajan
    ×