என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 104787
நீங்கள் தேடியது "ஹூவாய்"
ஹூவாய் நிறுவனம் 2019 மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MateBookXPro
ஹூவாய் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லேப்டாப்பின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 மாடலில் 13.9 இன்ச் 3K LTPS ஃபுல்வியூ டிஸ்ப்ளே, 14.6 அளவில் மெல்லிய மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் மற்றும் NVIDIA GeForce MX250 GPU கிராஃபிக்ஸ் வசதியுடன் வருகின்றது.
புதிய லேப்டாப்பின் பவர் பட்டனில் ஹூவாய் கைரேகை சென்சார் வழங்கியிருக்கிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் அதிவேக வைபை வசதி, ஹூவாய் ஷேர் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு ஹூவாய் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களிடையே புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்யூமென்ட்களை அதிவேகமாகவும், மிக எளிமையாகவும் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:
- 13.9 இன்ச் 3000x2000 பிக்சல் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
- 2 ஜி.பி. GDDR5 NVIDIA GeForce MX250 GPU
- இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
- 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3 2133MHz ரேம்
- 512 ஜி.பி. / 1000 ஜி.பி. NVMe PCIe எஸ்.எஸ்.டி.
- விண்டோஸ் 10 ஹோம்
- 1 எம்.பி. ஹெச்.டி. வெப்கேமரா
- பவர் பட்டனில் கைரேகை சென்சார்
- வைபை 802.11ac 2.4 GHz 300 Mbps, 5 GHz 1733 Mbps, 2 x 2 MIMO
- ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி. டைப்-சி
- குவாட் டிஜிட்டல் மைக்ரோபோன்கள்
- குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
- 57.4 Wh பேட்டரி
ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 லேப்டாப் மிஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 1599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,28,820) என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை 1999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,61,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #ConnectingTheFuture
ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரை ஹூவாயின் மேட் எக்ஸ் உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு பிரைமரி கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். 8 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் நாட்ச் போன்ற இடையூறின்றி ஃபுல் டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது.
மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உலகில் முதன் முறையாக 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.
ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். இத்துடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஹூவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே
- திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே
- மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் 25:9. 2480x892 பிக்சல் டிஸ்ப்ளே
- 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம்
- பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர்
- 8 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதி
- கைரேகை சென்சார்
ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இன்டர்ஸ்டெலார் புளு என ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,79,579) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் பிராண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. #Honor8C #Smartphone
ஹூவாய் ஹானர் பிராண்டு இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக அறிமுகமான ஹானர் 8சி 32 ஜி.பி. மாடல் தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஹானர் 8சி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதிகள், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகைகள்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,450 மதிப்புள்ள பலன்கள் மற்றும் 100 ஜி.பி. 4ஜி டேட்டா
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி
மாத தவணையில் அமேசான் பே பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் தள்ளுபடி
தேர்வு செய்யப்பட்ட வங்கி சார்பில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஹானர் 8சி சிறப்பம்சங்கள்
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. #Huawei
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், அமெரிக்க அதிகாரிகள் சுமத்திய அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்ததோடு எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.
ஹூவாய் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித்துறை எழுப்பியது. அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்ற சம்பவங்களில் ஹூவாய் நிறுவன மூத்த நிதி அலுவலர் மெங் வான்சௌக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
ஹூவாய் நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வங்கி ஊழல், விதிமுறை மீறல் மற்றும் அமெரிக்க அரசிடம் போலி அறிக்கைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஹூவாய் நிறுவனம், டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், "ஹூவாய் நிறுவனமோ மற்றும் அதன் துணை நிறுவனங்களோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் ஹூவாய் மூத்த நிதி அலுவலர் மெங் எவ்வித தவறும் செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றங்களும் இதேபோன்ற முடிவை எட்டும் என நம்புகிறோம்," என தெரிவித்துள்ளது. #Huawei
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #HONORView20 #HONOR
ஹூவாய் ஹானர் பிரான்டு ஏற்கவே அறிவித்தப்படி தனது வியூ20 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வியூ20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.
கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். வசதி கொண்டுள்ளது.
இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.
கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் வியூ20 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 1080x2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- மாலி-G76MP10 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
- TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் வியூ20 விலை ரூ.37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை இன்று நள்ளிரவு துவங்குகிறது. #HONORView20 #HONOR #Smartphone
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. #HONOR10Lite #smartphone
ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 24 எம்.பி. முன்பக்க கேமரா, பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ், கைரேகை சென்சார் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி G54 MP4 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- EMUI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் ரூ.2800 மதிப்புள்ள க்ளியர்ட்ரிப் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய வை9 2019 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HuaweiY9 #smartphone
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் வை9 2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம், 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இரு கேமரா சென்சார்களிலும் ஏ.ஐ. அ்சஙங்கள் வழங்கப்பட்டுள்ளது. வளைந்த 3D ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹூவாய் வை9 2019 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Honor #Smartphone
ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட ஹானர் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் EMUI 9.0 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சீன் டிடெக்ஷன் வசதி வழங்கப்படலாம்.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக புதிய ஹானர் 10 லைட் வெளியாக இருக்கிறது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் புதிய சாதனத்திற்கான காப்புரிமை விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹானர் 10 லைட் சார்ந்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் வை9 (2019) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹானர் 10 லைட் போன்றே ஹூவாய் வை9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது.
ஹூவாய் வை9 சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ஸ்கிரீன், கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் ஏ.ஐ. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. #Huawei #Smartphone
ஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய வை7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வை7 ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. #Huawei #Smartphone
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வை7 ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. #Huawei #Smartphone
ஹூவாய் நிறுவனத்தின் வை சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Huawei #Smartphones
ஹூவாய் நிறுவனத்தின் வை7 2019 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் என்ஜாய் 9 ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷன் ஆகும்.
ஹூவாய் என்ஜாய் 9 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, போர்டிரெயிட் மோட், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வை7 2019 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அரோரா புளு, கோரல் ரெட் மற்றும் அரோரா வைலட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹூவாய் நிறுவனம் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் வி20 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. #HonorV20 #smartphone
ஹூவாய் ஹானர் பிரான்டு வி20 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய வி20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.
கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். வசதி கொண்டுள்ளது.
இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.
கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் வி20 சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 1080x2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- மாலி-G76MP10 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
- TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செ்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹானர் வி20 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,428) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மொஷினோ (MOSCHINO) எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் ஹானர் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் அம்சங்களுடன் புதிய ஹானர் பேன்ட் 4 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. #HonorBand4
ஹுவாய் நிறுவனத்தின் துணை பிரான்டு ஹானர் இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் பேன்ட் 3 சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் ஹானர் பேன்ட் 4 மாடலில் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5D வளைந்த கிளாஸ் தொடு திரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன், தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார் மற்றும் ஸ்விம் ஸ்டிரோக் அங்கீகார வசதியுடன் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
ஹானர் பேன்ட் 4 சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சி.பி.சி. (cardiopulmonary coupled dynamics) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்துவோரின் உறக்கத்தை முழுமையாக டிராக் செய்து உறக்க முறை பற்றிய முழு விவரங்களை வழங்கும். ஆழ்ந்த உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்து அதற்கு ஏற்ப பரிந்துரை வழங்கும்.
இத்துடன் ஹூவாய் ட்ரூசீன் 2.0 இதய துடிப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின் இதய துடிப்புக்களை 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கும்.
ஹானர் பேன்ட் 4 சிறப்பம்சங்கள்:
- 0.95 இன்ச் AMOLED தொடு திரை டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2 LE, ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும்
- பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்டரி ரிமைன்டர்
- 6-ஆக்சிஸ் சென்சார், இன்ஃப்ராரெட் வியரிங் டிடெக்ஷன் சென்சார்
- தொடர் இதய துடிப்பு சென்சார்
- கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன், இன்கமிங் கால் மியூட் வசதி
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- என்.எஃப்.சி. வசதி
- 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் பேன்ட் 4 சாதனம் மெடியோரைட் பிளாக், மிட்நைட் நேவி மற்றும் தஹிலா பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 விலை ரூ.2,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 18) முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #HonorBand4
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X