search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிஷ்கின்"

    ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 14-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடித்திருக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

    டூலெட் படத்தை இயக்கிய செழியன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரில்லர் கதையில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
    ஒளிப்பதிவாளர் செழியன் டூலெட் படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களே கிடைத்தது.

    இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலையில் செழியன் தற்போது ஈடுபட்டுள்ளார். த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவருமே இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர்.



    கொலை பின்னணியில் இருக்கும் மர்மத்தை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu
    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

    இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.



    'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    திரையுலகில் 25 வருடங்களை கடந்த இயக்குநர் ஷங்கரை கவுரவிக்கும் விதமாக பிரபல இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். #Shankar25 #Mysskin
    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் இவரது படங்கள் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.

    இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் 25 என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினர்.



    இந்த நிலையில், ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Shankar #Shankar25 #Mysskin

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. #Thupparivaalan2 #Vishal
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்பே கூறி வந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.



    விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படம் வருகிற மே 19-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதுதவிர புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் அதனை மறுத்துள்ளனர். #Thupparivaalan2 #Vishal #Mysskin

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview
    பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.

    மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.



    மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.

    இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.



    கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.



    சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.



    நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

    தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 



    படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். #SuperDeluxe
    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



    படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முன்னோட்டம். #SuperDeluxe #VijaySethupathi
    கினோ ஃபெஸ்ட் நிறுவனம் சார்பில் தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

    விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், விஜய் ராம், நவீன் மற்றும் ஜெயந்த், மனுஷ்யபுத்திரன், அப்துல் ஜாபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பி.எஸ்.வினோத், நிரவ் ஷா, இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - சத்தியராஜ் நடராஜன், கலை - விஜய் ஆதிநாதன், ஒலி வடிவமைப்பு - தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பு - எஸ்.டி.எழில்மதி, தயாரிப்பு மேற்பார்வை - அருண் அருணாச்சலம், சிறப்பு ஒலி வடிவமைப்பு - அருண் சீனு, நிர்வாக தயாரிப்பு - சத்தியராஜ் நடராஜன், சுவாதி ரகுராமன், எழுத்து - நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், மிஷ்கின், எழுத்து, இயக்கம், தயாரிப்பு - தியாகராஜன் குமாரராஜா.



    படம் பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

    ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும் என்றார். 

    சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. #SuperDeluxe #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    சூப்பர் டீலக்ஸ் டிரைலர்:

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி அவரது முதல் காட்சிக்கு 80 டேக்குகள் வரை எடுத்ததாக விஜய் சேதுபதி கூறியதாக ரம்யா கிருஷ்ணன் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 29ந்தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியது இல்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. 

    முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்...’ என்று கூறினார்.



    முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி புரிந்தது”. இவ்வாறு அவர் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadFaasil #RamyaKrishnan

    சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி பேசும் ‘ஒரு நாள்... ஒரு ஆள்...’ என்ற வசனத்தின் டப்பிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    இதில் ஒரு நாள்... ஒரு ஆள்... என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார். தற்போது அந்த வசனத்தை டப்பிங்கில் எப்படி பேசினார் என்ற வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வசனத்தை சற்றும் தளராத மறுபடியும் மறுபடியும் படிக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. #SuperDeluxe #VijaySethupathi #Samantha 
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29-ல் ரிலீசாகிறது. செம டிரைலர் வெகு விரைவில், நாளை வெளியாகிறது என்று கூறியுள்ளார்.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் விநியோக உரிமையை ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil

    ×