search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை"

    மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

    கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.

    இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #Rajinikanth #BJP
    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை.



    செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்காததால் இன்னொரு முறை கேட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றிய கேள்விக்கு ‘எந்த 7 பேர்’ என ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilisaiSoundararajan #Rajinikanth #BJP
    சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    ‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

    ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
    பா.ஜ.க. தலைவர் பதவி குறித்த எஸ்.வி.சேகரின் கருத்துக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், நாடகத்தில் பேசுவதாக நினைத்து அவர் பேசி இருப்பார் என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணி விழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நெல்லையில் உண்ணாவிரதம் நடக்கிறது.

    அரசியல் தலைவர்களை கைது செய்வதில் அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதா? என்பதை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சில் இடம்பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் வெளியே வருவார்.

    பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பஸ் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட பெட்ரோலுக்கான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முயற்சி செய்யலாம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர ஆதரவு தரலாம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது.

    ரபேல் விமான விவகாரம் பற்றி மத்திய மந்திரிகள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு இடம் இல்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை தந்தால் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தற்போது உள்ள நிலையைவிட கட்சியை வலுப்படுத்துவேன் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘இதற்கு பதில் சொல்வதை விட சிரித்துவிட்டு விட்டுவிடலாம். பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ள அவர், நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். பா.ஜ.க. தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவான விஷயமா?’ என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    சென்னை:

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் கட்சியின் சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதில் வருமாறு:-

    4 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு என்ன செய்தது என்று கேட்கிறீர்களே நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தமிழகத்துக்கு செய்த துரோக பட்டியல் ‘தீராத மின்வெட்டு, காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, எய்ம்சில் காங்கிரசின் ஊழல் பங்காளிகள்! இதுதானே!


    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார். 10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள்.

    எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா?

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பெண்கள் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான இலவச மருத்துவ சோதனை வாகனத்தை டாக்டர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    வழக்கமாக மார்பகங்களில் உருவாகும் கட்டியை சோதித்தே புற்றுநோய் தாக்கம் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். ஆனால் இந்த நவீன முறையில் சதையின் தன்மையை ஆராய்ந்து புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை முன் கூட்டியே கண்டறிய முடியும் என்றார்.  #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி சமூக விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

    ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி உள்ளது. அந்த விழாக்களில் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொள்வது, கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது, சேவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என மக்கள் விழாவாகவே மாறிவருகிறது.

    ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் பெருமான் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார் பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.


    முதல்-அமைச்சர் உடனே தலையிட்டு தேவையற்றக் கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள்தர வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள் படும், தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் என்னும் ஓங்கார வடிவமாய் விளங்கும் ஸ்ரீ விநாயகர் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்துள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார். இதில் வியப்பு என்னவென்றால் காங்கிரசில் பலர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    166-வது சட்டப்பிரிவின் கீழ் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் விடுதலை செய்யவில்லை.

    மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட விதிகளை வைத்து ஏன் விடுதலை செய்யவில்லை. இப்போதுதான் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று கூறி வருகின்றனர்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பந்த் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எண்ணெய் நிறுவனங்களின் தொலைநோக்கு பார்வைக்கான வழிமுறைகள் இல்லை. தொலைநோக்கு பார்வையில் பெட்ரோல் - டீசல் தேவைக்காக நிர்வாகத்தின் திட்டமிடுதல் இல்லை. தற்போது மத்திய அரசு கடன்களை அடைத்ததால் இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் சர்வதேச அளவில் பண வீக்கம் ஒரு காரணம். பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்ளும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்படும்.

    தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மரியாதை மற்றும் அரசியல் நாகரீகம் கருதி கலைஞர் விழாவில் கலந்து கொண்டோம்.

    தற்போது நடந்த சி.பி.ஐ. சோதனை தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. எந்த காலத்திலும் தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி பற்றி பேசவில்லை. பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்லி இருப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.

    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Sophia
    தூத்துக்குடி:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

    இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

    விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், இயக்குனர் பாரதிராஜா உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #BJP #TamilisaiSoundararajan #Stalin
    வாஜ்பாய் மறைவால் ஆறுதல் பெற முடியாமல் தவிப்பதாக டெல்லியில் அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டங்களின் நாயகன் வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார்.

    ‘நாட்டை வல்லரசாக்குவதற்கு பிள்ளையர் சுழி போட்டவர் வாஜ்பாய். பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா என தெரியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தியபோதும், ஆறுதல் பெற முடியாமல் தவிக்கிறோம்’ என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #tamilisai #incometaxraid
    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஆலோசனைப்படி தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமில், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன், முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன் எம்.பி., சி.பி.ராதாகிரு‌ஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் முடிவில், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய தலைவர் அமித்‌ஷா தமிழகம் வருகை தந்தது முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான எங்கள் பணி தொடங்கிவிட்டது. வாக்குச்சாவடி அளவில் முகவர்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அமித்‌ஷா தமிழகத்தில் ஊழல் நிறைந்து இருக்கிறது என்று கூறினாரே தவிர ஒரு கட்சியையோ, தனிநபரையோ குறிப்பிடவில்லை. சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பணமதிப்பு இழப்பு காரணமாகத்தான் போலி நிறுவனங்கள், ஊழல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளது என உலக வங்கி கூறுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #incometaxraid
    கமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். #Kamal #Kamalhaasan
    பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பிக்கிறார். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘ஒரே நேரத்தில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. 

    என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன். ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.

    ×