என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"
உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளியும் தேவையில்லை என்றும், தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக்கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன் என்று கூறினார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஜாமீன் பெற முயன்றார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபடி லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கொள்கைகள், கோட்பாடுகள் என்று எதையும் பின்பற்றாத நீங்கள் (நிதிஷ்குமார்) ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் பயணித்து வருகிறீர்கள்.
தேர்தல் பிரசாரத்தில் என்னையும், எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். உங்கள் தேர்தல் பிரசாரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஏழைகளின் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் லாந்தர் விளக்கு சின்னத்தை நாங்கள் பெற்று இருக்கிறோம். அது அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் சின்னம்.
ஆனால் உங்கள் கட்சியின் சின்னமான அம்பு, வன்முறையின் ஆயுதம். பீகாரில் உங்கள் ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
அதை எதிரொலிப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இது தொடர்பாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் கூறும்போது, “சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக கடிதம் எழுதுவது விதிமீறல். இது தொடர்பாக ராஞ்சி சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த காப்பகத்துக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிதி உதவி அளித்த தகவல் வெளியானது. அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பீகார் காப்பக விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ராஷ்டீரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி.) தலைவர் உபேந்திரா குஷ்வாகா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காப்பக விவகாரம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருக்கக் கூடாது. இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவியில் இருந்தால் விசாரணை நேர்மையாக நடக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உபேந்திரா பா.ஜனதா, நிதிஷ்குமார் கூட்டணியில் தான் இருந்தார். சமீபத்தில் தான் அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார். #NitishKumar
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது.
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் தான் பெரிய கட்சி என்பதால் மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் பாஜகவும் கணிசமான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி செயல்பாடுகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். #GeneralElections2019 #NitishKumar #AmitShah
2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
பஞ்சாப்பில் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஆட்சியை இழந்த நிலையில் மராட்டியத்தில் சிவசேனா கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அமித்ஷா சமரசம் செய்த பின்பும் மோதல் போக்கு நீடிக்கிறது.
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜனதா மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. அங்கு லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார், சில மாதங்களிலேயே லாலுவை உதறி விட்டு பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்கிறார்.
பா.ஜனதாவின் நீண்ட கால கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2009 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் 25 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றது.
2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜனதா மோடி அலையால் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தது.
அதன் பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார். இந்த கூட்டணி முறிந்ததால் மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரும் முடிவை எடுத்துள்ளார். #BJP #ParliamentElection #Amitshah
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போதும் பலத்து பாதுகாப்பு வசதி அளிக்கப்பட்டு உள்ளது. அவரது அலுவலக வீடு பாட்னாவில் உள்ள எண்.1 அனெய் மார்க் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். தற்போது கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி சென்று உள்ளார்.
இந்த நிலையில் பீகார் மாநில சிறப்பு போலீஸ் அதிகாரி முதல்-மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது முதல்-மந்திரி வீட்டில் இருந்த போலீசாரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar #tamilnews
பாட்னா:
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.
அதன்பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற பா.ஜனதா நிதிஷ்குமாருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் மந்திரிகளாக இடம் பெற்று இருந்த லல்லு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மகன்கள் இருவரும் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள்.
நேற்று பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 22-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாட்னாவில் நடந்த பேரணியில் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் கலந்து கொண்டனர்.
அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் நிதிஷ்குமாருடன் லல்லுபிரசாத் யாதவ் கூட்டணி அமைத்தார். நிதிஷ்குமாரை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைக்க பல தியாகங்கள் செய்தார். நிதிஷ்குமார் ஏதாவது தியாகம் செய்துள்ளாரா?
இப்போது நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. நீங்கள் ஓய்வு பெறுங்கள் அல்லது மக்கள் உங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவார்கள். 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்னை மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து உள்ளார்கள்.
இப்போது எனக்கு நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவி தருவதாக கூறினாலும் அதை நான் ஏற்கமாட்டேன். மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளது.
நிதிஷ்குமாருக்கு அரசியல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள்தான் அரசியலில் நீடிக்க முடியும். வருகிற தேர்தலில் சமதர்மத்துக்கும், ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி.
பீகார் சட்டசபையின் பதவி காலம் 2020-ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து முன்கூட்டியே பீகார் சட்டசபைக்கும் தேர்தல் வரும். தற்போது நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறார். அவர் அங்கு இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார் #Tejaswi #nitishkumar #lalu
பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் தொடக்கத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்தார். பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்று ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார். அவரே மீண்டும் முதல்-மந்திரி ஆனார்.
இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே இந்த கூட்டணியில் இருந்து விலகினார். மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார். சமீபத்தில் பா.ஜனதா நடத்திய சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
மும்பையில் இருதய நோய் சிகிச்சை ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் லாலு பிரசாத் யாதவுடன் போனில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவரது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் அவர் லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் மீண்டும் இணைவது உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நிதிஷ்குமாரின் இந்த முடிவை ராஷ்டீரிய ஜனதா தளமும், காங்கிரசும் வரவேற்றுள்ளன. ஆனால் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #BiharCM #NitishKumar #LaluPrasadYadav
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்