search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #MeToo
    வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை.

    என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி.

    வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அதனால் தான் ஒரு நடிகையாக என்னால் வளர்ச்சி பெற முடிகிறது. தற்போது 20 சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.



    இது 50 சதவீதமாக உயர வேண்டும். சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் மீ டூ இயக்கம் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தாலும் கூட நான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
    பாலியல் புகாரால் பதவி விலகிய முன்னாள் மத்திய மந்திரி அக்பர் 23 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மிரட்டி கற்பழித்தார் என்று மேலும் ஒரு பெண் பத்திரிகையாளர் குற்றம்சாட்டியுள்ளார். #MJAkbar #MeToo #Pallavigogoi
    புதுடெல்லி:

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய “மீடூ” இயக்கத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் தொல்லை புகார்களை வெளியிட்டனர். இதனால் எம்.ஜே.அக்பர் கடந்த மாதம் மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    தன் மீது மீடூ மூலம் பாலியல் புகார்களை வெளியிட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீது அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் தன்னிடம் எம்.ஜே.அக்பர் எப்படியெல்லாம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டார் என்ற தகவலை “த வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    23 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையில் நான் சேர்ந்தேன். ஒரு நாள் நான் ஒரு செய்திக்கு வித்தியாசமாக தலைப்பிட்டிருந்தேன். அந்த செய்தியை பத்திரிகை ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பரிடம் கொண்டு சென்று காட்டினேன்.

    அந்த செய்தியை பார்த்து விட்டு அவர் என்னை வெகுவாக புகழ்ந்து பாராட்டினார். திடீரென என்னைப் பிடித்து முத்தமிட்டார். நான் உடனே அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொண்டு வெளியில் வந்து விட்டேன். இந்த சம்பவம் எனக்கு அவமானமாக குழப்பமாக இருந்தது.


    சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு தடவை என்னிடம் அவர் தவறாக நடக்க முயன்றார். நான் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு, கண்ணீர் விட்டு அழுதபடி ஓடி சென்று விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை போனில் அழைத்து சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இதையடுத்து அவரை சந்திப்பதை நான் தவிர்த்தேன். சில மாதங்கள் கழித்து பத்திரிகை பணிக்காக நாங்கள் ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தோம். அப்போது கட்டுரை தொடர்பாக பேச வேண்டும் என்று அக்பர் என்னை மட்டும் அழைத்தார்.

    அவரது அறையில் மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். அவரது அறைக்குள் சென்றதும் அவர் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். அவரது பலத்தை எதிர்த்து போராடி என்னால் தப்ப முடியாமல் போய் விட்டது.

    என்னை மிரட்டி கற்பழித்தார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதை விட அவமானம் அதிகமாக தாக்கியது. இதனால் என்னால் அன்று புகார் கொடுக்க இயலவில்லை.

    அடுத்த மாதங்களிலும் அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். என் வயது சக ஊழியர்களுடன் நான் பேசினால், என்னை அழைத்து திட்டினார். நான் லண்டனுக்கு சென்ற பிறகும் அக்பரின் தொல்லை நீடித்தது.

    ஒரு தடவை அவர் என்னை தாக்கவும் முயற்சி செய்தார். இதனால் நான் அவருக்கு கீழ் பணியாற்றாமல் விலகினேன்.

    இவ்வாறு பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் கூறினார். இது குறித்து அக்பரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் “பல்லவி சொல்வதெல்லாம் பொய்” என்றார். #MJAkbar #MeToo #Pallavigogoi
    மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கூகுள் பணியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். #GoogleWalkout



    ‘மீ டூ’ இயக்கம் தற்போது உலகம் முழுவதும் பிரபல மடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆசிய நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த அமைப்பு ஐரோப்பாவிலும், அதை தொடர்ந்து வடஅமெரிக்கா நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இது சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளையும் அதிர வைத்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை. இது தொடர்பாக 2 ஆண்டுகளில் 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள் ளிட்ட நகரங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.



    இந்தியாவில் உள்ள 4 கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூ பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    ‘செக்ஸ்’ குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். நீலநிற ரிப்பன்களை அணிந்திருந்தனர். நியூயார்க், மேன்காட்டன், அட்லாண்டாவில் உள்ள கூகுள் நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இது குறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஊழியர்களின் பாதுகாப்பு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
    திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி, மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். #MeToo #Parvathi
    பூ, மரியான் படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்த பார்வதி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

    மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி மீடூ பற்றி பேசினார். ’மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க வி‌ஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது.

    அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்‘. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தியில் மீடூவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். இதைத்தான் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

    மீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #MeToo #LakshmiRamakrishnan
    மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர்.

    நடிகையும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீடூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது புகார் வருமாறு:-

    ‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன்.

    பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.

    நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார்.



    என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

    இப்போது சிலர், ‘அவர் பெரிய ஆள்; அவரை பத்தில்லாம் ‘மீ டூ’வுல பேசாதீங்க’ன்னு சொன்னாங்க. ‘ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு. அன்னைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் ‘பழசி ராஜா’ படத்தில் சரத்குமார், மம்முட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பல விருதுகளை குவித்ததோடு பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
    மீடூ இயக்கத்தில் பிரபல சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. #Nithyanandha #metoo
    பெங்களூரு:

    மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.

    பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

    நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

    அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை தற்போது பெங்களூரு ராம நகரா கூடுதல் மாவட்ட மற்றும் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. #Nithyanandha #metoo


    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகாரின் அடிப்படையில் மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #MJAkbar #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    ராஜாவுக்கு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன், மீடூ பிரச்சனை இரண்டு பணக்காரர்கள் சம்மந்தப்பட்டது என்று கூறியுள்ளார். #MeToo
    மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று சினிமா விழாவில் கரு.பழனியப்பன் பேசினார்.

    இது பற்றிய விவரம் வருமாறு, அக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் 'ராஜாவுக்கு ராஜா'. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

    இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். 



    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார். 

    விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது" என்றார்.

    விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
    பிரபல இசையமைப்பாளர் இமான், தவறு செய்தவர்கள் தான் மீடூ விசயத்தில் பயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். #Imman #MeToo
    சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை மீடூ இயக்கம் மூலம் பகிரங்கப்படுத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டதற்கு “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது. திரைத்துறை ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. ஒரு சில துறைகளில் நடக்கும் போது அது சம்மந்தப்பட்டவர்களோடு முடிந்துவிடுகிறது.

    திரைத்துறை என்று வரும் போது அது எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு பூதக்கண்ணாடி போட்டு, ஊடகம் மூலம் எல்லோரிடமும் சொல்கிறோம். அதனால் பூதாகரமாக பார்க்கப்படுகிறது.

    ஒரு மனிதனாக நாம் சரியாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அது சரியாக இல்லாத போது வருகிற குழப்பங்கள்தான் இதெல்லாம். என்னதான் மற்றவர்கள் மீது விரல் நீட்டி காட்டினாலும், மீதமிருக்கிற மூன்று விரல் நம்மை நோக்கிப் பாய்கிறது.

    எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. தவறு செய்தவர்கள்தான் எல்லா வி‌ஷயத்திற்கும் அஞ்ச வேண்டும். தவறு செய்யாமல் உண்மையாக இருப்பவர்களுக்கு மீ டூ என எந்த வி‌ஷயம் வந்தாலும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தர்மம் எப்போதும் வெல்லும். யார் பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்குண்டான சரியான விடை கிடைக்கும் என நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
    கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    சென்னை:

    இந்தியா முழுவதும் மீடூ இயக்கம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பணியிடங்களில் குறிப்பாக சினிமா துறையில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.



    இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

    மேலும், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும், வைரமுத்துவின் எழுத்துக்களை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது மற்றும் பாடம் நிறைந்தது என குறிப்பிட்டுள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். #MeToo #Mumtaj
    மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து.

    ‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் உருவாகிற சினிமாவில் தனியே ஏன் பேசவேண்டும்? என்று சிந்திக்கவேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

    சில தருணங்களில் சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். ‘எதுக்கும் இதைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொள். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப் பொடியைத் தூவிடு’ன்னு கொடுத்திருக்காங்க. அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை’ என்றார்.
    பணியிடத்தில் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைக்க ராஜ்நாத் சிங் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #GoM #sexualharassment #workplacesexualharassment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் சந்தித்துவரும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #மீடூ பிரச்சாரம் தற்போது வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக, ஒரு பெண் பத்திரிகையாளர் மத்திய இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மீது அளித்த புகாரால் அவர் மந்திரி பதவியை துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    இப்படி பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், பணியிடத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கவும், தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக வலுவான நெறிமுறைகளை பரிந்துரைக்கவும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் 9 நபர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். #GoM #sexualharassment  #workplacesexualharassment 
    ×