search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரன்"

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

    அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

    பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.



    பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #KennedyClub #SasiKumar #Bharathiraja

    சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் - நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜீனியஸ்' படத்தின் முன்னோட்டம். #Genius #Roshan
    சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரோஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஜீனியஸ்'.

    ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், யோகேஷ், மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, படத்தொகுப்பு - தியாகு, ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், கலை இயக்குனர் - ஜி.சி.ஆனந்தன், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், நடனம் - ஷோபி, லலிதா ஷோபி, உடை - ஆர்.நிருபமா ரகுபதி, தயாரிப்பு - ரோஷன், இணை தயாரிப்பு - ராம், சீனு, பாலாஜி, சாமி, ஜகதீஷ், குணா, தயாரிப்பு நிறுவனம் - சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ், வசனம் - அமுதேஸ்வர், எழுத்து, இயக்கம் - சுசீந்திரன்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குனர் சுசீந்தரன் பேசியதாவது, 



    நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. ஜுனியஸ் கதையாக உருவாகிய பிறகு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களால் இதில் நடிக்க முடியவில்லை.

    கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே படத்தின் பாதிப்பில் தான் நான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்த படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.

    படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Genius #Roshan

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன், டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுசீந்திரன் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று துவங்கியிருக்கிறது. 

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

    இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.



    அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #Champion

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SasiKumar #BharathiRaja
    இயக்குனர் பாரதிராஜா சமீப காலமாக படங்களை இயக்கு வதைவிட நடிப்பதில் அதிகக் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். 

    சசிகுமார் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். பாரதிராஜா, சசிக்குமார், சுசீந்திரன் ஆகியோர் இணைந்த இந்த கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு படத்தில் நடித்ததன் வாயிலாக பாரதிராஜா சிறப்பு கவனம் பெற்றிருந்தார்.

    சுசீந்திரன் இயக்கத்தில் ஜுனியஸ் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சுசீந்திரன் தற்போது சாம்பியன் என்ற படத்தை இயக்கி வருகிறார். #SasiKumar #BharathiRaja

    நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius
    இயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் ‘நான் மகான் அல்ல’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். 

    கவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது. 

    சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார். 



    சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #SuttuPidikkaUtharavu
    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்தை ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

    செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். 



    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை முக்கியமான பிரபலம் ஒருவர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran
    விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. 

    இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். 

    இவ்வாறு கூறியிருக்கிறார். 



    இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Champion #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த ஸ்போர்ஸ் படத்தை சுசீந்திரன் இன்று துவங்கியுள்ளார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.  இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    `இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார். #Champion #Suseenthiran


    ×