search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணன்"

    இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    பாரதத்தில் மீண்டும் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய “ஸ்ரீ ஆதிசங்கரர்” பகவான் கண்ணனின் மீது இயற்றிய “கிருஷ்ணாஷ்டகம்” என்கிற பாடல் தொகுப்பில் இடப்பெற்றிருக்கும் கண்ணனின் சுலோகம் இது. “

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

    பொதுவான பொருள்: “தாமரை போன்ற இதயத்தால் அனைவரையும் வசீகரிப்பவரும், சூரியனை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அனைத்தையும் தந்து, அருள்புரியும் கண்ணா, உன் கடைக்கண் பார்வையால் எங்கள் அனைவரையும் கடைதேற்றுவாயாக” என்பது இந்த கண்ணன் ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

    அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.

    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணன் செய்த அற்புதத்தை பார்க்கலாம்.
    பாண்டவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர்களில் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

    அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா! இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது. அந்த கலியுகம் எப்படி இருக்கும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன? அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார்.

    பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர்.

    முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான். அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான். அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான். அங்கு இனிய குரல் கொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா?’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

    அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான். பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது. தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது. ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான். அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான். அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது?’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான்.

    இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.

    அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.

    முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல. ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.’

    அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார். ‘அர்ச்சுனா! கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.’

    இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். நீ கண்ட பசு- கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்.’

    இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தில் இருந்தும், நற்குணத்தில் இருந்தும் விலகுவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை, பாறையை நிறுத்திய சிறிய செடியைப் போல, இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.’

    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணனை, நான்கு பேரும் வணங்கி நின்றனர்.
    விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்.

    பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங்கடலே மானுட வாழ்வு. இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது?

    நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளம் கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ் டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளைச் சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும்.

    அப்படி செய்தால் மனம் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய முடியும். அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான். ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்துள்ளது.

    அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின் யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள். இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அந்த காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான்.

    வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    மக்கள் அனைவரும் தங்கள் துன்பங்கள் நீங்கவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், மறுபிறவி இல்லாமல் இறைவனின் திருப்பதத்தை அடையவும் இறைவனை வேண்டுகிறார்கள். ஆனால் இறைவனும் கூட சிலரை வணங்குகிறார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

    ஆம்! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டபடி, அகிலத்தையே காத்தருளும் திருமாலின் அவதாரமாக விளங்கிய கிருஷ்ண பகவான் ஒரு முறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இதைக் கண்ட ருக்மணி தேவி, ‘சுவாமி! உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உங்களை வழிபடுகின் றன. ஆனால் நீங்கள் யாரை வழிபட்டுக் கொண்டிருக் கிறீர்கள்?’ என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ண பகவான், ‘நான் இந்தப் பூமியில் வாழும் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன். நித்யான்ன தாதா (தினமும் அன்னதானம் செய்வோர்), தருணாக்னிஹோத்ரி (தினமும் அக்னி ஹோத்ரம் செய்வோர்), வேதாந்தவித் (வேதாந்தம் அறிந்தவர்கள்), சந்திர சஹஸ்ர தர்சீ (சகஸ்ர சந்திர தரிசனம் செய்தவர்), மாஸோபாவாசீச (மாதம் தோறும் உபவாசம் இருப்பவர்), பதிவ்ரதா (பதிவிரதையான பெண்கள்) ஆகிய ஆறு பேரை நான் வணங்குவேன்.

    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நித்ய அன்ன தாதா


    அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை, அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். இதுபற்றி திருவள்ளுவரும் கூட ‘இறந்து போன நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளி, சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை’ என்கிறார்.

    ‘அதிதி தேவோ பவ’ என்று வேதம் சொல்கிறது. இதற்கு ‘விருந்தாளி என்பவர் இறைவனுக்கு சமம்’ என்று பொருள். முன் காலத்தில், நாம் உண்பதற்கு முன்பாக வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து, யாராவது விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா? என்று பார்த்து விட்டே உணவருந்த செல்வார்கள். அப்படிப்பட்ட பிரதிபலன் பார்க்காது அன்னதானம் செய்பவர்களை இறைவன் வணங்குகிறார்.

    தருண அக்னிஹோத்ரி

    முன் காலத்தில், ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் அந்தணச் சிறுவர்கள் ‘சமிதாதானம்’ என்று, தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே அவர்களுக்குத் திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ‘ஔபாசனம்’ என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர ‘அக்னிஹோத்ரம்’ என்ற அக்னி காரியம், சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும், அஸ்தமனம் ஆகும் காலத்திலும் செய்யப்படுவதாகும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே, தானும் அக்னிஹோத்ரம் செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவருவோரையும் இறைவன் வழிபடுகிறார்.

    வேதாந்த வித்

    வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்=முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். ‘அஹம் பிரம் மாஸ்மி’, ‘தத்வம் அஸி’ போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந் தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால், பலகோடி ஜென் மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து, வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவனே உண்மையான வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ண பரமாத்மா வணங்குகிறார்.

    சந்திர சகஸ்ர தர்சீ

    சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்படி ஆயிரம் முறை காண, 81 ஆண்டு கள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் ‘சதாபிஷேகம்’ செய்து கொள்வார்கள். அப்படி ஆயிரம் பிறை கண்ட அதிசய சிகாமணிகளையும், கண்ணபிரான் வணங் குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கம் பல மதங்களிலும் இருக்கிறது. ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால், ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும்.

    மூன்றாம் பிறை சந்திரனை வழிபட நினைப்பவர்கள், ‘மேகம் மறைக்கிறதே என்ற கவலையில் சந்திரனைக் காண சிவபெருமானை துதித்து நிற்பார்கள். இன்னும் சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குவார்கள். அப்படிப்பட்டவர் களையும் கிருஷ்ணன் வணங்குகிறார்.

    மாஸோபாவாசீச

    மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் இருப்பவர். அந்த நேரங்களில் உணவருந்தாமல் இருக்கும் முறையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உப வாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) இருப்பது. அப்படி இருக்க முடியாதவர்கள் தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருக்கலாம். எப்படியானாலும் மாதந்தோறும் இரண்டு முறை உபவாசம் இருப்பவர் களை கண்ணன் வணங்குவான். ஆனால் அப்படி உபவாசம் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான்.

    பதிவ்ரதா


    ‘பதிவிரதை’ என்பதற்கு கற்புக்கரசிகள் என்று பொருள். இப்படிப்பட்டவர்களை வணங்கும் முறை நம் நாட்டில் எப்போதுமே உண்டு. சாஸ்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். அவை மனோ, வாக், காயம் என்பதாகும். இவற்றை தமிழில் உண்மை, வாய்மை, மெய்மை என்கிறோம். இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனை நினைக்காது, கணவனை மட்டுமே தெய்வம் போல் கருதுபவர்களே ‘பதிவிரதை’ ஆவர்.

    அப்படிப்பட்ட கற்புக்கரசிகளால் எந்த இயற்கை சக்தியையும் கட்டப்படுத்த முடியும். எதையும் எதிர்த்து போரிட முடியும். ஆனால் அவர்கள் அதை எளிதில் பிரயோகிக்கக் மாட்டார்கள்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், ‘தாயே! உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறார். என்னுடன் வாருங்கள். அடுத்த நிமிடமே உங்களை ராமபிரானிடம் சேர்க்கிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட சீதை சிரித்தாள். ‘என் கற் பின் ஆற்றலால் ஈரேழு உலகங்களையும் எரிக் கும் சக்தி எனக்கு உண்டு. ஆனால் கண வனின் ‘வில்’ ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக் கும், எதையும் செய்ய மாட்டேன்’ என்றாள்.

    ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ, அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை’ என்கிறது மனு சாஸ்திரம். மேலும் ‘மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள், சாபம் இட்டால் அந்தக் குடும்பம் அடியோடு அழிந்து போகும். தந்தை, கணவன், மைத்துனன், சகோதரர் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் வேண் டுமானால் அவர்கள் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும்’ என்றும் சொல்கிறது.

    இப்படியெல்லாம் பாராட்டப்பட்ட பதிவிரதைகளைத் தான் கண்ணன் வழிபாடு செய்கிறான். 
    கிருஷ்ணன் தலையை மயில் இறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணன் தலையை மயில் இறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிட்டது.

    தங்கத்தொட்டிலில் போட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.
    இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டி யவன் ஆகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான்.

    இதனால் கண்ணனை கவுரவிக்க ஆயர்பாடி சிறுவர்கள் விரும்பினார்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள்.

    அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் திருமுடியில் மயில் இறகு நீங்காத இடம் பிடித்து விட்டது.
    யார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.
    பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது. அவரது புல்லாங்குழலில இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சி உண்டாக்கும்படி செய்தது.

    கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும். கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பை நிறைத்து விடும். தெய்வீகமான அப்புல்லாங்குழலிருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.

    அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும். அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை. யார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.

    குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது. அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது. ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன. அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது. அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை. அந்த அளவுக்கு கிருஷ்ணரின் புல்லாங்குழல் கானம் சக்தி பெற்றிருந்தது.
    பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். ‘கண்ணா, சீக்கிரம் வா!’ என்று குரல் கொடுத்து விட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, ‘கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!’ என நின்று யோசித்தாள்.

    அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும் போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசி விட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதிஉபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.
    ×