search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். #Threecivilianskilled #southKashmirblast
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.



    இந்த தகவல் அறிந்து அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் லாரூவில் திரண்டனர். அப்போது அங்கு திடீரென்று மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    காயமடைந்த பலர் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இச்சம்பவத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பபட்டது. இந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி 6 பேர் உயிரிழந்துள்ளனர். #Threecivilianskilled  #southKashmirblast

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #Bombing #ElectionCampaign
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படையினரும், அமெரிக்க கூட்டுப்படையினரும் திணறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு ஹெல்மாண்டு மாகாணத்தில் நாளை மறுதினம் (20-ந் தேதி) நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியவர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன். இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது தேர்தல் அலுவலகத்தில் இருந்தார். அவர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

    இந்த குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவரது அலுவலகத்தில் சோபாவுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டுதான் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து உயிரிழந்த வேட்பாளர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்ளிட்ட 4 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த குண்டுவெடிப்புக்கு தலீபான் பயங்கரவாதிகள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  #Afghanistan #Bombing #ElectionCampaign 
    42 உயிர்களை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #HyderabadTwinBombBlastVerdict
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேர் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேர் என மொத்தம் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  



    இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. தீர்ப்பு வெளியாக இருப்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TwinBlast #HyderabadTwinBombBlastCase ##HyderabadTwinBombBlastVerdict 

    ஆப்கானிஸ்தானின் ஹெல் மாண்ட் மாகாணத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ரேமண்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு அமெரிக்க படைகள் பக்க பலமாக இருந்து வருகின்றன. இதற்காக அமெரிக்க படையினர் மீது தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் ஹெல் மாண்ட் மாகாணத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ரேமண்ட் ராரோகல் டிரான்ஸ்பிகரேசன் (வயது 36) சிக்கி படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் நேற்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

    பலியான ரேமண்ட், பிலிப்பைன்சில் பிறந்தவர் ஆவார். அமெரிக்க படையில் 2008-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்காக சண்டையிட்டு பதக்கம் பெற்ற சிறப்பான வீரர் என தகவல்கள் கூறுகின்றன.

    ரேமண்ட் உயிர்ப்பலிக்கு காரணமான ஹெல்மாண்ட் மாகாண குண்டுவெடிப்பு பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
    எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பேரணியின் மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Ethiopianpminister #Ethiopiablast
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.



    பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்புவதற்காக கைகளை அசைத்து விடையளித்தனர்.

    அப்போது, மக்கள் கூட்டத்துக்கிடையில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் காயங்களின்றி உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.

    இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று குறிப்பிட்ட அவர், இதில் சிலர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, போலீஸ் வாகனத்தின் மீது சில மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. #Ethiopianpminister #Ethiopiablast


    ஆப்கானிஸ்தானில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடித்ததைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. #AfghanAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தலிபான்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கடந்த சில மாதங்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தலைநகர் காபூலின் முக்கிய பகுதிகளை தாக்கப்போவதாக தலிபான் இயக்கம் கடந்த வாரம் எச்சரிக்கை  விடுத்தது. ராணுவம் மற்றும் உளவுத்துறை மையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டது.  இதையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



    இந்த பாதுகாப்பையும் மீறி காபூலில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டு  தாக்குதலை நடத்தி உள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் முதல் சோதனைச் சாவடி அருகே குண்டு வெடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தாக்குதல் எந்த அமைப்பால் நடத்தப்பட்டது என்ற தகவலும் வெளியாகவில்லை.  #AfghanAttack
    இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். #IndonesiaExplosion
    சுரபயா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.



    இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndonesiaExplosion
    ×