என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அயனாவரம்"
அம்பத்தூர்:
அயனாவரம் பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் துரைசாமி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாவிலிருந்த சீட்டு பணம் ரூ.40,000 மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் கோபி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி உள்ள கடைகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் வியாபாரிகளிடடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் மணவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). மாநகர அரசு பஸ் கண்டக்டர்.
நேற்று இரவு சென்னை திரு.வி.க.நகரில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம் சென்ற மாநகர பஸ்சை டிரைவர் கோபிநாத் ஓட்டினார். இதில் காஜாமைதீன் கண்டக்டராக பணிபுரிந்தார்.
இரவு 10.30 மணி அளவில் இந்த பஸ் அயனாவரம் சயானி பஸ்நிறுத்தம் அருகே சென்றது. அப்போது கண்டக்டர் காஜாமைதீன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். வலிப்பும் ஏற்பட்டது.
உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கோபிநாத், மயங்கி விழுந்த கண்டக்டர் காஜா மைதீனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காஜா மைதீனை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஓடும் பஸ்சில் கண்டக்டர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
பெரம்பூர்:
முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். டாக்டர். இவர் நேற்று இரவு காரில் ஐ.சி.எப். மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை இடித்தனர். இதில் லோகேசுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் லோகேஷ் காரை எடுத்துக்கொண்டு சென்றார். அயனாவரம் சிக்னலில் கார் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் லோகேசை தாக்கி ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து லோகேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
அம்பத்தூர்:
அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மகள் ஜான்சிராணி (23). புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், அயனாவரத்தை சேர்ந்த ஜோஸ்வாவும் காதலித்து வந்தனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு நேற்று மாலை ஐ.சி.எப்.பில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஜான்சிராணி பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அயனாவரம் கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் என்ற ரவுடியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வாலிபர் சஞ்சீவ் குமார் (21) கைது செய்யப்பட்டார்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கத்தியுடன் பதுங்கி இருந்த சஞ்சீவ் குமாரை மடக்கி பிடித்து கைது செய்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக்கை, சஞ்சீவ்குமார் அரிவாளால் வெட்டிய போது அவரது வளர்ப்பு நாய்களே உயிரை காப்பாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
அயனாவரம் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போதுதான் கார்த்திக்கை சஞ்சீவ்குமார், தனது கூட்டாளி ஒருவருடன் வந்து கொலை செய்ய முயற்சி செய்தான். அப்போது கார்த்திக்கை இருவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை கார்த்திக்கின் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பார்த்துவிட்டன. உடனடியாக அங்கிருந்த 2 நாய்களும் சஞ்சீவ் குமாரையும், அவனது கூட்டாளியையும் கடிப்பதற்காக ஓடின. இதனால் பயந்துபோன இருவரும் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
நாய்கள் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால் கார்த்திக் உயிர் தப்பி இருக்க மாட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆசையாய் வளர்த்த முதலாளியை விசுவாசத்துடன் செயல்பட்டு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்