search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு"

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மனாலி பாராளுமன்ற தொகுதியில் இன்று திருமணமான ஒருவர் மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    சிம்லா:

    பீகார், இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மனாலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள எட்டாம் எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த  வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.



    தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். #LSpolls #GirForest  #GirForestpollingbooth  #100pcvote #BharatdasBapu
    கேணி படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ஏ.நிஷாத், தற்போது வாக்கு படத்தில் நடித்ததற்காக சிறப்பு விருதை பெற்றிருக்கிறார். #MANishad #Vaaku
    தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான படம் "கேணி". இதில் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

    தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குனர். 



    எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்-திற்கு, கேரள அரசு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தது. 

    தற்போது ‘வாக்கு’ படத்தில் நடித்ததற்காக கேரளா பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
    திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று சீன மற்றும் தெலுங்கு மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. #MamataBanerjee #LoksabhaElections2019

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் பெங்காலி, ஆங்கிலம், உருது மற்றும் இந்தி மொழிகளில் சுவர் பிரசார விளம்பரங்கள் இருந்து வந்தன. தற்போது தெலுங்கு, சந்தாலி (அல்சிசி) மற்றும் சீன மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.

    தங்காரா, ஜார்கிராம் மற்றும் கராக்பூர் தொகுதிகளில் இத்தகைய பிரசாரம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தங்காராவில் சீனா டவுன் என்றழைக்கப்படும் ஹூயு கிங் தைம் பகுதியில் 2300-க்கும் மேற்பட்ட சீனர்களின் ஓட்டு உள்ளது.

     


    தங்காராவில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக மலாராய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இங்கு சீன மொழியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

    அதே போன்று பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மேற்கு மிட்னாபூர் தொகுதியில் துரு, ஹேம் பிரம், ஹன்ஸ்டா, மண்டி, குஸ்கு, சோரன், முர்மு, பாஸ்கே பகுதிகளில் 52 சதவீதம் சந்தாலி மொழி பேசும் அல்சிசி இனத்த வர் உள்ளனர். இங்கு பிர்கா சோரனுக்கு வாக்களிக்கும்படி சந்தாலி மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    கராக்பூர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை கவரும் விதத்தில் அங்குள்ள ரெயில்வே டவுன்ஷிப் பகுதிகளில் தெலுங்கு மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  #MamataBanerjee #LoksabhaElections2019

    இளைஞர்களின் ஓட்டுபோடும் ஆர்வம் குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 98 சதவீத இளைஞர்கள் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர். #ParliamentElection
    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த தமிழக தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதற்காக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக பல்வேறு வகையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர்.

    ஜனவரி மாதம் 31-ந் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



    ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

    2016 சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் பிரசாரம் செய்யப்பட உள்ளது.

    வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட உள்ளனர். #ParliamentElection

    வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
    மங்களூரு :

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு அவர் தனது மகனும், சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “சாதி, மதங்களை பிரிக்க முயற்சி மேற்கொண்டதால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக மந்திரி டி.கே.சிவக்குமாரே ஒப்புக் கொண்டுவிட்டார். இதன்மூலம் அவரும், காங்கிரசாரும் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

    எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை சாதி, மதங்களால் பிரிக்க நினைக்கக் கூடாது. வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது. நான் தற்போது சொன்ன பதில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்குத்தான். என்னைப்பற்றி குறை கூறி வரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அல்ல. மேலும் நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.
    தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தது குறித்து இம்ரான்கான் மன்னிப்பு கேட்க தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த (ஜூலை) மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தார். அந்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது. அதற்கு 4 பேர் கொண்ட குழுவிடம் பதில் அளிக்கும்படி இம்ரான்கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீசு அனுப்பினார்.



    அதற்கு இம்ரான்கான் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்கு பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

    இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    ஆனால் அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் அவரது கையெழுத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. #ImranKhan
    ×