search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர் முனிரத்னா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் பெங்களூரு வியலிக்கவல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில்,  வீட்டின் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.



    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தடயங்களை சேகரித்து, விசாரித்து வருகின்றனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி இன்று மாலை வீரமரணம் அடைந்தார். #Majorrank #armyofficer #defusingIEDevice #Nausherasector
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நவ்ஷேரா செக்டர் பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்ததை நமது வீரர்கள் இன்று கண்டுபிடித்தனர்.

    அதிக சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க முயன்றபோது, எதிர்பாராத வகையில் குண்டு வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்ததாக இன்று மாலை காஷ்மீரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உயிரிழந்த அந்த ராணுவ அதிகாரியின் பெயர் மற்றும் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Majorrank #armyofficer #defusingIEDevice #Nausherasector
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் தனியார் பள்ளியில் குண்டுவெடித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். #Pulwamaschool #PulwamaschoolExplosion
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது.

    இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.



    இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Pulwamaschool #PulwamaschoolExplosion
    ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். #Afghanistan #VolleyballCourt #BombBlast
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் போட்டியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. சற்றும் எதிர்பாராதவிதத்தில் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் அந்த மைதானமே குலுங்கியது. போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

    எனினும் இந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குண்டுவெடிப்பு நடந்த இடம், தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #Afghanistan #VolleyballCourt #BombBlast 
    சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SomaliaBlast
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க படைகளும் உதவி புரிந்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.



    இந்நிலையில் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை அருகே இன்று இரண்டு முறை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணி நிமித்தமாக சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 6 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் சிதறிய கட்டிடத்தின் பாகங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #SomaliaBlast
    சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். #ChinaBlast
    பீஜிங்:

    வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #ChinaBlast
    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ரூ.2 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #Ajmerblast
    அகமதாபாத்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த மூன்று நோன்பாளிகள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சுவாமி அசீமானந்தா, பவேஷ் பட்டேல் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மூன்றுபேர் தலைமறைவாக இருக்கின்றனர். கடந்த 2007-ம் ஒருவர் கொல்லப்பட்டார். இவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கு விசாரணையின்போது 149 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் பவேஷ் பட்டேல் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போலீசாருக்கு பயந்து கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுரேஷ் தாமோதரன் நாயர் என்பவரை குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் அம்மாநில பயங்ரவாத தடுப்பு படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    தலைக்கு  2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இவர், அஜ்மீர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். #Ajmerblast  
    பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர். #PakistanBlast
    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் இன்று காலை வழக்கம்போல் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க திரண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்தன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது.



    முன்னதாக சீன தூதரகத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களை அடுத்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு மாகாண முதல்வர் மெஹ்மூத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மாகாணம் அமைதியாக இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanBlast
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்தார். 

    மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    ஐக்கிய நாடுகள்:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #SomaliaBlasts
    மொகடிஷு:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. நேற்று அந்த உணவகத்தின் அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஓட்டல் உரிமையாளரும் ஒருவர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டலுக்குள் இருந்த அரசு அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    தாக்குதல் நடந்த ஓட்டலுக்கு வெளிநாட்டு பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. #SomaliaBlasts
    சத்தீஸ்கரில் பேருந்து மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். #ChhattisgarhElection #NaxalsAttack
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எனவே, பாதுகாப்பு படையினரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தண்டேவாடா மாவட்டம் பச்சேலி அருகே ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்து, அதில் பயணம் செய்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்து உயிருக்கு போராடினர்.



    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பொதுமக்கள் மற்றும் ஒரு சிஐஎஸ்எப் வீரர் என 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கரில் வரும் 12ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் உள்ளது. #ChhattisgarhElection #NaxalsAttack

    ×